Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

பெண்ணை சக உயிராக நினைக்காது ஆண் செய்யும் அத்துமீறல்களைப் பற்றிப் பேசுகிறது Voot Select-ல் வெளியாகியிருக்கும் ‘நட்கட்.’

OTT கார்னர்

பெண்ணை சக உயிராக நினைக்காது ஆண் செய்யும் அத்துமீறல்களைப் பற்றிப் பேசுகிறது Voot Select-ல் வெளியாகியிருக்கும் ‘நட்கட்.’

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Red Notice - MOVIE

Red Notice - MOVIE
Red Notice - MOVIE
OTT கார்னர்
OTT கார்னர்

மகாராணி கிளியோபாட்ராவின் அரியணையில் இருந்த மூன்று முட்டைகளைத் தேடி அலைகிறார்கள் மூன்று பேர். யார் இவர்கள், ஏன் இப்படிச் சுற்றுகிறார்கள் என்பதைக் காமெடி கலந்து சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ரெட் நோட்டீஸ். காவல்துறை அதிகாரியாக ராக், பலே திருடனாக ரியான் ரெனால்ட்ஸ், சாமர்த்திய கில்லாடியாக கல் கடோட். இவர்களைப் பிடிக்கப் போராடும் இண்டர்போல் அதிகாரியாக ரிது ஆர்யா. குறைந்தபட்ச லாஜிக்கும் இல்லாமல், கதை பல்வேறு நாடுகளில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால், அந்தக் காட்சிகளையும் செட்டுக்குள்தான் எடுத்திருக்கிறார்கள். ஹாட்ஸ்டாரில் ஜங்கிள் க்ரூஸ், நெட்பிளிக்ஸில் ரெட் நோட்டீஸ் என இரண்டு ராக் படங்கள் காமெடி ரகத்தில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு எடுக்கப்பட்டிருந்தால், பெரிதாக சோதிக்காமல் ஜாலியான டைம்பாஸாகக் காணலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Natkhat - MOVIE

Natkhat - MOVIE
Natkhat - MOVIE

பெண்ணை சக உயிராக நினைக்காது ஆண் செய்யும் அத்துமீறல்களைப் பற்றிப் பேசுகிறது Voot Select-ல் வெளியாகியிருக்கும் ‘நட்கட்.’ ஏழு வயதுச் சிறுவனான சோனு, இந்த ஆணாதிக்க உலகின் சிந்தனைகளோடு வளர்கிறான். தன் பள்ளியில் படிக்கும் சக மாணவி ஒருத்தி திருப்பி அடித்ததைக்கூட அச்சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தச் சிறுமியை மிரட்டியதை வீட்டிலிருக்கும் ஆண்களிடம் பெருமையாகச் சொல்ல, அதிர்ந்து போகிறார் தாய் வித்யா பாலன். சோனுவுக்கான இரவு நேரக் கதைகளின் வாயிலாக மகனை மாற்ற முயல்கிறார் தாய். சமூகத்தில் நிகழும் பிரச்னைகள், வீட்டில் நடக்கும் ஆணாதிக்கம் எனப் பலவற்றை 30 நிமிடங்களில் சொல்லி அசத்தியிருக்கிறார் ஷான் வியாஸ். பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய சூழலில், பலரும் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டியதை அலசுகிறது இந்த சினிமா.

OTT கார்னர்
OTT கார்னர்

Olaf Presents - MOVIE

OTT கார்னர்

ஃப்ரோசன் திரைப்படங்களின் மூலம் பிரபலமான ஓலஃப் டிஸ்னியின் கிளாசிக் படங்களைத் தன் பாணியில் சொல்லும் தொடர் தான் Olaf Presents. தி லயன் கிங், அலாதீன், டேங்கில்டு, தி லிட்டில் மெர்மெய்டு, மோனா என டிஸ்னியின் மெகா ஹிட் அடித்த படங்களின் கதைகளை ஐஸ்கட்டி பொம்மையான ஓலஃப் தன் பாணியில் சொல்கிறது. கதை சொல்லும் ஓலஃபே கதையின் நாயகனாகவும் ஆகிவிடுகிறது. ஐந்து குட்டிக் கதைகளும் ஓலஃபின் பாணியில் அசத்தலாக வெளிவந்திருக்கின்றன. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருக்கும் இந்த ஓலஃப் கதைகள் ஒவ்வொன்றும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ‘இவ்ளோதான் கதையா’ என்பது போலத் தோன்றலாம். அவர்கள் இதே ஹாட்ஸ்டாரில் இருக்கும் இந்த முழுப் படங்களைப் பார்த்துவிடுவது நல்லது.

OTT கார்னர்
OTT கார்னர்

Wrong turn the foundation - MOVIE

OTT கார்னர்

ஒரு வினோதக்குழுவிடம் மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் Wrong Turn The Foundation. Wrong Turn படங்களுக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நரமாமிசம் உண்பவர்களிடம் மாட்டிக்கொள்ளும் மனிதர்களைச் சுற்றி ஒரு கதை பின்னப்பட்டிருக்கும். முதலில் வந்த ஆறு பாகங்களில் இரண்டாம் பாகம் மட்டும்தான் த்ரில்லர் ரகம். தற்போது நரமாமிசம் என்னும் பகுதியை விலக்கிவிட்டு தன்னளவில் நிம்மதியாய் இருக்கும் ஒரு குழு, அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் டீனேஜர்கள் என Wrong Turn-ஐ ரீபூட் செய்திருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே அரசியல் பேசினாலும் அதைப்பற்றிய புரிதல் இல்லாமல் வெறுமனே மேம்போக்காக இருப்பதுதான் பெரும் பிரச்னை. Wrong Turn சினிமாத் தொடர், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்ற அளவில் தேறுகிறது இந்த பாகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism