Published:Updated:

"தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம்!" - பார்த்திபன் தொடர் - 26

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 26.

"தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம்!" - பார்த்திபன் தொடர் - 26

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 26.

Published:Updated:
பார்த்திபன்

"பிக்பாஸ் பார்த்தால் குடும்பங்கள் அழிந்துவிடும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் பிக்பாஸ் பார்க்கிறீர்களா, உங்களைக் கேட்டால் கமல்ஹாசன்போல் திறமையாகத் தொகுத்து வழங்குவீர்களா?''

- தாமரைச்செல்வி, ஊட்டி

"பிக்பாஸ் நிகழ்ச்சியை என்னால தொகுத்து வழங்க முடியுமான்னு எனக்குத் தெரியல. ஏன்னா கமல்சார்கூட கம்பேரிசன் பண்ண முடியாது. அவருடைய அனுபவம், அவரிடைய பேச்சுத்திறமை, அவருடைய மாஸ் எல்லாமே வேற மாதிரி. அவருக்கு இருக்க மாஸ், அவர் பண்ணிட்டிருக்கிற விஷயங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி கொடுக்குது. அவருக்கு எல்லாம் அமைஞ்சி வருதோன்னு தோணுது. அவர் உண்மையான பிக்பாஸ். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பண்ணா வேற மாதிரி தொகுத்து வழங்குவேன். ஆனால், கம்பேரிசன் இல்லாமல்! கம்பேரிசனுக்குள்ள போணோம்னா மாட்டிப்போம்.''

பார்த்திபன்
பார்த்திபன்

"டைரக்டர் கரு.பழனியப்பன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் `பார்த்திபன் சாரோட பல கதைகள் திரை வடிவம் காணாமலே நின்று விட்டது' எனச் சொல்லியிருந்தார். இனிமேல் எடுக்க வாய்ப்பு குறைவாக உள்ள அந்தக் கதைகளையோ அல்லது பட்ஜெட் காரணமாகத் தொடங்க இயலாத கதைகளையோ ஒரு(குறு) நாவல் வடிவில் கொண்டு வரலாமே? பார்த்திபனை ஒரு எழுத்தாளராக பார்க்கும் ஆவலில் இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.''

- ஆனந்த் ஷண்முகம், திருச்சி

பார்த்திபன்
பார்த்திபன்

"நாவலாக கொண்டுவர முடியுமா என்பது ரொம்ப நாவல் ஐடியா. ஒரு கதையை ஆரம்பிக்கும்போது அதுல பல கிளைக்கதைகள் ஆரம்பிச்சு அது போயிட்டே இருக்கும். ஒரு கதை, ஐந்து கதையாய் மாறுது. இப்ப நீங்க கேள்வி கேட்கிற இந்த நேரத்துல என்கிட்ட 100 கதைகள் இருக்கு. கரு.பழனியப்பன் என்னைப் பற்றி பாராட்டி சொன்ன விஷயங்களை நான் மறந்துட்டேன். ஏன்னா, அதை ஞாபகம் வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. அது என்னோட குணம். அவர் பேசினதைக் கேட்கும் போதே நான் ரொம்ப எமோஷனல் ஆனேன். அவருக்கும் அதை தெரியப்படுத்தினேன். நம்ம வாழ்க்கையில மிச்சப்படுகிறது நினைவுகள்தான். கரு.பழனியப்பனை யாராவது பாராட்டிப் பேசினால், புகழ்ந்தால் அது நம்மையே பேசுற மாதிரி தோணுது. ஒரு தாய்க்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அந்த மாதிரி. நீங்ககேட்ட கேள்விக்குத் திரும்பவும் வரேன். எல்லாத்தையும் எழுத்தா பதிவு பண்ணும்போது எனக்கும் ஆசையிருக்கு. எல்லாம் ஒரு நாள் நாவல் ஆகும்."

"ஆயிரத்தில் ஒருவன் 2.0 அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நீங்கள் அந்தப்படத்தில் நடிக்கிறீர்களா, தனுஷ் நடிப்பதாக செல்வராகவன் போஸ்டர் வெளியிட்டிருக்கிறாரே?"

- மாறன், சென்னை

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

"'ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2' பற்றி சரியான தகவல் சொல்ல மிகச் சரியானவர் இயக்குநர் செல்வராகவன்தான். லேட்டஸ்ட்டா அந்தப் படத்துக்கு கிடைச்சிருக்க மிகப்பெரிய பாராட்டு அவருக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். நானும் அவர்கிட்ட பலமுறை 'எப்ப சார் ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 எடுக்கப்போறீங்க'ன்னு கேட்டிருக்கேன். செல்வராகவன், `கிளைமாக்ஸ்ல கார்த்தி தூக்கிட்டு வர்றக்குழந்தை பெரியவன் ஆனதுக்கு அப்புறம் அது நீங்கதான்'னு சொல்லித்தான் என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். இதைப்பற்றி ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். இப்ப தனுஷ் பண்றதா அறிவிப்பு வந்திருக்கு. ரொம்ப சந்தோஷம். ஏற்கெனவே நான் பண்ண கேரக்டரையே மிஸ்டர் தனுஷ்தான் பண்றதா இருந்தது. ஏதோ காரணத்துக்காக நான் பண்ணேன். அந்தப் படம் ஏற்கெனவே இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ல இருக்கற படம். இப்ப தனுஷ் மிகப்பெரிய இன்டர்நேஷனல் ஸ்டார். இன்னும் அந்தப் படம் பெரிய ப்ராஜெக்ட்டா மாறும். இந்த மாதிரி படங்களுக்கு பட்ஜெட்தான் பிரச்னையா இருக்கும். அது இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்.

'என்னயிருந்தாலும் கிங்குக்கு பார்த்திபன்தான் சரியான சாய்ஸ்'னு ட்விட்டர்ல நிறையப் பேர் பாராட்டியிருந்தாங்க. ரொம்ப சந்தோஷம். மீண்டும் அந்தப் படத்துல கார்த்தி இருக்கணும், பார்த்திபன் இருக்கணும்னும் நிறைய பதிவுகள் பார்த்தேன். ட்விட்டர்ல நிறைய கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாததனால, விவாதங்களை ஒரு பாசிட்டிவ் நோட்டுக்கு மாத்தாலமேன்னு, 'அவரும் இருந்தால் பவரும் கூடுமே'ன்னு ட்வீட் பண்ணியிருந்தேன். எங்களுக்கு மேல அவரும் ஒரு கதாபாத்திரத்துல நடிச்சா நல்லாயிருக்குமேன்ற அர்த்தத்துல சொன்னேன். பெரிய படத்துல நிறைய ஸ்டார்ஸ் நடிக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்படி வந்ததுன்னா தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம். அதேசமயம், ஏற்கெனவே ஒரு வாய்ப்பு கொடுத்தற்காக செல்வராகவனை நான் எப்பவும் நன்றி பாராட்டிக்கிட்டே இருப்பேன்!"

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.