Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

கலாசார பாரம்பரிய கட்டுப்பாடுகளுடன் மகளின் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் தந்தைக்கும் மகளுக்குமான ஜாலி சண்டைகளே இந்தக் கதை.

OTT கார்னர்

கலாசார பாரம்பரிய கட்டுப்பாடுகளுடன் மகளின் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் தந்தைக்கும் மகளுக்குமான ஜாலி சண்டைகளே இந்தக் கதை.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Modern Love - Hyderabad

(Anthology) Series

உலகில் எப்போதும் பெருந்தொற்றாய் எல்லோரிடமும் இருக்க வேண்டியது காதல்தான். ‘நியூ யார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான சில கட்டுரைகளை மையமாக வைத்து ஆங்கிலத்தில் மாடர்ன் லவ் என்னும் ஆந்தாலஜி தொடரை வெளியிட்டது அமேசான் ப்ரைம். அதற்கடுத்து பாலிவுட் வெர்ஷனை முடித்துவைத்துவிட்டு தற்போது மாடர்ன் லவ் ஐதராபாத் மூலம் நம் அண்டை மாநிலக் கதைகளின் சங்கமத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 My Unlikely Pandemic Dream Partner

ஐதராபாத் இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது இக்கதை. காதல் திருமணம் புரிந்து விவாகரத்தான மகளைச் சில ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சந்திக்க வருகிறார் தாய். அப்போது லாக்டௌன் அறிவிப்பு வெளியாகிவிட, அவர்களுக்குள்ளான பிரச்னைகள், அவற்றை எப்படித் தீர்க்கிறார்கள் என்பதுமாக முடிகிறது. நித்யா மேனன், ரேவதி இருவரின் அனுபவ நடிப்புடன் நம்மைக் கவரும் இன்னொரு விஷயம், படத்தில் காட்டப்படும் விதவிதமான இஸ்லாமிய உணவுவகைகள். அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவாவது இதைப் பார்க்கலாம்.

OTT கார்னர்

Fuzzy, Purple, and Full of Thorns

லிவ்விங் டுகெதர் இணையர்களாக ஆதி பின்னிஷெட்டியும், ரீது வர்மாவும் ஜாலியாக காலம் கழிக்கிறார்கள். அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆதியின் முன்னாள் காதலியின் ஊதா நிறச் செருப்பு இவர்களின் காதல் வாழ்க்கைக்குக் குறுக்கே விழுந்துவிடுகிறது. அன்புக்குரியவர்கள் பிரிந்த பின்னரும் அந்தப் பொருள்களை வைத்திருப்பது யாருக்கும் எதற்கும் நல்லதல்ல என்பதாய் நகரும் கதையின் இறுதி ட்விஸ்ட் ஜாலிகேலி ரகம்.

Why Did She Leave Me Here?

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கதைகளுடன் பாட்டி பேரன் அன்பைச் சொல்லும் இந்தக் கதையையும் இயக்கியது நாகேஷ் குகுனுர்தான். ஆதரவற்றோர் பள்ளியில் தன்னை விட்டுச் செல்லும் பாட்டியின் கதையைச் சொல்கிறது இந்தச் சிறுகதை. ஆனால், பல முறை பார்த்துப் பார்த்து சலித்த கதை என்பதாலேயே எந்தவித உணர்வையும் கடத்தாமல் சென்றுவிடுகிறது. பாட்டியாக சுஹாசினி நடித்திருக்கிறார்.

About That Rustle in The Bushes

கலாசார பாரம்பரிய கட்டுப்பாடுகளுடன் மகளின் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் தந்தைக்கும் மகளுக்குமான ஜாலி சண்டைகளே இந்தக் கதை. மேட்ரிமோனியல் தளங்கள், டேட்டிங் தளங்கள் எனப் பல ரூபங்களில் தனக்கான இணையைத் தேடுகிறார் உல்கா குப்தா. ஆனால், மகள் எல்லாவற்றிலும் நல்லது கெட்டது அறிந்து நடக்கிறாரா, எந்த எல்லை வரை செல்கிறார் என்பதை ஓர் உளவாளி போல் கவனிக்கிறார் தந்தையான நரேஷ். உச்சக் காட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நல்லதொரு காமெடி இந்தக் குறுங்கதை.

