Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

கொலை வழக்கில் கைதாகி, இருபதாண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் ரூத் ஸ்லேட்டர், தொலைந்துபோன தன் தங்கையைத் தேடி அலைகிறார்.

OTT கார்னர்

கொலை வழக்கில் கைதாகி, இருபதாண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் ரூத் ஸ்லேட்டர், தொலைந்துபோன தன் தங்கையைத் தேடி அலைகிறார்.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Aranyak - series

இமாசலப்பிரதேசத்தின் கற்பனை மலைநகரமான ஷிரோனாவில் ஒரு பதின்மவயதுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்படுகிறாள். காவல்துறை அதிகாரிகள் கஸ்தூரியும், அங்கத் மாலிக்கும் குற்றவாளியைத் தேட, அந்தச் சிறிய நகரத்தில் சிறுத்தை மனிதனின் நடமாட்டம் இருப்பதாக ஊர்மக்கள் நம்புகின்றனர். இக்கொலைக்குப் பின்னான மூடநம்பிக்கைகள், அரசியல் ஆட்டங்கள் எனப் பல விஷயங்களையும் சுவாரஸ்யமான முறையில் சற்றே இழுத்து, குற்றவாளி யார் என்பதற்கான விடையைச் சொல்லியிருக்கிறார்கள். சீனியர் பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் காவல் அதிகாரி கஸ்தூரியாக ஓ.டி.டி-யில் தடம் பதித்திருக்கிறார். இவருக்கும் அங்கத்தாக வரும் பரம்ப்ரதா சட்டோபாத்யாயாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரிதான் இந்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸின் பெரும்பலம். எட்டு எபிசோடுகளாக விரியும் கதை ஆங்காங்கே சற்று ஊர்ந்து சென்றாலும், அற்புதமான ஒளி/ஒலிப்பதிவால் தொடர் நெடுக ஓர் அமானுஷ்ய உணர்வு இழையோடுகிறது. நிறைய கதாபாத்திரங்கள் ஒருவித அயர்ச்சியை உண்டாக்குகின்றன. அரசியல் ஆட்டங்களில் எதிர்பார்த்த அனல் பறக்காததால், துப்பறியும் காட்சிகள் எப்போது வரும் என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி, ‘Whodunit’ ஜானர் ரசிகர்கள் யோசிக்காமல் ஸ்ட்ரீம் செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

The Unforgivable - Movie

கொலை வழக்கில் கைதாகி, இருபதாண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் ரூத் ஸ்லேட்டர், தொலைந்துபோன தன் தங்கையைத் தேடி அலைகிறார். ரூத் தன் தங்கையைக் கண்டுபிடித்தாரா, ரூத்துக்கு என்னவாகிறது என்பதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Unforgivable. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குக் காரணமான கொலைப்பழி, விடுதலைக்குப் பின்னும் விடாமல் ரூத்தைத் துரத்துகிறது. அமெரிக்கா என்றாலே பணம் கொழிக்கும் தேசமாக மட்டுமே காட்டிவந்த ஹாலிவுட்டில், வறுமை சூழும் கதைகள் என்றாலே ஆப்ரோ அமெரிக்க மக்களைத்தான் பயன்படுத்துவார்கள். அந்தச் சூழல் கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் ரூத்தாக வரும் சாண்டிரா புல்லக், மிகச் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வியோலா டேவிஸிடம் புல்லக் வெடித்தழும் காட்சி, அதன் உச்சம். ஒரு சாதாரண கதையைக்கூட அற்புத நடிப்பாலும் திரைக்கதையாலும் சிறப்பானதாக மாற்ற முடியும் என்பதற்கு The unforgivable ஓர் உதாரணம்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Madhuram - Movie

கற்பனையாகக் கதை புனைவது ஒரு விதம். நாம் அன்றாடம் கடந்து செல்லும் இடத்தை, விஷயத்தை வைத்துக் கதை சொல்லி அசரடிப்பது இன்னொரு விதம். இந்த இரண்டாவது வகையைக் கையிலெடுத்துக் கதை பின்னுவதில் கேரளப் படைப்பாளிகள் கெட்டிக்காரர்கள். Sonyliv தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மதுரம்’ படம் அப்படித்தான். கொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளோடு வரும் கேர் டேக்கர்கள் தங்குவதற்கென்றே ஒரு பெரிய பொது அறை இருக்கிறது. அதில் வந்து தங்கும் பலதரப்பட்ட மனிதர்களின் அன்பு, காதல், பிரிவு, சோகம், வாஞ்சை என அனைத்தையும் பேசுகிறது படம்... கூடவே உணவைப் பற்றியும். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ், நிகிலா விமல் என நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிளிர்கிறார்கள். கோவிந்த் வசந்தா - ஹேசம் அப்துல் வஹாப் இணையின் இசை பெரும்பலம். ‘மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள்’ என்னும் ஒருபக்கத்தைப் பற்றி மட்டுமே பேசும் படம் என்றாலும், ஒரு நல்லுணர்வுப் படத்தைக் குடும்பமாகப் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்த மதுரம்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

The Wheel of Time - Series

மாய உலகொன்றில் தீமை வெல்ல, மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் தீய சக்தி அதிகரிக்கும் போது டிராகனால் மட்டுமே அதைத் தோற்கடிக்க முடியும். டிராகனுக்கும் தீய சக்திக்கும் நடக்கவிருக்கும் கடைசிப் போர்தான் அமேசான் ப்ரைமில் தொடராக வெளிவந்திருக்கும் தி வீல் ஆப் டைமின் ஒன்லைன். மந்திர சக்தி கொண்ட தமோத்ரெட் (ரோசாமண்டு பைக்), உலகத்தைக் காக்க டிராகனின் மறுபிறவி என சந்தேகிக்கப்படும் 5 இளைஞர்களுக்குப் பயிற்சி தருகிறார். அந்த ஐந்து பேரில் யார் உண்மையான டிராகன்? தீய சக்தியை அழித்து, மீண்டும் சுழற்சியிலிருந்து அந்த உலகம் தப்புமா என்ற புதிருக்கான விடையுடன் பயணிக்கிறது கதை. ரொமான்ஸ், மாயாஜாலங்கள், மந்திரங்கள், திடீர் திருப்பங்கள் எனக் கற்பனைக் கதைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இந்தத் தொடரின் பிளஸ். லார்டு ஆப் த ரிங்ஸ், ஹாரி பாட்டர், கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற படைப்புகளுக்கு நீங்கள் ரசிகர்கள் என்றால், கண்டிப்பாக தி வீல் ஆப் டைம் உங்களை ஈர்க்கும்.