Published:Updated:

`அசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.. ஏனென்றால்..!’- காரணம் பகிரும் பா.இரஞ்சித்

`இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித், `அசுரன்' மற்றும் `கைதி' திரைப்படங்கள் பற்றியும் பேசினார்.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

`பரியேறும் பெருமாள்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நீலம் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக வெளியாகவிருக்கிறது `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. தினேஷ், கயல் ஆனந்தி, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க, புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித், `அசுரன்' மற்றும் `கைதி' திரைப்படங்கள் பற்றியும் பேசினார்.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

``சொல்லக்கூடிய கதைகளென மட்டுமில்லாமல் , சொல்லமுடியாதென சொல்லப்படுகிற கதைகளையும் பேசவந்த ஆட்கள் நாங்கள். சமீபகால சூழலில் நிறைய நல்ல திரைப்படங்கள் வெற்றி அடைவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது. குறிப்பாக, `அசுரன்' படத்தினுடைய வெற்றி, மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கிறேன். இக்கால திரைப்படச் சூழலில், சமூகச் சூழலில் `அசுரனி'ன் வெற்றி நிறைய பேருக்கு நிறைய நம்பிக்கை தந்திருக்கிறது. அதிலும் கமர்ஷியல் ரீதியான வெற்றியென்பதை மிக அவசியமானதாகப் பார்க்கிறேன். `கைதி'யின் வெற்றியும் திரைப்படச் சூழலுக்கு மிக முக்கியமானது" என்றார். `அசுரன்' படம் வெளியான சமயத்தில், 'வெற்றிமாறன் வெர்சஸ் பா.இரஞ்சித்' என்கிற ரீதியில் சமூகவலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருந்த நிலையில், `அசுரன்' படத்தை பா.இரஞ்சித் பாராட்டியிருப்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.