Published:Updated:

மம்மூட்டியின் பாராட்டு... பிள்ளைகளின் தோழி... இயற்கை வாழ்வியல்! - ஊர்வசியின் பர்சனல் பக்கங்கள்

ஊர்வசி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வசி

என் கணவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எங்க ரெண்டு பேருக்குமே இயற்கை விவசாயத் துல அதிக ஆர்வம் உண்டு.

மம்மூட்டியின் பாராட்டு... பிள்ளைகளின் தோழி... இயற்கை வாழ்வியல்! - ஊர்வசியின் பர்சனல் பக்கங்கள்

என் கணவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எங்க ரெண்டு பேருக்குமே இயற்கை விவசாயத் துல அதிக ஆர்வம் உண்டு.

Published:Updated:
ஊர்வசி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வசி

கொரோனாவின் பிடியில் தவித்த கடந்த ஆண்டில், மக்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்தது ஊர்வசியின் ஜனரஞ்சக நடிப்பு. ‘சூரரைப் போற்று’வில் யதார்த்தமான அம்மாவாக நெகிழ வைத்தவர், ‘மூக்குத்தி அம்ம’னில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். ‘புத்தம்புதுக் காலை’ வெப் சீரிஸிலும் பெரிதாக ஸ்கோர் செய்தார். அவள் விகடனின் ‘எவர்கிரீன் நாயகி’ விருதை வென்றார். பாராட்டுகள், விருதுகள், புதிய பட வாய்ப்புகளுடன் எனர்ஜியும் புத்துணர்வும் கூடியிருக்கின்றன ஊர்வசிக்கு. சினிமா முதல் பர்சனல்வரை மனம்விட்டுப் பகிர்ந்த ஊர்வசி உடனான சந்திப்பு, நமக்கும் உற்சாகத்தைக் கடத்துகின்றன.

“சுதா கொங்கரா என்னோட க்ளோஸ் ஃபிரெண்டு. அவங்க இயக்கின முதல் படமான ‘துரோகி’யில நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். நாங்க ரெண்டு பேரும் இணைஞ்சு வேலை செய்யணும்னு பல வருஷமாவே பேசிட்டிருந்தோம். ‘சூரரைப் போற்று’ல சூர்யா நடிப்பது முடிவானதும், உடனடியா என்னை கமிட் பண்ணிட்டாங்க. தன்னோட படத்துல, எல்லா நடிகர்கள்கிட்டயும் தான் எதிர்பார்க்கிற நடிப்பு வரும்வரை சுதா விடவே மாட்டாங்க. ‘ஐ வான்ட் ஊர்வசி ஆக்டிங். இன்னொரு முறை டேக் போலாம்’னு சொல்லிச் சொல்லியே, யதார்த்தமான தாயாக என்னை உருமாத்தினாங்க. அதனால, ‘சூரரைப் போற்று’க்காக எனக்குக் கிடைக்கும் எல்லாப் பாராட்டுகளும் சுதாவுக்கும் சேரும்.

மம்மூட்டியின் பாராட்டு...
பிள்ளைகளின் தோழி...
இயற்கை வாழ்வியல்! - ஊர்வசியின் பர்சனல் பக்கங்கள்

‘மூக்குத்தி அம்மன்’ பட அனுபவம் வித்தியாசமானது. கதையை என்கிட்ட சொல்லி, ‘உங்க விருப்பப்படி டயலாக் பேசி நடிங்க’ன்னு முழு சுதந்திரம் கொடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி. ரெண்டு அக்காக்கள், ரெண்டு தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமா என்னோட இளமைக்காலத்துல வளர்ந்தேன். அம்மா வுடன் அரட்டை அடிச்சது, அவங்களைக் கட்டிப்பிடிச்சு தூங்கினதுனு நாங்க செஞ்ச குறும்புகளையும் சேட்டைகளையும் மனசுல வெச்சுத்தான் என் காட்சிகளை வடிவமைச்சேன். வெளியூர் பயண அலைச்சல், கொரோனா பயம், படங்கள் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுறதுல சிக்கல்னு கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன்.

இந்தச் சூழல்ல என்னோட மூணு புராஜெட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி, மக்கள் கொடுத்த வரவேற்பு என்னைத் திக்கு முக்காட வெச்சுடுச்சு. சினிமா, குடும்ப நண்பர்கள் ஏராளமானோர் வாழ்த்தினாங்க. அதுல, மம்மூட்டி சாரின் அழைப்பு ரொம்பவே ஸ்பெஷல். அப்பப்போ வெளியிடங்கள்ல சந்திச்சாலும், தனிப்பட்ட முறையில் அவர் கிட்ட போன்ல பேசி பல வருஷங்கள் ஆயிடுச்சு. திடீர்னு ஒருநாள் போன் செய்தவர், ‘மூக்குத்தி அம்மன்’ல கலக்கிட்டீங்க. குடும்பமா படம் பார்த்து, எல்லோரும் ரொம்பவே சிரிச்சு என்ஜாய் பண்ணினோம்’னு மனம் விட்டுப் பாராட்டினார். வெப்சீரிஸ் எனக்குப் புது அனுபவம்னாலும், சுதா கொங்கராவுக்காகவே அவங்க இயக்கின ‘புத்தம்புதுக்காலை’யில சந்தோஷமா நடிச்சேன். கடந்த வருஷம் பல வகையிலும் சிரமத்துல இருந்த மக்களுக்கு, என்னோட நடிப்பு சிரிக்கவும் ரசிக்கவும் வெச்சது பெரிய கொடுப்பினை. கூடவே, எனக்கான பொறுப்பும் கூடியிருக்கு”

- படப்பிடிப்புகளுக்கான தொடர் பயணங் களுக்குத் தயாராகிவிட்ட ஊர்வசி, தென் னிந்திய மொழிகள் நான்கிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மம்மூட்டியின் பாராட்டு...
பிள்ளைகளின் தோழி...
இயற்கை வாழ்வியல்! - ஊர்வசியின் பர்சனல் பக்கங்கள்

மகன் இஷானைக் கொஞ்சியபடியே இல்லத்தரசி அனுபவங்களைப் பகிர்பவர், ``ஷூட்டிங் ஸ்பாட் தவிர, மற்ற எல்லா இடங்கள்லயும் இயல்பான மனுஷியா இருக்கவே ஆசைப்படுவேன். சின்ன வயசுல இருந்தே வீட்டு வேலைகளைச் செஞ்சு பழக்கப்பட்டதால, பணியாளர்கள் வராத லாக்டெளன் காலகட்டம் எனக்குச் சிரமமாவே இருக்கல. பையனுக்கு ஹோம்வொர்க் சொல்லிக்கொடுக்கறேன். லாக்டெளன்ல, மகனுடன் ஆன்லைன் கிளாஸ்ல நேரம் செலவிட்டதுதான் ஜாலியான அனுபவம். என் மகன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் தினமும் தெருவுல விளையாடுவான். டீக்கடை, பிளாட்ஃபார கடைனு பல இடங்களுக்கும் மகனைக் கூட்டிட்டுப்போய் நடைமுறை வாழ்க்கையைக் கத்துக்கொடுப்பார் என் கணவர். மகள் இப்போ பெங்களூர்ல வேலை செய்யுறா. பையன் ரெண்டாவது படிக்கிறான். இவங்க ரெண்டு பேருக்கும் இடையேயான வயசு வித்தியாசம் அதிகம்னாலும், ரொம்பவே பாசமா இருப்பாங்க. பிள்ளைகளுடன் நானும் ஃபிரெண்ட்லியா இருப்பேன்'' என்று சொல்லும் ஊர்வசியின் முகத்தில் தாய்மை உணர்வு பூரிக்கிறது.

மம்மூட்டியின் பாராட்டு...
பிள்ளைகளின் தோழி...
இயற்கை வாழ்வியல்! - ஊர்வசியின் பர்சனல் பக்கங்கள்

தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே விவசாய ஆர்வம் குறித்துப் பேசுபவர், “என் கணவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எங்க ரெண்டு பேருக்குமே இயற்கை விவசாயத் துல அதிக ஆர்வம் உண்டு. 2011-ல் குடிவந்த போதே இந்த வீட்டைச் சுத்தி செடிகள் வளர்க்க ஆரம்பிச்சோம். வீட்டுக்குத் தேவை யான காய்கறிகளுடன், பலா, மா, எலுமிச்சை, நெல்லினு பல்வேறு மரங்களையும் வளர்க்கி றோம். வீட்டுக்குப் பின்பக்கத்துல கட்டுமான வேலைகள் நடக்குது. அதனால மாடித்தோட்டம் அமைக்கத் தயார் பண்ணிட்டிருக்கோம். பலா மரத்துல சில வருஷமா காய்கள் வருது. பழமா சாப்பிடுவதுடன், பலா காய்களைச் சமையலுக் கும் பயன்படுத்துவேன். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நெல்லி, ஊசி மிளகாய்ல ஊறுகாய் செய்வேன். என் ஊறுகாய்களையும், இட்லிப் பொடியையும் உரிமையோடு கேட்டு வாங்கும் சுதா கொங்கரா, அவங்க வீட்டுல தயாரிக்கும் உணவுகளை எனக்குக் கொடுத்து அனுப்பு வாங்க. கேரளாவுல கணவரின் குடும்பத்துல இயற்கை விவசாயம் நடக்குது. நேரம் கிடைக்கும்போது அங்க போய் விவசாயப் பணிகளைக் கவனிப்போம். முடிஞ்ச வரைக்கும் இயற்கை உணவுப் பொருள்களைப் பயன் படுத்துறதுடன், மண்பாண்டங்களையே அதிகம் பயன்படுத்துறோம். இயற்கை வாழ் வியல், தற்சார்பு வாழ்வியலே இனியதுங்கிற விழிப்புணர்வு அதிகரிக்கணும்”

- நடிப்பைத் தாண்டி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையிலும் சகலகலாவல்லியின் பன்முகத்திறன் பிரகாசிக்கிறது.