சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

வனமே வாழ்க்கைக்கான களமாக விரிவதைச் சொல்கிறது, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘கொண்ட போலம்’ தெலுங்குப்படம்.

Bali - MOVIES
Bali - MOVIES
OTT கார்னர்

Bali - MOVIES

தந்தை - மகன் பாசம் பற்றிய படம் போல என நினைத்தால் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் அடுத்த சில நிமிடங்களிலேயே ஹாரர் ரூட் பிடித்து வேறொரு பக்கம் பயணிக்கிறது. உடல்நிலை சரியில்லாத தன் மகனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஸ்வப்னில் ஜோஷி. அங்கே அவர் மகனுக்கு ஒரு நர்ஸ் பழக்கமாகிறார். சிக்கல் என்னவெனில் அப்படி ஒரு நர்ஸை யாருமே பார்த்ததில்லை என மருத்துவமனை வட்டாரத்தில் சொல்கிறார்கள். அது மகனின் கற்பனையா, இல்லை வேறேதும் பஞ்சாயத்தா என அவர் தோண்டத் தொடங்க, பல முடிச்சுகள் அவிழ்கின்றன. வழக்கமான ஹாரர் டெம்ப்ளேட் படம்தான் என்றாலும் ஆங்காங்கே கொஞ்சம் த்ரில் தருணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் ஒட்டாமல் இருப்பது போன்ற உணர்வு.

Konda Polam - MOVIES
Konda Polam - MOVIES
OTT கார்னர்

Konda Polam - MOVIES

வனமே வாழ்க்கைக்கான களமாக விரிவதைச் சொல்கிறது, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘கொண்ட போலம்’ தெலுங்குப்படம். ஆடுமேய்ப்பதையே வயிற்றுப்பாடாகக் கொண்ட குடும்பத்தில் படித்து, பெருநகரத்தில் தங்கி நான்காண்டுகளாக வேலைக்கு முயற்சி செய்கிறான் ரவி. வறட்சியின் காரணமாக ஆடுகளை மேய்க்க பக்கத்து மலைக்காட்டுக்குச் செல்கிறார்கள் ரவியின் தந்தையும் மேய்ப்பு கூட்டாளிகளும். ரவியும் அவர்களுடன் செல்லும்போதுதான் வனம் என்பது எவ்வளவு விரிந்த வகுப்பறை என்பதும் காடு சமகாலத்தில் சந்திக்கும் பிரச்னைகளும் தெரியவர, அதிலிருந்து பாடங்கள் கற்று, உந்துதல் பெற்று ரவி ஐ.எப்.எஸ் அதிகாரியாக மாறுவதை சுவாரஸ்யமாகச் சொல்லும் படம். வைஷ்ணவ தேஜ், ரகுல் ப்ரீத்சிங், சாய் சந்த் போன்றோரின் இயல்பான நடிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாம் இதுவரை அறியாத ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை எனப் பல விஷயங்களைத் தொட்டுச்செல்கிறது படம்.

Welcome to Earth (Docuseries) - SERIES
Welcome to Earth (Docuseries) - SERIES
OTT கார்னர்

Welcome to Earth (Docuseries) - SERIES

ஹீரோவாகவே பார்த்துப் பழகிய வில் ஸ்மித்தின் பயம், பலவீனங்களைக் காட்டும் ஹாட்ஸ்டார் தொடர் இது. ஆனால் அதைப் பற்றியது மட்டுமே அல்ல. முன்னணி ஆய்வாளர்கள் சிலர் வில் ஸ்மித்தை உலகின் மூலை முடுக்குக்கு எல்லாம் அழைத்துச் சென்று சில விஷயங்களைச் செய்ய வைக்கிறார்கள். அதன்வழியே நீங்கும் ஸ்மித்தின் பல்லாண்டுக்கால பயம், அந்த இடத்தில் வரலாறு, அறிவியல்பூர்வமான தகவல்கள், நிலப்பரப்பு என எக்கச்சக்க விஷயங்களைப் பேசுகிறது. தொடரின் பெரிய ப்ளஸ், ஒளிப்பதிவு. சட்டென சென்று ஐந்தாவது எபிஸோடை மட்டுமாவது பாருங்கள். அதில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு நம்மை நிஜமா, க்ராபிக்ஸா எனத் திகைக்க வைக்கும். அதன்பின் அப்படியே எல்லா எபிஸோடுகளையும் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். கொஞ்சம் அறிவியல், நிறைய வில் ஸ்மித், அபார விஷுவல்கள் என குடும்பமாய்ப் பார்க்கத் தகுந்த தொடர் இது.

Aarya- SERIES
Aarya- SERIES
OTT கார்னர்

Aarya- SERIES

தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள ஒரு தாய் எவ்வளவு தூரம் செல்வார் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தித் தொடரான ஆர்யாவின் ஒன்லைன். தன் கணவரைக் கொன்றவர்களைப் பழிவாங்கிவிட்டு விமானம் ஏறிய ஆர்யாவை, மீண்டும் இந்தியாவுக்குள் அழைத்து வருகிறது விதி. துரோகமும், பாசமும் நிறைந்த சொந்தக் குடும்பம்; மகனின் இறப்புக்குப் பழி வாங்கக் காத்திருக்கும் ஷெகாவத் குடும்பம்; போதை மருந்துகளுக்காக எதையும் செய்யத் துணியும் ரஷ்யன் மாஃபியா; ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கக் காத்திருக்கும் காவல்துறை என நான்கு பக்கங்களிலும் நெருப்பு சூழ, அதை ஒற்றை ஆளாய் ஆர்யா கடக்க வேண்டும். ஆர்யாவாக சுஷ்மிதா சென் அதை அநாயாசமாகக் கடந்திருக்கிறார். டச் தொடரான பெனாஜோவின் அதிகாரபூர்வ ரீமேக் என்றாலும் மெதுவாக நகரும் திரைக்கதை அமைப்பு சிலருக்கு இது த்ரில்லர்தானா என்கிற கேள்வியை எழுப்பக்கூடும். முரண்களைச் சுமக்கும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லி அடுத்த சீசனுக்கான கொக்கியுடன் முடிகிறது ஆர்யா. தமிழ் டப்பிங்கும் இருக்கிறது.