Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

‘விசில்’ படத்தில் மின்சாரம் பாய்ந்ததும் விவேக் கதாபாத்திரத்துக்கு ஒரு `சக்தி!” வரும் அல்லவா,

OTT கார்னர்

‘விசில்’ படத்தில் மின்சாரம் பாய்ந்ததும் விவேக் கதாபாத்திரத்துக்கு ஒரு `சக்தி!” வரும் அல்லவா,

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Emily In Paris

பெரிய வரவேற்பைப் பெற்ற Emily In Paris தொடரின் இரண்டாவது பாகம் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. வேலை நிமித்தமாக சிகாகோவிலிருந்து பாரிஸ் செல்லும் எமிலி சந்திக்கும் மனிதர்களும் சவால்களுமே கதைக்களம். பாரிஸ் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் காதல் பிம்பத்தை எமிலியின் வாயிலாக நமக்கு மார்க்கெட்டிங் செய்துகொண்டே இருக்கும் இந்தத் தொடர்.

OTT கார்னர்
OTT கார்னர்

பாரிஸ் மக்களின் வாழ்க்கை, தொழில், காதல் என அனைத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. ஃபீல் குட் தொடர்கள் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எமிலியைச் சுற்றியுள்ள கதாபாத்திரங் களுக்கான களத்தை இப்போது அமைத்திருப்பதால், முதல் சீசனைப்போல் இல்லையென்று பலரும் கருதலாம். ஆனால், அடுத்தடுத்த சீசன்களில் அவிழ்ப்பதற்குத் தேவையான முடிச்சுகள் ஈஃபிள் டவரைச் சுற்றி இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

OTT கார்னர்
OTT கார்னர்

Dexter

காவல்துறையில் தடயவியல் அதிகாரியாக வேலை பார்க்கும் டெக்ஸ்டர், குற்றவாளிகளை எப்படி தப்பிக்கவைத்து, கொலை செய்கிறான் என்பதுதான் dexter தொடரின் ஒன்லைன். இது `எல்லாம் அவன் செயல்' கதையில்ல என வருபவர்களுக்கு, டெக்ஸ்டர்தான் முதலில் வந்தது என்பதைச் சொல்லிக்கொள்கிறோம். 2013-ம் ஆண்டு எட்டாவது சீசனில் யாருமே எதிர்பார்க்காத க்ளைமாக்ஸுடன் முடிந்த தொடரை தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். வேறு பெயருடன் வேறு ஊரில் போலி வாழ்க்கை வாழும் டெக்ஸ்டருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்கிறது. தனக்கென ஒரு கோட்பாடு இருக்கிறது எனச் சொல்லிக்கொள்ளும் டெக்ஸ்டர் உண்மையில் அதன்படிதான் செயல்படுகிறானா, இல்லை எல்லாமே வெறும் கண்துடைப்பா என்பதை அவரின் மகனை வைத்துக் கேள்வி கேட்கும் விதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள். Voot செயலியில் Dexter : new Blood என்னும் பெயரில் வெளியாகியிருக்கும் இந்த சீசனுடன் பழைய சீசன்களையும் கண்டுகளிக்கலாம். விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாத ஒரு தொடர். வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால், அடல்ட்ஸ் ஒன்லி.

OTT கார்னர்
OTT கார்னர்

Lulli

‘விசில்’ படத்தில் மின்சாரம் பாய்ந்ததும் விவேக் கதாபாத்திரத்துக்கு ஒரு `சக்தி!” வரும் அல்லவா, அதே சக்தி இந்தப் படத்தின் லுல்லிக்கும் கிடைத்துவிடுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தப் போர்ச்சுகீசிய திரைப்படத்தின் ஒன்லைன். மருத்துவப் பயிற்சி யிலிருக்கும் லுல்லி யார் பேசுவதையும் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளாதவர். அதே கல்லூரியில் படிக்கும் தியாகோவும் லுல்லியும் காதலித்துவந்தாலும், லுல்லியின் இந்த குணத்தாலேயே இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். ‘மனதின் ஒலி’ சக்தி கிடைக்கும் லுல்லி எப்படி இந்த சக்தியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என நீள்கிறது கதை. 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சின்னப் படம் என்பதால், காமெடிக் காட்சிகள் தவிர எந்தவொரு உணர்வையும் பெரிதாகக் கடக்க மறுத்து, ஒரு டைம்பாஸ் சினிமாவாக மட்டுமே நிற்கிறது Lulli.

OTT கார்னர்
OTT கார்னர்

What Do We See When We Look at the Sky

தற்செயலாகச் சந்தித்துக்கொள்ளும் லீசாவுக்கும், ஜியார்ஜிக்கும் காதல் வந்துவிடுகிறது. அடுத்த நாள் சந்திக்கலாம் என முடிவுசெய்கிறார்கள். ஆனால், அடுத்த நாள் ஏதோவொரு சாபத்தால் இருவரின் முகம், குணநலன் என எல்லாமே மாறிவிடுகின்றன. மீண்டும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தார்களா, என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது Mubi-யில் வெளியாகியிருக்கும் What Do We See When We Look at the Sky? என்ன மாதிரியான தலைப்பு இது என்கிற கேள்வியுடன் பல கேள்விகள் படம் பார்க்கும்போது நமக்குள் எழுகின்றன. ஜியார்ஜிய நகரமான குதைசியில் நடக்கும் கதையில், இந்த இரு கதைமாந்தர்களைத் தவிர பல விஷயங்கள் பேசப்படுகின்றன. இயக்குநரின் குரலில் படம் நெடுகிலும் பல விஷயங்கள் நமக்குச் சொல்லப்படுகின்றன. சினிமா என்னும் கதை சொல்லலில் பல புதுமைகளை பிரமாண்டங்களின் துணையில்லாமல் சுவாரஸ்யமாய் புகுத்தமுடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் Alexandre Koberidze. இருவரும் சந்திப்பதைக் காட்சிப்படுத்தியிருக்கும் முதல் காட்சியிலேயே அட சொல்ல வைக்கிறார் இயக்குநர். சில காட்சிகள் நம்மை சோதித்தாலும், படம் முடிந்ததும் நம்மைக் கைத்தட்ட வைத்துவிடுகிறது இந்த ஜியார்ஜிய மொழித் திரைப்படம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism