Published:Updated:

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

ஓடிடி தளங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓடிடி தளங்கள்

ஹரிபாபு.நா

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

ஹரிபாபு.நா

Published:Updated:
ஓடிடி தளங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓடிடி தளங்கள்

குட்டியூண்டு கொரோனா உலகத்துக்கு வந்ததும் வந்தது... கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா வீட்டுக்குள்ளேயேதான் வாழ்க்கைனு ஆகிப்போச்சு. ‘நாலு சுவருக்குள் பொழுதுபோக்குவது எப்படி?’னு நம்ம மக்கள் யோசிச்சதுல தாயம் விளையாடுறதுல இருந்து டல்கோனா காபிவரை பல வித்தைகளைக் கண்டுபிடிச்சாங்க. அதுல ரொம்ப முக்கியமான இடம் பிடிச்சது... ஓடிடி (OTT - Over The Top) தளங்கள். தொடர்ந்த லாக்டௌன்கள்ல எல்லாம், ‘தினம் ஒரு ஓடிடி படம்’னு பலரும் கொள்கைப் பிடிப்போட வாழ ஆரம்பிச்சாங்க. அந்த வகையில, கொரோனா சூழல்ல ஓடிடி மார்க்கெட் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. ஓடிடியில் பல தளங்கள் இருக்க, ‘சரி உங்களுக்குப் பிடிச்ச ஓடிடி பிளாட்ஃபார்ம் எது, ஏன்னு சொல்லுங்க பாஸ்’னு சென்னை, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள்கிட்ட கேட்டோம்.

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

ஹாட்ஸ்டார்... டாப்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar)... கல்லூரி மாணவர்கள்கிட்ட ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கு. குறிப்பா, கேர்ள்ஸ் ஓட்டு இதுக்கு அதிகமா விழுந்திருக்கு. ‘விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் இதுல இல வசமா கிடைக்குதுல்ல... அதான்’னு காரணம் சொல்றாங்க பொண்ணுங்க. ‘அப்புறம்... லைவ் கிரிக்கெட் பார்க்கிறதுக்காகவும் சப்ஸ்கிரைப் பண்ணிருக்கோம்’னு தம்ப்ஸ் அப் காட்டுறதும் அவங்களேதான். ‘மகா பாரதம் பார்க்கணும்... அதுக்காக சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன் பாஸ்’னு சொன்னாங்க ரெண்டு பசங்க.

ஸ்டார்... ஜோர்!

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

வெப் சீரிஸ் கிங்... நெட்ஃபிளிக்ஸ்!

மாணவர்கள் கைகாட்டும் மாண்பு மிகு #2 ஓடிடி தளம்... நெட்ஃபிளிக்ஸ் (Netflix). ‘நெட்ஃபிளிக்ஸுக்கு தவறாமல் சப்ஸ்கிரைப் செய்வோர் சங்கம்’ உருவாக காரணமா மாணவர்கள் சொல்றது, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில அவங்க வெளியிடும் தொடர்கள். குறிப்பா, இந்தத் தளத்தோட மாஸ் ஹிட் வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட் (Money Heist)க்கு பலமான வாக்குகள். சமீபத்துல ‘ஜகமே தந்திரம்’ இதில் வெளியான காரணமும் சில பல ஓட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கு.

தொட்டுத் தொடரும் தொடர்கள் பந்தம்!

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

அமேஸானுக்கு என்னதான் ஆச்சு?!

ஒப்பீட்டளவுல அமேஸான் ப்ரைம் (Amazon Prime) சந்தாதாரர்கள் கேம்பஸ்ல குறைவாவே இருப்பதா தெரியுது. ஆனா, மக்கள் ஓடிடி தளங்களை நாட ஆரம்பிச்ச காலத்துல அனைத்து தரப்பு மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட தளம் இதுதான். அந்த அமேஸானுக்கு இப்போ என்னதான் ஆச்சு? பார்வையாளர்களைத் திருப்திப்படுத்து வதுல தவறிவிட்டதா ரிப்போர்ட் சொல்லுது. பல மொழிகள்ல பல படங்கள் இருந்தாலும், இதில் விளம்பரங்கள் அதிகம் என்பதையும் ஒரு குறையா சொல்றாங்க. அது மட்டு மல்லாமல், மற்ற தளங்கள்ல உள்ளது மாதிரி இதுல அதிக தொடர்கள் இல்லையேனும் மார்க்ஸை மைனஸ் பண்றாங்க.

பிக் அப்!

2K kids: ஓடிடி தளங்கள்... கேம்பஸ் கில்லி யார்?!

ஸீ5... இப்படி பண்றீங்களே ஜீ?!

‘என்னது... இப்படி ஒரு ஓடிடி தளம் இருக்கா?’னு பல மாண வர்கள் கேட்ட ஓடிடி... ஸீ5 (ZEE5). பலருக்கு இதைப் பற்றி தெரிந்திருந் தாலும், ‘அந்தப் பக்கம் போற தில்லை நாங்க’னு சொல்றாங்க. ‘ஏன் பாஸ்..?’னு கேட்டா, ‘முதல்ல, மற்ற ஓடிடி தளங்களை மாதிரி இவங்களும் விளம்பரம் செய்து, மக்கள்கிட்ட போய் சேரணும். அப்புறம் கன்டன்ட்ல கவர ணும்’னு டிப்ஸ் சொல்றாங்க பசங்க.

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism