Published:Updated:

OTT கார்னர்

Ben Stokes
பிரீமியம் ஸ்டோரி
Ben Stokes

2009-ல் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சைக்காலஜிக்கல் ஹாரரான ‘Orphan' படத்தின் முன்கதையாக வெளியாகியுள்ளது இந்த ‘Orphan: First Kill.'

OTT கார்னர்

2009-ல் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சைக்காலஜிக்கல் ஹாரரான ‘Orphan' படத்தின் முன்கதையாக வெளியாகியுள்ளது இந்த ‘Orphan: First Kill.'

Published:Updated:
Ben Stokes
பிரீமியம் ஸ்டோரி
Ben Stokes
Ben Stokes
Ben Stokes
OTT கார்னர்

Ben Stokes: Phoenix from the Ashes - (Documentary)

பென் ஸ்டோக்ஸ் - 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் மோசமாய் பௌலிங் போட்டு மொத்த தேசத்திற்கும் வில்லனானது, சரியாய் மூன்றாண்டுகள் கழித்து தான் பிறந்து வளர்ந்த நியூசிலாந்தையே தோற்கடித்து இங்கிலாந்திற்காக 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்தது, ஒற்றை ஆளாய் நின்று ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் கௌரவத்தைக் காப்பாற்றியது, கிளப்பிற்கு வெளியே இரண்டு பேரை அடித்து நொறுக்கி சர்வதேச ஊடகங்களால் கழுவி ஊற்றப்பட்டது என ஒரு சினிமாவிற்குக் கொஞ்சமும் சளைக்காத வாழ்க்கை இவருடையது. அதையெல்லாம் பேசி, கூடவே உலகமே நோக்கும் ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் மன அழுத்தம், உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றையும் உரக்கச் சொல்கிறது இந்த டாக்குமென்ட்ரி. க்ரிஸ் க்ரப், லூக் மெல்லோஸ் இயக்கியிருக்கும் இந்த டாக்குமென்ட்ரியில் ஸ்டோக்ஸோடு உரையாடுவது பிரபல இயக்குநர் சாம் மெண்டிஸ். கிரிக்கெட் என்பது வெறும் கலர்ஃபுல் கொண்டாட்டம் அல்ல என அதன் இருண்ட மறுபக்கத்தைப் பேசியவகையில் இது மிக முக்கியமானதொரு ஆவணம். உளவியல் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடியவை, அதிலிருந்து மீள முறையான வழிகாட்டுதல் தேவை என்கிற, காலத்திற்குத் தேவையான உரையாடலைத் தொடங்கி வைக்கும் இந்த ஆவணப்படம் அனைவருக்குமானது.

OTT கார்னர்
OTT கார்னர்

Maharani - Series

அரசியல் பரமபதங்களுக்குப் பெயர்போன மாநிலம் பீகார். அங்கு நடந்த அரசியல் நிகழ்வுகளில் கொஞ்சம் உண்மை, கொஞ்சம் புனைவு எனக் கலந்துகட்டி எடுக்கப்பட்டிருக்கிறது சோனி லைவில் வெளியாகியிருக்கும் ‘மகாராணி’ தொடர். லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, நிதிஷ் குமாருக்குப் பதிலாக பீமா பாரதி, ராணி பாரதி, நவீன் குமார். என்ன, இதில் வெறுமனே கைப்பாவையாக இல்லாமல், ராணி பாரதி ஒரு கட்டத்தில் தானாகவே முடிவெடுக்க ஆரம்பிக்கிறார். கணவரையே சிறையில் தள்ளுகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் சில உண்மைச் சம்பவங்களையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக பீகாரில் நடைபெற்ற தீக்குளிப்புச் சம்பவம், நிதிஷ் குமாரை வெல்ல வைத்த பிரசாந்த் கிஷோரின் நிறுவனம், அவரின் இந்துத்துவ சாய்வு எனப் பல விஷயங்களைப் புனைவாக்கியிருக்கிறார்கள். தொடரின் பெரும் பலம், ஹூமா குரேஷி. இப்படியெல்லாம் ராப்ரி தேவி இருந்திருக்கலாமே என எண்ண வைக்கும் அளவுக்குப் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தமிழ் டப்பிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதுதான் குறை.

