கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Falling for Christmas
பிரீமியம் ஸ்டோரி
News
Falling for Christmas

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனுடன் பனிச்சறுக்கு விளையாட்டுக்குச் செல்லும் பணக்கார வீட்டு நாயகி, விபத்தால் நினைவுகளை இழந்து ஆபத்தான நிலையில், ஒருவரால் காப்பாற்றப்படுகிறாள்

OTT கார்னர்
OTT கார்னர்

The Wonder - Movie

1862. அயர்லாந்தில் அன்னா என்ற சிறுமி பல மாதங்களாகச் சாப்பிடாமல் உயிர் வாழ்கிறாள், அவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்ற செய்தி பரவுகிறது. உண்மை என்ன என்பதைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவரும், கன்னியாஸ்திரி ஒருவரும் நியமிக்கப்படுகிறார்கள். சிறுமி எப்படிச் சாப்பிடாமல் இருக்கிறாள், அந்த ஊரும் அவளின் குடும்பமும் அவளை என்ன செய்தன, சிறுமியைக் காப்பாற்ற அந்த நர்ஸ் எடுக்கும் முயற்சிகள் பலனளித்தனவா என்பதுதான் நெட்ப்ளிக்ஸின் ‘தி வொண்டர்.’ நர்ஸ் எலிசபத் ரைட்டாக ஹாலிவுட் சென்சேஷன் ஃப்ளோரன்ஸ் பக் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிறுமி அன்னாவாக வரும் கிலா நல்ல தேர்வு. 2016-ல் வெளியான நாவலை அடிப்படையாக வைத்து இதை இயக்கியிருக்கும் செபாஸ்டியன் லேலியோ, கடவுளின் பெயரால் நிலவும் மூடநம்பிக்கைகளை மருத்துவ அறிவியல் எப்படி வெற்றிகொள்கிறது என்பதை யாரும் புண்படாத வகையில் படமாக்கியிருக்கிறார். வேகமாகவே நகரும் திரைக்கதை இதன் பெரிய ப்ளஸ்!

OTT கார்னர்
OTT கார்னர்

Lost Bullet 2 - Movie

ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை ஐரோப்பிய ஆக்‌ஷன் படங்கள். என்ன, ஹாலிவுட் படங்களின் செல்வாக்கு உலகளவில் அதிகமென்பதால் அவை வெளியே தெரியுமளவிற்கு மற்ற மொழிப்படங்கள் தெரிவதில்லை. எனவே அந்த ஏரியாவில் கல்லா கட்டத் தொடங்கிவிட்டது நெட்ப்ளிக்ஸ். 2020-ல் நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட Lost Bullet அதன் ஸ்டன்ட் காட்சிகளுக்காகப் பாராட்டப்பட, சத்தமே இல்லாமல் அடுத்த பாகத்தையும் தயாரித்து இறக்கிவிட்டார்கள். முதல் பாகத்தின் தொடர்ச்சியாய் விரியும் கதையில் திடுக்கிடும் ட்விஸ்ட்கள் எதுவும் இல்லை. யூகித்துவிடக்கூடிய லீனியர் வகை கதையின் பெரும்பலம், அதன் சண்டைக் காட்சிகள் மட்டுமே. எப்போதும் அமெரிக்காவிலேயே இறங்கும் ஏலியன் திடீரென ஒரு சேஞ்சுக்கு ஐரோப்பாவில் இறங்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது இந்த ‘ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ பாணி சேஸிங் படம். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் விரும்பிகளுக்காக மட்டுமே!

OTT கார்னர்
OTT கார்னர்

Don’t Leave - Movie

காதலின் பிரிவு, அது தரும் வலியுடனான அன்றாடம் எனப் பயணிக்கிறது துருக்கித் திரைப்படமான ‘Don’t Leave.’ தன் காதலன் செமியுடன் வாழும் டெப்னே, காரணம் சொல்லாமல் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். திடீர் பிரிவின் காரணம் செமிக்குப் புரியவில்லை. அதைப் பேசி அறியவும் தயக்கம். வேலையில் கவனமின்மை, பணச் சிக்கல் எனச் சூழலும் மோசமாகிறது. நாள்கள் செல்லச் செல்ல அவளின் நினைவுகளில் செமி உழல்கிறான். சமகாலம், நினைவுகள் எனக் கதை நகர்கிறது. பிரிவின் காரணம் என்ன, இருவரும் சேர்ந்தனரா என விரிகிறது படம். செமியாக புரக் டெனிஸும், டெப்னேவாக டிலன் சிஸக் டெனிஸும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அம்மாவிடம் உடைந்து அழும் அந்த ஒற்றைக் காட்சியில் வெளிப்படுகிறது செமி கதாபாத்திரத்தின் மனநிலை. தொடக்கத்தில் செமியின் தனிமை ஒட்டாமல்போனாலும், பின் அது நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது. உறவுச்சிக்கல்களை மெல்லிய உணர்வுகளோடு பேசும் இப்படம் சமகாலக் காதலின் ஒரு பரிணாமத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Falling for Christmas - Movie

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனுடன் பனிச்சறுக்கு விளையாட்டுக்குச் செல்லும் பணக்கார வீட்டு நாயகி, விபத்தால் நினைவுகளை இழந்து ஆபத்தான நிலையில், ஒருவரால் காப்பாற்றப்படுகிறாள். அவளுக்கு நினைவு திரும்பியதா, விபத்தில் சிக்கிய காதலனுடன் இணைந்தாளா என்பதுதான் ஜனீன் டாமியன் இயக்கத்தில் லின்சி லோகன், கோர்ட் ஓவர்ஸ்ட்ரீட், ஜார்ஜ் யங் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘Falling for Christmas.’ பணக்காரப் பெண்ணாக லின்சி லோகன். அவரது காதலராக ஜார்ஜ் யங். படம் முழுக்க வண்ண ஓவியம்போல் வந்து, ஒவ்வொரு ப்ரேமையும் கலர்ஃபுல் ஆக்கிவிடுகிறார் லின்சி லோகன். விடுதி நடத்தும் மிடில் க்ளாஸ் மனிதர் ஜேக்காக கண்களாலேயே காதல் பேசி ‘டைட்டானிக்’ ஜாக்கை நினைவூட்டுகிறார் கோர்ட் ஓவர்ஸ்ட்ரீட். கோலிவுட், பாலிவுட் டெம்ப்ளேட்டில், இப்படித்தான் நடக்கப்போகிறது என்று சுலபமாக யூகிக்கமுடியும் திரைக்கதை. கிரஹாம் ராபின்சனின் ஒளிப்பதிவிற்காக இந்தப் படத்தை ரசிக்கலாம்.