Finding Your Penguin

நமக்கான காதல் ஜோடி யாராக எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்பதை மிருகங்களின் காதல் கதைவழி சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தக் குறுங்கதை. வெங்கடேஷ் மஹா இயக்கியிருக்கும் இக்கதையில் இந்துவாக கோமலி பிரசாத் நடித்திருக்கிறார். காதல் பிரிவில் துவண்டு வாடும் இந்து தனக்கான புதிய இணையை ஒரு பக்கம் தேட, இந்துவுக்கான இணையை அவரின் தந்தையும் தேடுகிறார். இணை கிட்டியதா, அவர் எந்த மிருகத்தின் சாயலில் இருக்கிறார் என்பதைக் கலகலப்பாகச் சொல்கிறது இந்த பென்குயின் கதை.

What clown wrote this script!

தெலுங்குத் தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்யும் காதல் ஜோடிகள் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பாக விரிகிறது இக்கதை.

OTT கார்னர்

Incantation - Movies

ஹாலிவுட், கொரியப் படங்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் நெட்ப்ளிக்ஸில் எப்போதாவது வேற்றுமொழிப் படமொன்று வெயிட்டாய் இறங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். அப்படியொரு படம்தான் இது. தைவான் நாட்டிலிருந்து Found Footage ஜானரில் வெளியாகியிருக்கும் ஹாரர் படம். மூன்று நண்பர்கள் தங்களின் யூடியூப் சேனலுக்காக அமானுஷ்ய இடங்களைத் தேடிச் சென்று பதிவு செய்கிறார்கள். அப்படி ஒரு பழைமையான கிராமத்திலிருக்கும் சுரங்கத்திற்குள் அவர்கள் செல்ல, பற்றிக்கொள்கிறது பல நூறு ஆண்டுக்கால சாபம். திக்திக் காட்சியமைப்புகள், Found Footage படங்களுக்கேயுரிய நம்பகத்தன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக, பார்க்கும் நம்மையும் அந்த அமானுஷ்யத்தில் பங்குகொள்ளச் செய்வது என எல்லாவகையிலும் கவர்கிறது படம். அதனாலேயே உலகம் முழுக்க இந்தப் படத்திற்குப் பெரும் வரவேற்பு. ஹாரர் விரும்பிகள் தவறவிடக்கூடாத படம். அதேசமயம் மாயமந்திரம், சகுனங்களை மிகத்தீவிரமாக நம்புபவர்கள் இந்தப் படத்தை உங்கள் சொந்த ரிஸ்க்கில் பார்க்கவும்.

OTT கார்னர்

Anya’s tutorial - Series

ரெஜினா கஸான்ட்ரா, நிவேதிதா சதீஷ் என நமக்குப் பழகிய முகங்களோடு ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது இந்த சீரிஸ். அக்கா தங்கையான ரெஜினாவுக்கும் நிவேதிதாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஒருகட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறி தனியே குடிபோகிறார் நிவேதிதா. தங்கையின் அட்ரஸ் ரெஜினாவுக்குத் தெரியாது. இருவரும் தொடர்புகொள்ள இருக்கும் ஒரே வழி, நிவேதிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்தான். அந்தப் பக்கத்தின் மூலம் ரெஜினாவுக்கு மட்டுமல்ல, ஊருக்கே நிவேதிதா வீட்டில் பேய் இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை மிக மிக நிதானமாகச் சொல்கிறார்கள். நடிப்பில் குறைசொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்படுத்தித் தமிழாக்கம் செய்திருப்பது தொடங்கி மேக்கிங்கில் எக்கச்சக்க அலட்சியங்கள். மிக மெதுவாக நகரும் திரைக்கதையும் பொறுமையை சோதிக்கிறது. குடும்ப வன்முறை எனும் சீரியஸான விஷயத்தைப் பேச முனையும் காரணத்திற்காக வேண்டுமானால் பரிந்துரைக்கலாம்.