Published:Updated:

`இசை எல்லைகளைக் கடந்து நம்மை அழைத்துச் செல்கிறது!'- அல்லு அர்ஜுனைக் கவர்ந்த `புட்டபொம்மா' டிக் டாக்

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

`புட்டபொம்மா' பாடலுக்கு இரு மாற்றுத்திறனாளிகள் நடனமாடி டிக் டாக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் 2019 முழுக்க படங்களில் நடிக்காமல் இருந்த அல்லு அர்ஜுன், கதைகள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த இடைவெளிக்குப் பிறகு, த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான `அலா வைகுந்தபுரமுலோ' படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை அந்தப் படம் பூர்த்தியும் செய்தது.

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் கோலிவுட் பிரபலம்!

ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தமன்தான் இசையமைப்பாளர். குறிப்பாக, அப்படத்தில் இடம்பெற்ற `புட்டபொம்மா' பாடல் டிக் டாக் விரும்பிகளின் கன்டன்டானது. காரணம், அந்தப் பாடலில் வரும் நடனம். ஏராளனமானோர் இந்தப் பாடலை டிக் டாக் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் நடிகை ஷில்பா ஷெட்டியும் ஒருவர். தற்போது இந்தப் `புட்டபொம்மா' பாடலுக்கு இரு மாற்றுத்திறனாளிகள் நடனமாடி டிக் டாக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த அல்லு அர்ஜுன், "எல்லா புட்டபொம்மா வீடியோக்களைவிடவும் இந்த வீடியோ என் மனசுக்கு நெருக்கமாகிவிட்டது. இசை எல்லா எல்லைகளையும் கடந்து நம்மை அழைத்துச் செல்கிறது" என்று கூறி அந்த வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார்.

தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தனது 20 வது படத்தை நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு