Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

மரணம் நோக்கி நகரும் தந்தைக்கும் மகளுக்குமான ரோடு டிரிப்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் Don’t Make Me Go.

OTT கார்னர்

மரணம் நோக்கி நகரும் தந்தைக்கும் மகளுக்குமான ரோடு டிரிப்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் Don’t Make Me Go.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்

19(1)(a) - MOVIE

ஓர் எழுத்தாளரின் கொலை இந்தச் சமூகத்தை என்ன செய்யும் என்பதைச் சொல்ல முனைகிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 19 (1) (a). கருத்துச் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துவரும் ஒரு தேசத்தில், அதையே தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குநர். எழுத்தாளர் கௌரி ஷங்கர் அதிகார சக்திகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். அதனால் அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒரு நாள் இரவு இந்துத்துவ சக்திகளால் அவர் கொல்லப்பட, அதற்கு முன்னும் பின்னும் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதாகக் கதை விரிகிறது. ‘‘நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன். இனி என் எழுத்து பேசட்டும்’’ என்கிற கௌரி ஷங்கராக விஜய் சேதுபதி. கௌரியின் கடைசி எழுத்துப் பிரதி தன்னிடம் இருக்கிறது என்பதை அறியாத ப்ரிண்ட்டர் கடைப் பெண்ணான நித்யா மேனன், அதை என்ன செய்ய விழைகிறார் என்பதை உணர்வுபூர்வமாக இயக்கியிருக்கிறார் இந்து. கோவிந்த் வசந்தாவின் இசை பெரும்பலம். சினிமாவுக்கான போதிய காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பது, பிற கதாபாத்திரங்களுக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியது, மலையாள சினிமாவுக்கே உரித்தான மெதுவாக நகரும் திரைக்கதை ஆகியவை மைனஸ். கௌரி லங்கேஷை நினைவுபடுத்தியதற்காக நிச்சயம் பார்க்கவேண்டிய சினிமா.

OTT கார்னர்

Indian Predator: The Butcher of Delhi - DOCU SERIES

நெட்ப்ளிக்ஸ் தன் படங்களில் கோட்டைவிடுவது மிகச் சாதாரணமாய் நடப்பதுதான். ஆனாலும் மற்ற ஓ.டி.டி-கள் நெட்ப்ளிக்ஸை வெல்லமுடியாத ஒரே ஏரியா டாக்குமென்டரி. அதுவும் க்ரைம் டாக்குமென்ட்ரிகளில் நெட்ப்ளிக்ஸ் கில்லி. 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தலைநகரையே உலுக்கிய ஒரு சீரியல் கில்லரின் கதைவழியே மீண்டும் இதை நிறுவியிருக்கிறது அந்தத் தளம். திகார் சிறையின் வாசலில் தொடர்ந்து தலையில்லாத பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன, கூடவே போலீஸாரைக் காட்டமாய் விமர்சித்து ஒரு கடிதமும். நவீனத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியிராத அந்தக் காலகட்டத்தில் இன்பார்மர்கள் நெட்வொர்க்கை வைத்தே எப்படிக் கொலையாளியை நெருங்கினார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். கூடவே அந்த விசாரணையில் வெளிவராத சில கூடுதல் உண்மைகளும் இந்த டாக்குமென்ட்ரி சீரிஸில் வெளிப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. த்ரில்லர் விரும்பிகள் மிஸ் பண்ணக்கூடாத சீரிஸ் இது.

OTT கார்னர்

The Boys Presents: Diabolical - SERIES

அமேசான் பிரைமின் புகழ்பெற்ற ‘தி பாய்ஸ்' வெப்சீரிஸ் யுனிவர்ஸில் நடக்கும் எட்டு அனிமேஷன் குறும்படங்களின் தொகுப்பு இது. லைவ் ஆக்‌ஷனில் காட்டமுடியாத வன்முறைக் காட்சிகள், அடல்ட் காட்சிகள் போன்றவற்றை அனிமேஷனில் காட்டியுள்ளனர். ‘தி பாய்ஸ்' தொடரின் கதாபாத்திரங்களைத் தாண்டி அதே உலகத்தில் வாழும் பிற வித்தியாசமான சூப்பர்ஹீரோக்கள் ஆறு எபிசோடுகளிலும், பில்லி புட்சர் ஒரு எபிசோடிலும், ஹோம்லேண்டர், பிளாக் நோயர், மேடலின் ஸ்டில்வெல் ஆகியோர் ஒரு எபிசோடிலும் தோன்றுகின்றனர். லேசர் பேபி ஒன்றைக் குறித்த மௌனப் படம், அநாதைகளாக விட்டுச் சென்ற பெற்றோர்களைப் பழிவாங்கும் சூப்பர் குழந்தைகளைப் பற்றிய படம், சூப்பர்ஹீரோ பெற்றோர்களின் விவாகரத்து தொடர்பான படம் எனப் பலதரப்பட்ட கதைகள் நிச்சயம் ‘தி பாய்ஸ்' ரசிகர்களைக் குஷிப்படுத்தும். ஆனால், லைவ் ஆக்‌ஷன் தொடரிலிருக்கும் திரைக்கதை நேர்த்தியும் சுவாரஸ்யமும் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்!

OTT கார்னர்

Don’t Make Me Go - MOVIE

மரணம் நோக்கி நகரும் தந்தைக்கும் மகளுக்குமான ரோடு டிரிப்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் Don’t Make Me Go. மியா ஐசக் பிறந்தது முதல் அவரை ஒற்றை நபராய் ஆளாக்குகிறார் ஜான் சோ. திடீரென ஒருநாள் ஜான் சோவுக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவருகிறது. இதுவரையில் மியா சந்திக்காத அவளின் தாயிடம் அவளை விட்டுவர வேண்டும். அதுவும் மியாவுக்குத் தெரியாமல். தன்னுடைய கல்லூரி ரீயூனியன் எனச் சொல்லி ஜான், மியாவை அழைத்துச் செல்லும் பயணமே இந்தத் திரைப்படம். இந்தக் கதை முடியும்போக்கை நீங்கள் விரும்பாமல் போகலாம். ஆனால், இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கலாம் என்கிற டிஸ்கிளைமருடன் ஆரம்பிக்கிறது இந்த சினிமா. படத்தின் விமர்சனமும் அதுதான். அதற்கு முன்புவரை அவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட அத்தனை காட்சிகளையும் ஒரு நொடியில் போட்டு உடைத்துவிடுகிறது அந்த க்ளைமாக்ஸ்.