Published:Updated:

OTT கார்னர்

Home - MOVIE
பிரீமியம் ஸ்டோரி
Home - MOVIE

தந்தையாக வரும் இந்திரன்ஸ் வாஞ்சையும் நெகிழ்ச்சியுமாக தான் ஒரு மகத்தான கலைஞன் என மீண்டுமொரு முறை நிரூபிக்கிறார்.

OTT கார்னர்

தந்தையாக வரும் இந்திரன்ஸ் வாஞ்சையும் நெகிழ்ச்சியுமாக தான் ஒரு மகத்தான கலைஞன் என மீண்டுமொரு முறை நிரூபிக்கிறார்.

Published:Updated:
Home - MOVIE
பிரீமியம் ஸ்டோரி
Home - MOVIE

Home - MOVIE

மலையாள தேசத்திலிருந்து மற்றுமொரு நல்லுணர்வுத் திரைப்படம். நேரத்தை மிச்சப்படுத்த அறிமுகமான ஸ்மார்ட்போன்களே நம் காலத்தை எப்படித் திருடுகின்றன என்பதை அழுத்தமாகப் பேசும் அமேசான் ப்ரைம் படம். அடுத்த படத்திற்கான கதையை எழுத முடியாமல் தவிக்கும் மூத்த மகன், சதா சர்வகாலமும் போனில் மூழ்கியிருக்கும் இரண்டாவது மகன், இவர்களுக்கிடையே ஒரு சாமானியத் தந்தையின் மனப்போராட்டமே கதை. ‘இணையம் இருக்க பயமேன்’ என இறுமாப்பில் திரியும் இந்தத் தலைமுறை, முந்தின தலைமுறையின் அனுபவங்களை முற்றாக ஒதுக்கித் தள்ளும் அணுகுமுறையையும், இதனால் போன தலைமுறைக்கு ஏற்படும் அடையாளச் சிக்கலையும் சமமாகப் பேசி கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ரோஜின் தாமஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

தந்தையாக வரும் இந்திரன்ஸ் வாஞ்சையும் நெகிழ்ச்சியுமாக தான் ஒரு மகத்தான கலைஞன் என மீண்டுமொரு முறை நிரூபிக்கிறார். ஸ்ரீநாத் பாஸி, குட்டியம்மாவாக வரும் மஞ்சு, இளைய மகன் நஸ்லான் என கதாபாத்திரத் தேர்வுகளும் மிகப் பொருத்தம். கொஞ்சம் விக்ரமன் பட சாயல்கள் இருந்தாலும், வீக் எண்டில் குடும்பமாகப் பார்த்துச் சிரிக்க, உருகி நெகிழ நல்லதொரு சாய்ஸ் இந்த ‘ஹோம்.’

OTT கார்னர்
OTT கார்னர்

BRAND NEW CHERRY FLAVOR - SERIES

குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதை முழு நீளத் திரைப்படமாக மாற்ற முயல்கிறார் லீசா. எல்லாம் கூடிவரும் நேரத்தில், லீசாவை நீக்கிவிடுகிறார் படத்தின் தயாரிப்பாளர். திரைப்படக் கனவு மாந்திரீக மந்திரம், சூனியம் வைப்பதில் சென்று முடிகிறது. வினோதமான ஹாரர் வெப்சீரிஸாக நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது BRAND NEW CHERRY FLAVOR. லீசாவாக ரோசா சலாசர் மிரட்டியிருக்கிறார். வித்தியாசமான லைட்டிங், எடிட், குரூரமான ஹாரர் என நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் பலரின் உழைப்பு வியக்கவைக்கிறது. யார் பேய், யார் நல்லவர் போன்ற கேள்விகளுக்கான விடையைக் கடைசி வரை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்கள். அதே சமயம், அருவருக்கத்தக்க ஹாரர் காட்சிகள் பல எபிசோடுகளில் இடம்பெறுவதால், குடும்பத்துடன் பார்க்க உகந்ததில்லை. எல்லோருக்குமான சீரிஸ் அல்ல; Strictly 18+

OTT கார்னர்
OTT கார்னர்

SPIN - MOVIE

தன் தந்தையின் உணவகத்தில் அவருக்கு உதவிகரமாக இருக்கும் ரியா எப்படித் தன் கனவை நனவாக்குகிறார் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் SPIN திரைப்படம். அம்மாவின் மறைவுக்குப்பின் ரியா, ரியாவின் தம்பி, ரியாவின் பாட்டி என ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒரே உணவகத்தில் வேலை பார்க்கிறார்கள். ரியாவுக்கு இயல்பிலேயே வரும் இசை அறிவும், அவருக்குப் பரிசளிக்கும் துரோகங்களும் பாராட்டுகளும்தான் திரைப்படம். பூமிகாவின் நாயகிதான் இதிலும் நாயகி. அதாவது அவந்திகா வந்தனபூதான் ரியாவாக நடித்திருக்கிறார். கண்களில் நீர் நிரம்ப வைத்துக்கொண்டு நடிக்கும் காட்சிகளில் எமோஷனில் பிரமாதப்படுத்துகிறார் அவந்திகா. ரியாவின் கண்டிப்பான தந்தையாக அபய் தியோல். மற்ற அனைவரும் அமெரிக்க நடிகர்கள்தான். குழந்தைகளின் மன ஓட்டங்களை மையப்படுத்தி இதை இயக்கியிருக்கிறார் மஞ்சரி. வார இறுதியில் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க ஒரு யதார்த்த சினிமாவாக SPIN இருக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

பூமிகா - MOVIE

ஒரு பாழடைந்த வீட்டுக்குள் தங்கும் குடும்பம், அவர்களைத் துரத்தும் பேய் என வழக்கமான ஹாரர் டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், ஆள் அரவமில்லாத ஸ்கூல் கேம்பஸ், ஆட்டிசம் பாதித்த குழந்தையின் பிளாஷ்பேக், சூழலியல் சார்ந்த மெசேஜ், சுயநலமிக்க மனிதர்களின் வீழ்ச்சி என வேறொரு லைனில் நகர்கிறது நெட்ப்ளிக்ஸின் ‘பூமிகா.’ ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன், நக்கலைட்ஸ் பிரசன்னா பாலசந்திரன் மட்டுமே நமக்குத் தெரிந்த முகங்களாக இருக்க, முழுக்க முழுக்க புது டீமுடன் களமிறங்கியிருக்கிறார் ‘நவரசா’வின் ‘இன்மை’ புகழ் ரத்திந்திரன் R.பிரசாத். இரண்டாம் பாதி முழுக்கவே படத்தைத் தாங்கி நிற்பது ‘பூமிகா’வாக வரும் அவந்திகா வந்தனபூதான். பேய்ப்படத்துக்கான த்ரில்லிங் முதல் அரை மணி நேரத்திலேயே காலியாகிவிடுகிறது. இரண்டாம் பாதியில் முக்கியமான மெசேஜ் ஒன்றைச் சொல்லி அதைக் கதையுடன் துருத்தாமல் இணைத்திருப்பது பக்கா ஸ்கெட்ச்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism