
எங்க வீட்ல இருக்கிற செல்லப்பிராணிகள்கூட விளையாடுவேன்.
இந்தச் சின்னத்திரைப் பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


இர்ஃபான், நடிகர்
பிடித்த பாட்டு - ராஜராஜ சோழன் நான், தென்மதுரை வைகை நதி
அடிக்கடி விட்டுச் செல்லும் பொருள் - Wallet
பிடித்த இசைக்கருவி - கிட்டார்... அதைப் பார்க்கும்போது ரொமான்டிக் ஃபீல் இருக்கும்!
பிடித்த எழுத்தாளர் - கண்ணதாசன், சந்திரபாபு
அடிக்கடி விளையாடுவது - பேஸ்கட் பால், கிரிக்கெட்
பிடித்த பைக் - அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லை!


அக்ஷயா, நடிகை
பிடித்த பாட்டு - வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் `காலத்துக்கும் நீ வேணும்’ பாட்டும், `கல்லூரி சாலை’ பாட்டும் ரொம்பப் பிடிக்கும்!
அடிக்கடி விட்டுச் செல்லும் பொருள் - Wallet
பிடித்த இசைக்கருவி - என்கிட்ட ஒரு கிட்டார் இருக்கு. ஆனா எனக்கு வாசிக்கத் தெரியாது. பிடிக்கும்னு வச்சிருக்கேன்.
பிடித்த எழுத்தாளர் - வாசிப்பு அதிகமில்லை.
அடிக்கடி விளையாடுவது - ஃபேமிலியோடு ரம்மி, கேரம் போர்டு, தாயம் விளையாடுவோம்.
பிடித்த பைக் - புல்லட்


சங்கீதா, நடிகை
பிடித்த பாட்டு - கே.ஜி.எப் படத்தில் வருகிற `மெஹபூபா’ பாடல்.
அடிக்கடி விட்டுச் செல்லும் பொருள் - கார் சாவி, ஏ.டி.எம் கார்டு
பிடித்த இசைக்கருவி - புல்லாங்குழல்
பிடித்த எழுத்தாளர் - புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லைங்கிறதனால அந்த ஏரியா பற்றித் தெரியாது!
அடிக்கடி விளையாடுவது - எங்க வீட்ல இருக்கிற செல்லப்பிராணிகள்கூட விளையாடுவேன்.
பிடித்த பைக் - கே.டி.எம்