Published:Updated:

``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்!" - பார்த்திபன் தொடர் - 6

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் 6-வது பகுதி.

``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்!" - பார்த்திபன் தொடர் - 6

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் 6-வது பகுதி.

Published:Updated:
பார்த்திபன்

''இன்றைய 2கே கிட்ஸின் காதல்/ காமம் எப்படிப் பார்க்குறீங்க?''

- ரெனாட்டோ, நியூ ஜெர்ஸி

''அடுத்தவங்க காதலை, காமத்தை நான் பார்க்குறதேயில்லை. என் காதலுக்கே நேரம் சரியா இருக்கு. 2கே கிட்ஸில் 1 கே காதலாகவும், 1 கே காமமாவும் இருக்குனு நினைக்கிறேன். அதுலேயே ஒரு காமம், காதல்னு கே இருக்கு. காதல்ன்றது அழகா மூடிமறைக்கப்பட்ட காமம். இதுபற்றி என்னுடைய 'கிறுக்கல்கள்' புத்தகத்துல எழுதியிருப்பேன். காதல்ன்ற பழத்தை உடைச்சோ, உறிச்சோ பார்த்தா உள்ள காமம்கிற விதை இருக்கும். ஆனால், நேரா காமத்தை விதைச்சா காதல் முளைக்காது. காதலுக்கு ஒரு அழகான முற்றுப்புள்ளி, பெருமூச்சுதான் காமம்னு நான் நினைக்கிறேன். காமம்ன்றது மூடிமறைக்கப்பட்ட விஷயம்தான். அது மறைக்கப்படாம இருக்கிறது கொஞ்சம் உறுத்தலாத்தான் இருக்கு. இப்ப இருக்கிற சூழல்ல காதலா, காமமா எது டாமினேட் பண்ணுதுன்னு சரியா சொல்ல முடியல. 70 வயசுப் பெரியவரை, 18 வயசுப் பெண்ணோட பார்த்தேன். அதுல காமத்தைவிடக் காதல்தான் இருக்குதோன்னு தோணும். காதல், காமம்னு எல்லாமே ஒவ்வொரு இடத்துக்கும் ஏத்தமாதிரி மாறுபடுது. ஒரே உதாரணம், ஒரே தத்துவத்துக்குள்ள இது அடங்குறது இல்ல. 2கே கிட்ஸின் காதல், காமத்தை நான் வரவேற்கிறேன்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஹாய் பார்த்... பாய் பெஸ்ட்டி, ஒன் நைட் ஸ்டாண்ட், ஃபிளிங் என இப்போது பல ரிலேஷன்ஷிப்களில் பல வகைகள் வந்துவிட்டன... ஒவ்வொன்றையும் பற்றி உங்கள் ஸ்டைலில் விவரிக்க முடியுமா?''

- கவிதா, ஆவடி

பார்த்திபன்
பார்த்திபன்

''இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு உதாரணத்தோடு சொல்லலாம்னு ஆசைப்படுறேன்.

பாய் பெஸ்ட்டி... சிலர் ஜிம்முக்கு ரெகுலரா போவாங்க, வருவாங்க... ஆனா வொர்க் அவுட் பண்ணமாட்டாங்க. இவங்களுக்கு ஜிம்முக்கு போயிட்டு வர்றது மட்டும்தான் பெருமை.

ஒன் நைட் ஸ்டாண்ட்... ஒரே ஒருநாள் ஜிம்முக்கு ட்ரையல் க்ளாஸ் போய் பார்க்குறவங்க... ஒரே ஒரு நாள் எக்ஸர்ஸைஸ் பண்ணிப்பார்க்குறேன் செட் ஆச்சுன்னா அப்படியே கன்டின்யூ பண்ணிப்பார்க்கலாம், இல்லைன்னா விட்டுடலாம்னு யோசிச்சு முடிவெடுப்பாங்க.

ஃப்ளிங்... இவங்க 1 மாசம், 3 மாசம், 6 மாசம்னு பணம் கட்டிட்டு ஜிம்முக்குப் போறவங்க. அங்கப்போயிட்டு பெருசாலாம் வொர்க் அவுட் பண்ணாம, ஸ்ட்ரெச்சஸ் அது இதுன்னு கொஞ்சம் பண்ணுவாங்க.

இது இல்லாம ஃப்ரெண்ட்ஷிப் வித் பெனிஃபிட்ஸ்னு ஒண்ணு இருக்கு. அது ஜிம் ட்ரெய்னரையே கரெக்ட் பண்ணிட்டு, ஜிம் ட்ரெய்னிங்கும் எடுத்துக்கிறது.

எல்லாத்தையும் விட முக்கியமானது லைஃப் டைம் மெம்பர்ஷிப் வாங்கி ஜிம்ல சேர்றது. இதுதான் முறையான திருமணங்கள். எது புத்தாசலித்தனமான ஜிம் வொர்க் அவுட்னு இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் மிகச்சிறப்பா தேர்ந்தெடுக்குறாங்க. வாழ்த்துகள்!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி... இவங்க யாரையாவது வைத்து படம் இயக்குவதற்கு உங்களுக்கு ஐடியா உள்ளதா?

- V.S.P. ஆதவன், ஈரோடு

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

''ஐடியாக்களும் நிறைய இருக்கு. அவர்களை வைத்து இயக்குவதற்கான விருப்பமும், திறமையும் இருக்கு. சிவகார்த்திகேயனை ஒரு நிகழ்ச்சிலப் பார்த்தேன். பக்கத்து பக்கத்து சீட்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். அப்ப நாம வெள்ளிக்கிழமை சந்திக்கலாம்னு அவர் சொல்ல, நான் உங்க ஆபிஸுக்கு வரேன்னு சொன்னேன். அவர் இல்லல்ல நான் உங்க ஆபிஸுக்கு வந்து பார்க்குறேன்னு அவர் சொன்னார். ஆனா, அந்த வெள்ளிக்கிழமை இன்னும் வரலை. சீக்கிரம் வரும்னு நம்புறேன்.

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் பண்ணும்போது விஜய் சேதுபதிகிட்ட, உங்களோட கால்ஷீட் ஒரு அரை மணி நேரம் வேணும்னு சொன்னேன். எங்க சார் வரணும், எப்ப சார் வரணும்னு கேட்டுட்டு காலைல பைக்ல வந்து நின்னுட்டார். அப்போ அவரைப் பார்க்கும்போது ஆரம்ப காலங்கள்ல ரஜினி சாரைப் பார்த்த மாதிரி இருந்தது. சாதாரண சட்டைகளோடதான் ரஜினி சார் அப்பலாம் இருப்பார். நைட்ல பார்க் பென்சிலேயே கூடத்தூங்கிடுவார். விஜய் சேதுபதியோட நிறைய பேசியிருக்கேன். 'பெண்டாட்டி தேவை' படம் திரும்பவும்னு பண்ணணும்னு அவருக்கு ஆசை. இருவரும் சேர்ந்து சிறப்பான படம் செய்றதுக்கான பாக்கியம் இருக்கு. அந்த அற்புதத்தருணங்களை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பார்த்திபன்.''

''பாரதிராஜா டு பாக்யராஜ்...

பாக்யராஜ் டு பார்த்திபன்...

பார்த்திபன் டு?

- ரா. ஜெயசீலன், சென்னை

நடிகர், இயக்குநர் பாக்யராஜ்
நடிகர், இயக்குநர் பாக்யராஜ்

''அப்படி ஒரு டு-வே வேணாம்னு நினைக்கிறேன். அங்க இன்னொரு பேரைப்போட விருப்பமே இல்லை. அந்தப் பெயருக்கு அடுத்த பெயரும் பார்த்திபனாவே இருக்கணும்னு ஆசை. இந்த இளைஞர்களோட போட்டியில ஜெயிக்கணும்னு நினைக்கிறேன். அது சாதாரண விஷயம் இல்லை. இந்த கொரோனா டைம்ல அதிக இம்யூனிட்டி தேவைப்படுற மாதிரி, இதுக்கும் இம்யூனிட்டி கொஞ்சம் அதிகமா இருக்கணும். அதைக்கூட்டிக்க என்ன பண்ணணும்கிற முயற்சிகள்லதான் தொடர்ந்து இருக்கேன். அடுத்த தலைமுறைகளுக்கான கதைகள்தான் தொடர்ந்து பண்ணணும்னு நினைக்கிறேன். இப்ப அடுத்து எழுதிட்டிருக்கிற 'இரவின் நிழல்'கூட அப்படித்தான். சில நேரம் இந்தப் போட்டிகளுக்குள்ளேயே இருக்கக் கூடாது, ரொம்ப முன்னாடி போயிடணும்னு தோணும். பார்த்திபனுக்குப் பக்கத்துல நீங்க யார் பேரை வேணா போட்டுக்கலாம். ஆனா, நான் அந்த பேர் பக்கத்துலயும் அடுத்து பார்த்திபனைக் கொண்டுவரணும்னு ஓடுவேன்.

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.