Published:Updated:

OTT கார்னர்

Bhoothakaalam
பிரீமியம் ஸ்டோரி
Bhoothakaalam

தீ விபத்தில் சேதமடைந்த பழங்கால வீடியோ டேப்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறான் அதையே தொழிலாகக் கொண்டிருக்கும் டேனியல்

OTT கார்னர்

தீ விபத்தில் சேதமடைந்த பழங்கால வீடியோ டேப்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறான் அதையே தொழிலாகக் கொண்டிருக்கும் டேனியல்

Published:Updated:
Bhoothakaalam
பிரீமியம் ஸ்டோரி
Bhoothakaalam
OTT கார்னர்
OTT கார்னர்

Archive 81

தீ விபத்தில் சேதமடைந்த பழங்கால வீடியோ டேப்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறான் அதையே தொழிலாகக் கொண்டிருக்கும் டேனியல். தனிமையில் இந்தப் பணியைத் தொடங்கும் டேனிக்கு அந்த டேப்பில் இருப்பவை 90களில் வாழ்ந்த மெலடி என்ற ஆராய்ச்சி மாணவி எடுத்த ஆவணப்படம் என்று தெரியவருகிறது. டேனியையும், மெலடியையும் காலம் கடந்து இணைக்கிறது ஓர் அமானுஷ்யம். டைம் டிராவல், ஹாரர், பேன்டஸி எனப் பல கியர்கள் போட்டு நகர்கிறது 8 எபிசோடுகள் கொண்ட இந்த நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ். இதே பெயரில் முன்னர் வெளியான ஆடியோ பாட்காஸ்ட் ஒன்றை சீரிஸாக மாற்றியிருக்கிறார்கள். இதன் நிர்வாகத் தயாரிப்பில் பங்காற்றியிருக்கிறார் புகழ்பெற்ற ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான். முகத்தில் அறைந்து, திடுக்கிட வைக்கும் ஹாரர் காட்சிகள் இல்லையென்றாலும், மெதுவாக டெம்போவைக் கூட்டி, கடைசியில் பிரமாண்டமாகத் தீப்பிடித்து எரியும் திரைக்கதை அமைப்பு இதன் பெரும்பலம். மெலடி பாத்திரத்தில் இயல்பாக ஈர்க்கிறார் டினா ஷிஹாபி. ஹாரர் விரும்பிகளுக்கான சரியான ட்ரீட்!

OTT கார்னர்
OTT கார்னர்

Titane

மகனைத் தொலைத்துவிட்டுத் தேடும் தந்தைக்கும், சீரியல் கொலைகள் செய்யும் ஒரு பெண்ணுக்குமான அன்புதான் ‘டைட்டேன்’ படத்தின் மையக்கரு. அடுக்கடுக்காகக் கொலைகள் செய்யும் அலெக்ஸியாவுக்கு கார்களின் மேல் எப்போதும் தனிப்பிரியம் உண்டு. அதுவே அவர் வாழ்க்கையில் பெரும் சிக்கலையும் கொண்டு வந்துவிடுகிறது. தீயணைப்புத் துறையில் வேலை பார்க்கும் வின்சென்ட்டுக்கு, தொலைந்துபோன மகன் உருவில் வந்து விழுகிறார் அலெக்ஸியா. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு ஹாரரும், ஃபேண்டஸியும் நிறைந்திருக்கும் டைட்டேனில் அதையும் கடந்து அன்பு பீறிடுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான Palme d’Or விருதை டைட்டேனுக்காகப் பெற்றிருக்கிறார் இயக்குநர் டூகௌர்நௌ. அடல்ட் காட்சிகளும் வன்முறையும் அதீதம் என்பதால் இது நிச்சயம் எல்லோருக்குமான படம் அல்ல. வயது வந்த மாற்று சினிமா விரும்பிகள் மட்டும் MUBI தளத்தில் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Bhoothakaalam

ஹாரர் சினிமாவுக்கென இதுவரை நாம் பார்த்து வந்த இலக்கணங்களை உடைத்தெறிந்திருக்கிறது Sonyliv-ல் வெளியாகியிருக்கும் மலையாளப்படமான பூதக்காலம். கேரளத்தின் இந்தத் தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் ஷேன் நிகம் பிரதான வேடத்தில் நடித்திருந்தாலும் தன் பல்லாண்டுக்கால அனுபவத்தால் திரையில் மிளிர்கிறார் ரேவதி. தனிமையை எதிர்கொள்ள பயப்படும் தாய், தன் ஆற்றாமையை போதை கொண்டு போக்க முயலும் மகன், ஒரு வீடு. இவ்வளவுதான். இதை வைத்து 120 நிமிடங்கள் நம்மைப் பதைபதைக்கவைக்கும் திகில் சினிமாவைத் திரையில் காட்டுகிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். பேய் என்பது உண்மையில் எது, நம் கடந்தகாலத் தவறுகளா, இல்லை, அது நிகழ்காலத்தில் தரும் குற்றவுணர்வா, இல்லை, இது எல்லாவற்றுக்கும் சாட்சியாய் இருக்கும் அந்தக் கட்டடமா என உளவியல்ரீதியான ஹாரர் படத்தைக் கட்டமைத்திருப்பது படத்தின் பலம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Bro Daddy

மோகன்லால் நடிக்க பிருத்விராஜ் இயக்கினால் அந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறும். இந்தக் காம்பினேஷனில் வெளியான லூசிபர் நிகழ்த்திய வசூல் சாதனைகள் அப்படி. ஆனால் இந்தமுறை வித்தியாசமாக காமெடி ரூட்டைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் பிருத்விராஜ். தங்கள் குடும்பங்கள் நினைப்பதற்கு நேர்மாறான வாழ்க்கை வாழ்கிறார்கள் வாரிசுகளான பிருத்விராஜும் கல்யாணி ப்ரியதர்ஷனும். எதிர்பாராமல் இவர்கள் வாழ்க்கையில் ஒரு ட்விஸ்ட் நடக்க, அதைச் சமாளிக்கவேண்டிய இடத்திலிருக்கும் பிருத்விராஜின் தந்தை மோகன்லால் வாழ்க்கையிலும் ஒரு ட்விஸ்ட் நடக்கிறது. இருவருமாய் எப்படி அதைச் சமாளிக்கிறார்கள் என்பதை நிறைய நல்ல காமெடி, கொஞ்சம் மொக்கை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். மோகன்லாலின் சின்னச் சின்னக் குறும்பு ரியாக்‌ஷன்கள் அதகளம். ஜாலியாய் ஒரு குடும்பப் படம் பார்க்க நினைப்பவர்கள் ஹாட்ஸ்டாரில் ப்ரோ டாடியைப் பார்த்து ரசிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism