Election bannerElection banner
Published:Updated:

``சமந்தா செம ஸ்வீட் அண்டு சிம்ப்பிள்!'' - போட்டோகிராபரின் ஸ்பெஷல் ஆல்பம்! #HBDSAMANTHA

சமந்தா
சமந்தா ( படங்கள்: கிரண்ஷா )

சினிமா கரியர், திருமண வாழ்க்கை, தனது செல்ல நாய்க்குட்டி என பிஸியாக இருக்கும் சமந்தா (எ) சாமுக்கு இன்று 33-வது பிறந்தநாள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் சில ஸ்வீட்டிக்களுக்கு மட்டும்தான் ஸ்பெஷல் இடம் தருவார்கள். தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து பத்து வருடங்கள் கடந்தும் அந்த ஸ்பெஷல் இடத்தில் தமிழ்நாட்டின் செல்ல மகளாக இன்னும் அப்படியே இருக்கிறார் சமந்தா. `மாஸ்கோவின் காவேரி' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சமந்தா, அடுத்து `பாணா காத்தாடி’ மூலம் `யாருப்பா இந்தப் பொண்ணு?’ என திரும்பிப் பார்க்க வைத்தார். க்யூட் சிரிப்பும், குழந்தை முகமுமாய் சமந்தா மட்டுமல்ல ஜெஸ்ஸி, நித்யா, வேம்பு என இவர் நடித்த பல கதாபாத்திரங்களும், படங்களுமே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக, சமந்தாவின் கரியர் கிராஃப் புரட்டி பார்த்தால் அவரது இந்த வளர்ச்சி செம ஸ்டெடி அண்டு மாஸ்

சமந்தா
சமந்தா
படங்கள்: கிரண்ஷா
samantha
samantha
samantha
samantha
samantha
samantha

சினிமா கரியர், திருமண வாழ்க்கை, தனது செல்ல நாய்க்குட்டி என பிஸியாக இருக்கும் சமந்தா (எ) சாமுக்கு இன்று 33-வது பிறந்தநாள். லாக் டெளன் சூழலால் தன் கணவர் சைதன்யா செய்த ஸ்பெஷல் கேக்குடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர, பத்திக்கிச்சு வைரல். இதுபோலவே, சமந்தாவின் பல வைரல் புகைப்படங்களுக்கு சொந்தக்காரரான செலிபிரிட்டி போட்டாகிராபர் கிரண் ஸா-விடம் சமந்தாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசினேன்.

``சமந்தா எனக்கு விஜய் சார் மேனேஜர் மூலமாதான் அறிமுகமானாங்க. `அடுத்த நாள் போட்டோ ஷூட் இருக்கு ரெடியாகிக்கோ’ அப்படினு போன் கால் வந்தது. யாரு என்னன்னுலாம் கேட்டுக்கலை. அங்க போனதுக்குப் பிறகுதான் அது சமந்தான்னு தெரியும். `இரும்புத்திரை’ படம் வெளியாகறதுக்கு முன்னாடி ஒரு படத்துடைய பிரஸ் மீட்டுக்காக வந்திருந்தாங்க. உண்மைய சொல்லணும்னா, நான் அதுக்கு முன்னாடி நிறைய செலிபிரிட்டிஸுக்கு போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன்.

ஆனா, சமந்தா போட்டோ ஷூட் பண்ணி, அவங்களுடைய சோஷியல் மீடியா பக்கத்துல நான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்ததுக்குப் பிறகுதான் எனக்கு ஒரு பெரிய வெளிச்சம் கிடைச்சது. அவங்களை நான் எடுத்த போட்டோஸ் ரசிகர்களுக்கும் செலிபிரிட்டீஸுக்கும் அந்த சமயத்துல ரொம்ப பிடிச்சு இருந்தது. நிறைய செலிபிரிட்டீஸ் பர்சனலா `எனக்கும் இந்த மாதிரி போட்டோ ஷூட் பண்ணணும்’னு மெசேஜ் பண்ணாங்க. அதுக்குப் பிறகுதான், இப்போ டாப்ல இருக்கற கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா, அனுபமான்னு பல செலிபிரிட்டி ஹீரோயின்ஸை போட்டோ ஷூட் பண்ண வாய்ப்பு வந்தது. என்னுடைய பெயரும் வெளிய ஒரு பிராண்டா தெரிய ஆரம்பிச்சது. அந்த வகையில சாம் என்னைக்குமே எனக்கு லக்கி சார்ம்.

சமந்தாவுடன் கிரண்ஷா
சமந்தாவுடன் கிரண்ஷா
samantha
samantha

இதுவரைக்கும் நாலஞ்சு போட்டோ ஷூட் சாம்க்காக பண்ணியிருப்பேன். செலிபிரிட்டிங்கற எந்த ஒரு தலைக்கனமும் இருந்ததில்லை. எப்போ மீட் பண்ணாலும், செம ஃப்ரெண்ட்லியா பேசுவாங்க. நான் எடுத்த எல்லா போட்டோஸுமே அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். `எந்த போட்டோ எடுக்கறது எதை விடறதுனே தெரியலையே, செமையா வொர்க் பண்ணியிருக்க!’னு ஒவ்வொரு போட்டோஷூட் போதும் சொல்லிட்டே இருப்பாங்க. போட்டோஷூட் பண்ணலாம் இந்த நேரத்துக்கு வான்னு மெசேஜ் பண்ணினா, கரெக்டா அந்த நேரத்துக்கு ரெடியா இருப்பாங்க. ஒவ்வொரு முறையும் எதாவது வித்தியாசமா முயற்சிக்கணும்னு ஆர்வமா இருப்பாங்க. அவங்களுடைய இந்த ஒத்துழைப்புதான் போட்டோஸ் அழகா வரக் காரணம். சில ஷூட்ஸ்லாம் அவங்க கூட பத்து நிமிஷம்தான் இருக்கும். அதுக்குள்ளயே அவ்வளவு க்ளிக்ஸ் அழகா வந்துருக்கும். வேலைன்னு வந்துட்டா சாம் ரொம்பவே சின்சியர்.”

சாம் கூட மறக்க முடியாத போட்டோ?

சமந்தா
சமந்தா
samantha
samantha

``சாம் கூட நடந்த முதல் ஷூட்தான். ஏன்னா, முதல் வேலையே அவங்களுக்குப் பிடிச்சுப் போனதாலதான, அடுத்தடுத்து எனக்கு வாய்ப்பு தந்துட்டு இருக்காங்க. ஒருமுறை அவங்க கிட்ட, `உங்க போட்டோஸ் ஷேர் பண்ணினப் பிறகுதான் எனக்கு ஒரு பெரிய அடையாளமே கிடைச்சது. என்னை பிஸியாக்கிட்டீங்க’னு சொன்னேன். அதைக்கேட்டு சிரிச்சுக்கிட்டே, `அப்படி எல்லாம் இல்லை. உன்னுடைய திறமைதான் நீ மேல வரக்காரணம். முன்னவிட இப்ப பயங்கர பிஸியாகிட்டன்னு கேள்விப்பட்டேன். நல்லா பண்ணு’னு விஷ் பண்ணாங்க.

அதுக்குப் பிறகு ஒரு டீத்தூள் விளம்பரத்துக்காக ஸ்பாட்ல ஷூட் பண்ணப் போயிருந்தேன். போட்டோஷூட்ல எப்படி சின்சியரா இருந்தாங்களோ, அதைவிட பலமடங்கு அங்க ஸ்பாட்ல சின்சியரா இருந்தாங்க. பர்சனலா எனக்கு ரொம்பப் பிடிச்ச போட்டோஷூட் அது. இந்த லாக்டெளன் சூழலால அது வெளியிட முடியாம இருக்கு. வேற லெவல்ல இருப்பாங்க சாம். போட்டோஸ் வெளிவந்து பாக்கும்போது உங்களுக்கே புரியும்.''

உங்களுக்கு பிடிச்ச சமந்தா படங்கள்?

சமந்தா
சமந்தா
samantha
samantha

``அவங்களுடைய எல்லா படங்களுமே பார்த்திருக்கேன். `தெறி’, `ஓ பேபி’, `யூடர்ன்’, `பாணா காத்தாடி’ இப்படி சொல்லிட்டே போலாம். செலிபிரிட்டீஸ்கூட பழக ஆரம்பிச்சதும் நமக்குள்ள இருக்க ஃபேன் பாய் அவங்களுக்கு நண்பனா மாறிடுவான். நம்ம மைண்ட் செட் அவங்க கூட நட்பாதான் தொடரும். ஆனா, அதையெல்லாம் தாண்டி அவங்களுடைய ஃபேன்பாயா ரொம்ப ரசிச்சு பார்த்த படம், `நீதானே என் பொன்வசந்தம்.’ ''

சமந்தா பத்தி எங்களுக்குத் தெரியாத ஒரு சீக்ரெட்?

சமந்தா
சமந்தா

``புதுப்புது விஷயங்களை கத்துக்கறதுல அவங்களுக்கு ஆர்வம் ரொம்ப அதிகம். ஒரு முறை விருது விழாக்குப் போயிருந்தபோது அவங்களை போட்டோ எடுத்து உடனே வாட்ஸ்அப் பண்ணேன். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், போட்டோ எடுத்த விதம் பத்தி நிறைய கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. அதேமாதிரி அவங்களுக்கு புக்ஸ் படிக்கறது ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை அவங்க வீட்டுக்குப் போயிருந்தபோது, புத்தகங்களுக்கு மட்டுமே பெரிய இடம் ஒதுக்கியிருந்தாங்க. முன்னயே சொல்லிருந்த மாதிரி, செலிபிரிட்டிங்கற எந்த ஒரு தலைக்கனமும் இருக்காது. போட்டோஷூட்போது, அவங்க வர்றதுக்கு தாமதம் ஆனா கூட, நம்மகிட்ட வெயிட் பண்ண வெச்சதுக்கு மன்னிப்பு கேப்பாங்க. என்னுடைய கல்யாணம் அப்போ, சமந்தாவுடைய கல்யாண நகைகள் பார்த்துட்டு என்னுடைய மனைவி அதுமாதிரி வேணும்னு கேட்டாங்க. அது எங்க கிடைக்கும்னு தெரிஞ்சிக்க சமந்தாவுக்கு மெசேஜ் பண்ணினேன். உடனே, அது பத்தின எல்லா விவரங்களும் மெசேஜ்ல சொன்னாங்க. இன்னைக்குக் கூட பிறந்தநாளுக்காக விஷ் பண்ணி, அவங்களுக்கு மெசேஜ் போட்டுருந்தேன். `தேங்க்யூ’னு ஸ்மைலியோட ரிப்ளை வந்தது. அந்த ஸ்வீட் அண்டு சிம்பிள் ஃப்ரெண்ட்லி அணுகுமுறைதான் சம்மு” எனப் புன்னகையுடன் முடித்தார்!

பிறந்தநாள் வாழ்த்துகள் சமந்தா!

samantha
samantha
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு