லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தமன்னாவின் த்ரில் ஸ்டோரி... நவம்பர் ஸ்டோரி

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா

#Entertainment

அல்ஸைமர்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிரபல க்ரைம் எழுத்தாளர், ஒரு கொலை, இதற்கு நடுவில் ஓர் அப்பா - மகள் பாசம்...

கடந்த சில தினங்களுக்கு முன் வெளி யான இந்த `நவம்பர் ஸ்டோரி' டிரெய் லரைப் பார்த்ததுமே, `அட, இது புதுசா இருக்கே’ என்கிற உணர்வு ஏற்படத் தவற வில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவுள்ள இந்த சீரிஸின் மூலமாக ஓடிடி தளத்திலும் முதன்முறையாகக் கால்பதிக்கிறது விகடன் டெலிவிஸ்டாஸ். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வி.ஐ.பி சேனலில் மே 20-ம் தேதி முதல் வெளியாகவிருக்கிறது `நவம்பர் ஸ்டோரி'.

ஓடிடியில் வெளியாகும் சீரிஸ் என்றாலே பெரும்பாலும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் தரத்தில் இருப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால் `நவம்பர் ஸ்டோரி' சீரிஸை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம் என்கிறார்கள் தயாரிப்புத் தரப்பில். அதெப்படி சாத்தியம்...?

தமன்னாவின் த்ரில் ஸ்டோரி... நவம்பர் ஸ்டோரி

கோலங்கள், திருமதி செல்வம், தெய்வமகள், நாயகி என்று 22 வருடங் களாக நம்பர் ஒன் சீரியல்களைப் படைத்து, சின்னத்திரையில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவரும் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராதிகா சீனிவாசனிடம் இதைக் கேட்டோம்.

``விகடன் எப்போதுமே கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். நவம்பர் ஸ்டோரியிலும் அதை கடைப்பிடித்திருக் கிறோம். அதிலும் த்ரில்லர் எனும்போது கூடுதல் கவனத்துடன் கையாண்டிருக் கிறோம். குறிப்பாக, பெண்களுக்கு த்ரில்லரில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அந்த வகையில் குடும்பத்துடன் கூடி உட்கார்ந்து பார்க்கிற த்ரில்லர்தான் நவம்பர் ஸ்டோரி. 'பார்த்தியா, அந்த ட்விஸ்ட்... சான்ஸே இல்லை' என்று குடும்பத்தில் ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறோம். முகம்சுளிக்கும்படியாக ஒரு காட்சிகூட இருக்காது.

முக்கியமாக சீரியலின் நாயகி பற்றி சொல்லியாக வேண்டும். இதுவரைக்கும் கிளாமர் ஹீரோயினாக அறியப்பட்டிருந்த தமன்னா, இந்த நவம்பர் ஸ்டோரியில் உங்கள் பக்கத்து வீட்டுப்பெண் என உணரும் அளவுக்கான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். கொலைக்குற்றத்தில் சிக்கிக்கொள்ளும் அப்பாவி அப்பாவைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் ஒவ்வொரு காட்சியும் செம ரியலிஸ்டிக். த்ரில்லர் படங்களுக்கு இணையாக இந்த ஃபேமிலி த்ரில்லரும் இருக்கைநுனிக்கு உங்களை வரவைக்கும். ஒவ்வோர் எபிசோடு முடியும்போதும், அடுத்து இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்ற கேள்விகளை உங்களுக்குள் நிச்சயம் ஏற்படுத்தும்.

காவல்துறை என்றாலே பெரும்பாலும் நெகட்டிவ் பிம்பத்தை ஏற்படுத்துகிற படங்கள்தான் அதிகம். சீரியல்களிலும் அப்படியே. ஆனால், நவம்பர் ஸ்டோரியில் காக்கியின் இமேஜ் வேறு மாதிரியாக இருக்கும். கொலைவழக்கை விசாரிக்கும் காவல்துறையினர், அதற்குரிய பொறுப்பிலிருந்து கொஞ்சம்கூட நழுவாமல், விலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, காவல்துறையின் துப்பறியும் செயல்பாடுகளை அப்படியே காட்சிப்படுத்தி யிருக்கிறோம். இது, காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நல்ல காவலர்களுக்கு மரியாதை சேர்ப்பதாகவும் இருக்கும்'' என்று பெருமிதத்துடன் சொன்ன ராதிகா,

``ஓர் ஆணை மையப்படுத்தியே செல்லும் வகையில்தான் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்கிற வழக்கமான எண்ணத்துடன் நவம்பர் ஸ்டோரியின் ஹீரோ, நாயகிதான் என்று முடிவெடுத்து கதையை மாற்றியமைத்தோம். காதல், கல்யாணம், கர்ப்பம் என்ற வழக்கமான பாதையில் இந்த நாயகியை உருவாக்கவில்லை. நன்கு படித்தவள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவை மீட்கும் அளவுக்கு புத்திசாலி என்றே வடிவமைத்திருக்கிறோம்'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.

தமன்னாவின் த்ரில் ஸ்டோரி... நவம்பர் ஸ்டோரி

``கதையில் வரும் அப்பா கேரக்டரை வடிவமைப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக அல்ஸைமர்ஸ் தொடர்பான புத்தகங் களை வாசிப்பது, பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி ஸ்டடி செய்வது எனக் களமிறங்கிச் செயல்பட்டார் கதாசிரியரும் அறிமுக இயக்குநருமான ராம் சுப்ரமணியன். அறிமுக இயக்குநரா என்று கேட்கும் அளவுக்கு த்ரில்லரை அத்தனை விறுவிறுப்பாக இயக்கி யிருக்கிறார்'' என்று இந்தக் கதைக்காக தங்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொருவரும் ஆர்வம்பொங்க உழைத்திருப்பதைப் பகிர்ந்து கொண்ட ராதிகா, நிறைவாகச் சொன்னது -

``அட, அரை மணி நேரம் போனதே தெரியலையே என்று உணரும் வகையிலேயே ஒவ்வோர் எபிசோடிலும் ஸ்டோரி சொல்லி யிருக்கிறோம்!’’

இதுதானே முக்கியம்!