Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

நேஷனல் ஜியாக்ரபிக் குழுமம் அவ்வப்போது பல்லுயிர் ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வதுண்டு

OTT கார்னர்

நேஷனல் ஜியாக்ரபிக் குழுமம் அவ்வப்போது பல்லுயிர் ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வதுண்டு

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Moon Knight - Series

ஸ்டீவன் க்ரான்ட் தனக்கு எகிப்தியக் கடவுளான கான்ஷுவின் சக்திகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்கிறான். கூடவே, அவன் ஒருவனல்ல, பல்வகை ஆளுமை நோய் (Dissociative identity disorder) கொண்ட இருவன் என்பதையும், மற்றொருவனான மார்க், ஒரு கூலிப்படை ஆள் என்பதையும் புரிந்துகொள்கிறான். எகிப்தியக் கடவுள்களின் அவதாரங்களாக மார்க் போன்ற மனிதர்கள் உலாவர, அடைத்து வைக்கப்பட்ட ஆபத்தானதொரு கடவுளை விடுவிக்க நினைக்கிறான் வில்லன் ஹாரோ. அவனைத் தடுத்து இப்பூமியை மார்க் மீட்டானா என்பதே இதன் கதை. இத்தொடரின் பெரிய பலம் நாயகன் ஆஸ்கர் ஐசக். ஓர் உடலுக்குள் இருவர் என்பதைக் காட்ட, உடல்மொழி தொடங்கி, வார்த்தை உச்சரிப்புகள் வரை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். காதலி லைலாவாக வரும் மே கலாமாவி, வில்லன் ஹாரோவாக வரும் ஈத்தன் ஹாக் இருவருமே தொடருக்கு அசுர பலம் சேர்த்திருக்கிறார்கள். மார்வெல்லின் தொடர்கள் தொடர்ந்து சிறந்த கதையம்சத்துடன் தயாரிக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸ் சற்றே மெதுவாக நகர்ந்தாலும், சூப்பர்ஹீரோ விரும்பிகளுக்கு செம ட்ரீட்!

OTT கார்னர்
OTT கார்னர்

Yaksha: Ruthless - Operations - Movie

கொரோனா காரணமாக உலகமெங்கும் படப்பிடிப்புகளும் ரிலீஸ்களும் தடைபட்டபோது அதில் பாதிக்கப்பட்ட தென்கொரியப் படங்களுள் இந்த யக்‌ஷாவும் ஒன்று. ஒருவழியாய் இப்போது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. தென் கொரியா, வட கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் அரசியல்ரீதியாக முக்கிய இடமாகத் திகழும் சீனாவின் கிழக்குப் பிரதேசத்தில் மூன்று நாட்டு உளவாளிகளும் மாறி மாறி மோதிக்கொள்கிறார்கள். இறுதியில் தென்கொரிய உளவுப்படை எப்படி சூழ்ச்சிகளை எல்லாம் களைந்து எதிரிகளை வெல்கிறது என்பதுதான் கதை. வழக்கம்போல வடகொரியாவை வைத்துக் கதை நகர்த்தாமல் ஜப்பானை ஆட்டத்திற்குள் இழுத்துவந்த வகையில் ரசிக்கவைக்கிறது படம். யூகிக்கக்கூடிய திருப்பங்கள்தான் என்றாலும் பரபர ஆக்‌ஷன், விறுவிறு காட்சியமைப்புகள் என ஜெட் வேகத்தில் போவதால் போரடிக்காமல் இருப்பது ப்ளஸ். நீளம் மைனஸ். த்ரில்லர் பட விரும்பிகள் தாராளமாய் இந்தப் படத்தை செலக்ட் பண்ணலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Explorer: The Last Tepui - Documentary

நேஷனல் ஜியாக்ரபிக் குழுமம் அவ்வப்போது பல்லுயிர் ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வதுண்டு. அப்படி பல்லாண்டுகாலமாய் நேட் ஜியோவோடு பயணித்துவரும் ஆராய்ச்சியாளரான 80 வயது ப்ரூஸ் மீன்ஸ் இறுதியாய் ஒருமுறை கயானா நாட்டின் புகழ்பெற்ற ‘Tepui’ எனப்படும் பெரும் பாறைப் பிரதேசத்திற்கு ஆய்விற்காகச் செல்ல விரும்புகிறார். மிரட்டும் அமேசான் காடுகளின் தட்பவெப்பநிலை ஒருபக்கம், ப்ரூஸின் முதுமையை சோதிக்கும் மேடும் பள்ளமுமான நிலப்பரப்புகள் ஒரு பக்கம் - இவற்றைத் தாண்டி எப்படி ஒரு மலையேற்றக் குழு ப்ரூஸின் ஆசையை நிறைவேற்ற முயல்கிறது என்பது பற்றிய ஹாட்ஸ்டார் ஆவணப்படம்தான் இது. விரலளவுகூட இருந்திடாத ஒரு சின்ன உயிர் மாதிரிக்கு ஆராய்ச்சியாளர்கள் எப்படி தங்கள் உயிரை ஒவ்வொருமுறையும் பணயம் வைக்கிறார்கள் என்பதைப் பார்ப்பவர்களுக்கு அறிவியல் மேல் புதிதாய் மரியாதையும் ஆர்வமும் பிறக்கக்கூடும். ‘இன்னும் சில நாள்களில் உலகிலிருந்து விடைபெற்றுவிடுவேன். அதற்குள் இதை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்’ என ப்ரூஸ் மெளனமாய் காட்டை அவதானிக்கும்போது நமக்கும் சிலிர்க்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Clifford the Big Red Dog - Movie

12 வயதுச் சிறுமி ஒருத்தி, ஒரு நாயைத் தத்தெடுத்து வளர்க்க, அது ஒரே இரவில் யானை அளவுக்குப் பெரிதாகிவிடுகிறது. அந்த நாயும் சிறுமியும் அடுத்து நடக்கும் கண்டங்களில் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் Clifford the Big Red Dog படத்தின் ஒன்லைன். தனக்கிருக்கும் வேலைகளை சமாளிக்க முடியாமல் தன் சோம்பேறி சகோதரரிடம் 12 வயது எமிலியை விட்டுச் செல்கிறார் எமிலியின் தாய் மேகி. பள்ளியில் இருக்கும் பலரும் எமிலியை நக்கலடிக்க, எமிலிக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. “நீ எவ்வளவு அன்பு செலுத்துகிறாயோ, அவ்வளவு நீ வளர்க்கும் பிராணி வளரும்” என்கிறார், அந்தப் பிராணிகளைப் பாதுகாத்து நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுக்கும் ப்ரிட்வெல். எமிலியின் அன்பும் கண்ணீரும் நாயைப் பெரிதாக்கிவிடுகிறது. நாய் தங்களுடையது என ஒரு கும்பல் சொந்தம் கொண்டாட வருகிறது. இறுதியில் நாய் யாரிடம் செல்கிறது; எமிலியின் துன்பங்கள் எப்படி நீங்குகின்றன என்பதாகச் செல்கிறது இந்தத் திரைப்படம். நார்மன் ப்ரிட்வெல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எழுதிவந்த குழந்தைகளுக்கான புத்தகங்களின் முதல் பாகம்தான் இந்தப் படம். அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism