Published:Updated:

OTT கார்னர்

Bhamakalapam
பிரீமியம் ஸ்டோரி
Bhamakalapam

அக்கம்பக்கத்தில் நடப்பதைப் புறணி பேசித் திரியும் பிரியாமணி அதனாலேயே ஒரு பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

OTT கார்னர்

அக்கம்பக்கத்தில் நடப்பதைப் புறணி பேசித் திரியும் பிரியாமணி அதனாலேயே ஒரு பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

Published:Updated:
Bhamakalapam
பிரீமியம் ஸ்டோரி
Bhamakalapam
OTT கார்னர்

விலங்கு - SERIES

கொலை செய்யப்பட்டுக் கிடத்தப்பட்டிருக்கும் பிணமும் அதன்வழி அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் வேம்பூர் கிராமத்தைப் பெருஞ்சிக்கலுக்குள் தள்ளுகின்றன. கிடைக்கும் க்ளூக்களை வைத்து யார் குற்றவாளி என ஒரு காவல் நிலையம் துப்பறியும் கதைதான் ஜீ5-ல் வெப் சீரிஸாக வெளியாகியிருக்கும் விலங்கின் ஒன்லைன். விமல், பால சரவணன், மனோகர், முனீஸ்காந்த் என காவல்துறை அதிகாரிகளாக வரும் ஒவ்வொருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பால சரவணனுக்கு இது முற்றிலும் மாறுபட்டதொரு வேடம். அதை அவ்வளவு கச்சிதமாகச் செய்திருக்கிறார். வெவ்வேறு கிளைக்கதைகள், அவற்றைத் தொட்டு நகரும் மையக்கதை, யார் கொலையாளி எனத் தெரிந்தபின்னும் அதற்கான ஆதாரங்களுக்காக சஸ்பென்ஸை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை கொண்டு சென்றது என தமிழ் வெப் சீரிஸ் வரலாற்றில் நல்லதொரு படைப்பாக வந்தமர்கிறது விலங்கு. வசவுச் சொற்கள் மிகவும் அதிகம் என்பதால் நிச்சயம் வயது வந்தவர்கள் மட்டும் பார்ப்பது உசிதம்.

OTT கார்னர்

Bhamakalapam - MOVIE

பிரியாமணி நடிப்பில் `ஆஹா' தளத்தில் வெளியாகியிருக்கிறது இந்தத் தெலுங்குப்படம். அக்கம்பக்கத்தில் நடப்பதைப் புறணி பேசித் திரியும் பிரியாமணி அதனாலேயே ஒரு பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து வெளிப்பட முயலும்போது இன்னொரு சிக்கல். இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கும் அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதைக் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஒரே நாளில், ஒரே இடத்தில் நடக்கும் கதை. ஆனால் அதை போரடிக்காமல் காட்ட காமெடியும் ட்விஸ்ட்களும் உதவுகின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றையாளாய் படத்தை சுலபமாகச் சுமக்கிறார் பிரியாமணி. லாஜிக்கையெல்லாம் கண்டுகொள்ளாமல் கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் ரத்தம் என ஒரு படம் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த ஆடு - புலி ஆட்டத்தை ப்ளே செய்து பார்க்கலாம். ஆனால் படம் நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டும்!

OTT கார்னர்

A Thursday - MOVIE

யாமி கெளதம், நேஹா துபியாவோடு டிம்பிள் கபாடியா, அதுல் குல்கர்னி போன்ற பாலிவுட் சீனியர்களும் கைகோக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். ப்ளே ஸ்கூல் வைத்திருக்கும் யாமி கெளதம் ஒருநாள் திடீரென அந்தக் குழந்தைகளைக் கடத்தி வைத்துக்கொண்டு சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதற்கு அரசு என்ன பதில் கொடுத்தது என்பதை த்ரில்லராகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். முதல் 20 நிமிடங்கள் பரபரவென நகரும் திரைக்கதை கொஞ்சம் கொஞ்சமாக வேகமிழந்து க்ளைமாக்ஸ் வரும்போது அலுப்புத்தட்டிவிடுகிறது. படம் பார்க்கும் நாம் யூகித்துவிடும் விஷயங்களைக்கூட படத்தில் வரும் போலீஸ்காரர்கள் போராடித்தான் கண்டுபிடிக்கிறார்கள். `எல்லாம் மெசேஜ் சொல்லத்தான்' என கடைசியில் அரசியல் பேசினாலும், அதைக் குழந்தைகளை முன்வைத்துப் பேசியதுதான் படத்தின் சிக்கல்.

OTT கார்னர்

The Privilege - MOVIE

பணக்காரர்கள் படிக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் ஃபின்னுக்குத் தன்னைச் சுற்றி அமானுஷ்யமான நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாகத் தோன்றுகிறது. சிறு வயதில் அவன் சந்தித்த ஓர் இழப்பு, மீண்டும் அதே பாணியில் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தென்பட, தன் குடும்ப உறுப்பினர்களையே அவன் சந்தேகிக்கத் தொடங்குகிறான். உண்மையைக் கண்டறிய அவன் நண்பர்கள் உதவ, ஃபின் ரகசியங்களைக் கண்டறிந்தானா, இல்லையா என்பதே நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ஜெர்மன் படத்தின் கதை. நாயகனாக வரும் Max Schimmelpfennig-இன் நடிப்பு, அந்தக் கதாபாத்திரம் படும் அவஸ்தைகளோடு நம்மைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள வைக்கிறது. மருத்துவ அறிவியல் கலந்த ஹாரர் கதையாக நன்றாகவே தொடங்கும் படம், பின்னர் சாதாரண கூடுவிட்டுக் கூடு பாயும் பேய்களின் கதையாகத் தன்னைச் சுருக்கிக்கொள்வது சறுக்கல். மற்றபடி ஒரு சுவாரஸ்ய ஹாரர் த்ரில்லராக படம் திருப்திப்படுத்துகிறது.