OTT கார்னர்
OTT கார்னர்

Cars on The road - Series

ரோடு ட்ரிப் போவது யாருக்குத்தான் பிடிக்காது. நாம் கார்களில் ரோடு ட்ரிப் போவதுபோல, இரண்டு கார்கள் ரோடு ட்ரிப் அடித்தால் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஜாலியாகச் சொல்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Cars on the road. மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உணர்ச்சிகளுடனும் கார்கள் தயாரிக்கப்பட்டிருந்தால் எப்படியிருக்கும் என்பதன் கற்பனை வடிவமே Cars சினிமாக்களின் ஒன்லைன். Cars சினிமாக்களின் நாயகனான லைட்னிங் மெக்குயினும், அவன் நண்பன் மேட்டரும், மேட்டரின் தங்கை மாட்டோவின் திருமணத்துக்காக ரோடு ட்ரிப் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் வெவ்வேறு மனிதர்களை, அதாவது கார்களைச் சந்திக்கிறார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்கள் தான் இந்தத் தொடரின் கதை. The Shining படத்தை நினைவுபடுத்தும் எபிசோடு அல்ட்டிமேட் என்றால், fast and furious பட பாணியில் செல்லும் எபிசோடு இன்னொரு ரகம். இப்படிப் பல படங்களின் முக்கியமான சம்பவங்களை வைத்து ஒரு காக்டெயில் செய்திருக்கிறார்கள். லைட்னிங் மெக்குயினுக்கு வழக்கம்போல ஓவன் வில்சன் குரலுதவி செய்து அசத்தியிருக்கிறார். Cars படங்கள் பார்த்தவர்களுக்கு, Cars on the road தொடரும் நல்லதொரு அனுபவமாக இருக்கும். தொடர் என்றதும் பல மணி நேரம் பார்க்க வேண்டுமா என யோசிக்கத் தேவையில்லை. எல்லா எபிசோடும் 10 நிமிடங்கள்தான்.

OTT கார்னர்
OTT கார்னர்

Orphan: First Kill - Movie

2009-ல் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சைக்காலஜிக்கல் ஹாரரான ‘Orphan' படத்தின் முன்கதையாக வெளியாகியுள்ளது இந்த ‘Orphan: First Kill.' மனநலக் காப்பகத்திலிருந்து தப்பிக்கும் லீனா, ஒரு அமெரிக்கக் குடும்பத்தில் அவர்களின் காணாமல்போன சிறுவயது மகள் எஸ்தர் என்று கூறித் தஞ்சம் அடைகிறாள். கதைப்படி, பார்ப்பதற்கு 9 வயதுச் சிறுமியாகத் தோற்றமளிக்கும் எஸ்தருக்கு 31 வயது. ஒருவித ஹார்மோன் குறைபாட்டால் அப்படித் தெரிகிறார். புதிய குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓட முயலும் எஸ்தருக்குச் சவாலாக வருகிறார் நிஜ எஸ்தரின் தாய். முந்தைய பாகத்தைப் போல இதிலுமே எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார்கள். நிஜத்தில் இப்போது 25 வயதான நடிகை இஸபெல்லைச் சிறுமியாகக் காட்ட, டி-ஏஜிங் தொழில்நுட்பங்கள் எதுவுமில்லாமல், கேமரா கோணங்கள், டூப் போடுவது எனப் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திரைக்கதையில் லாஜிக் உட்பட சில குறைகள் இருந்தாலும், இஸபெல்லின் டெரரான நடிப்பு நம் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியாவில் அமேசான் பிரைமில் ரென்டல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்திப் பார்க்கலாம்.