Published:Updated:

"விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!"- `பவானி' விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

"இந்த உடலை பல்வேறு கதாபாத்திரங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அதில் விஜய் சேதுபதியும் ஒருவன்!"

"விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!"- `பவானி' விஜய் சேதுபதி

"இந்த உடலை பல்வேறு கதாபாத்திரங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அதில் விஜய் சேதுபதியும் ஒருவன்!"

Published:Updated:
விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கதாபாத்திரத்தில் நாம் நடிக்கவேண்டும் என்ற ஆசை ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

"எனக்கு ராஜாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதுவும் கற்பனை உலகத்தில் உள்ள ராஜா, இயல்பான குணங்களை உடைய ராஜா என இரு வேறு குணங்களில் நடிக்க ஆசை. முன்பெல்லாம் இந்தக் கேள்விக்கு ‘எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு உணர்வு இருக்கிறது. எல்லாமே ஸ்பெஷல்’ என்று கூறுவதுண்டு. ஆனால் இப்போது ராஜாவாக நடிக்க வேண்டும் என்றே கூறுவேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?

"அந்த ஆசை எனக்கு அடிக்கடி வரும். ஆனால், அதன் மீது எனக்கு இன்னும் பயம் இருக்கிறது. ஏனென்றால் அது அதிக பொறுப்புகள் உடைய வேலை. இப்பொறுப்பினால் மற்றவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துக்கொள்ள வேண்டும். எடுக்கப்போகும் காட்சியை பற்றி இயக்குநருடன் ஆலோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் யாராவது இடைமறித்தாலே அவர்களை நான் திட்டியுள்ள சம்பவங்கள் எல்லாம் நடந்ததுண்டு."

இதுவரை நீங்கள் நடித்ததிலேயே உங்கள் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரம் என்று எதை கூறுவீர்கள்?

"அப்படித் தனியாக பிரித்து சொல்லவே முடியாது. இதே போன்றொரு கேள்விக்கு வேறொரு நேர்காணலில் இவ்வாறு கூறினேன். 'இந்த உடலை பல்வேறு கதாபாத்திரங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அதில் விஜய் சேதுபதியும் ஒருவன்' என்று. எனவே ஒரு கதாபாத்திரம் சார்ந்து என்னால் யோசிக்க முடிந்துவிட்டால் அக்கதாபாத்திரமாகவே நான் மாறிவிடுகிறேன்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சகுனி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது எனக்கு பேக்ச கொடுக்கப்பட்டதை தாண்டி நான் கூடுதலாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டால் நான் சகுனியாக மாறும் இடம் அதுதான் என்று நினைக்கிறன். உங்களை போல சிந்தித்து இரண்டு வார்த்தை பேசினால் நானும் பர்வீன் சுல்தானாவாக மாறிவிடுகிறேன்."

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்?

"மிக நல்ல மனிதர். என்னை மிக அழகாக பார்த்துக்கொண்டார். படப்பிடிப்பின் போது எனக்காக பகுதிகளை எனக்கேற்றார் போல மேம்படுத்தவேன். மேலும் அது விஜய் சாரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணமும் என்னிடம் இருந்தது. அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அதேகாட்சியை வேறு கோணத்தில் அணுகும் ஐடியாவுடன் அவர் வந்திருப்பார் என்பதால் அவரிடம் இது குறித்து பேசுவேன். அவரோ 'நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நண்பா' என்று முழு சுதந்திரத்தை கொடுத்து விடுவார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. லோகேஷ் என் தம்பி போன்றவர். அதனால் எல்லாமும் சேர்ந்து மிக அழகாக உருவானது அப்படம்.

இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். இத்திரைப்படத்தில் என் கதாபாத்திரத்திற்கென்று ஒரு ஐந்து இடங்களில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கும். அவை சற்று கூடுதலாக இருக்கிறது என்று விஜய் சார் மட்டும் நினைத்திருந்தால் அதை உடனே கட் செய்திருக்க முடியும். மேலும் டப்பிங்கில் நான் கொம்பு வைத்து பேசும் காட்சியை பார்த்து கைதட்டி சிரித்து விஜய் சார் பாராட்டினார் என்று சொன்னார்கள். அதேபோல இடைவேளையில் 'ஐ யம் வெயிட்டிங்' என்று நான் கூறும் வசனமும் அவரால் பாராட்டப்பட்டது."

முழு நேர்காணலை கீழுள்ள லிங்கில் காணுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism