Published:Updated:

Exclusive: Mallipoo பாடல் பாடியபோது ரஹ்மான் சொன்னது... - பாடகி மதுஸ்ரீ நேர்காணல்

பாடகி மதுஸ்ரீ

பாடலைப் பாடிய பிறகு நான் முதல் முறையாகக் கேட்கும்போது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என நினைத்தேன். - மதுஸ்ரீ

Exclusive: Mallipoo பாடல் பாடியபோது ரஹ்மான் சொன்னது... - பாடகி மதுஸ்ரீ நேர்காணல்

பாடலைப் பாடிய பிறகு நான் முதல் முறையாகக் கேட்கும்போது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என நினைத்தேன். - மதுஸ்ரீ

Published:Updated:
பாடகி மதுஸ்ரீ
சினிமா பாடல்ளும் தமிழர்களின் வாழ்வும் பிரிக்கவே முடியாதது. பல பாடல்களும் மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் வைபாகிக் கொண்டிருக்கும் பாடல்தான் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கிற `வெந்து தணிந்தது காடு' படத்தின் `மல்லிப் பூ' பாடல். தனது தனித்துவமான குரலால் அந்தப் பாடலைப் பாடியிருப்பார் பாடகர் மதுஸ்ரீ. பலருடைய பிளேலிஸ்டில் இன்று வரை எவெர்கிரீனாக இருக்கின்ற 'மருதாணி', 'மயிலிறகே மயிலிறகே','கண்ணன் வரும் வேளை' ஆகிய பாடல்களை பாடியவரும் இவர் தான்.கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடனத்துடன் பாடல் பாடி சென்னையிலிருந்து விடைபெற்றவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். தனது கலைப் பயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மல்லிப் பூ' பாடல் உருவான விதம் பற்றிச் சொல்லுங்கள்...

பாடகி மதுஸ்ரீ
பாடகி மதுஸ்ரீ

``ரஹ்மான் சார் போன் செய்து இந்தப் பாடலை பற்றிச் சொன்னார். இந்தப் பாடலுக்காக அவர் என்னை அழைத்தது அலாதி மகிழ்ச்சி. இந்தப் பாடலை பாடுவது சுலபமல்ல. பல ரிதமிக் ஏற்றங்கள் இருந்தது. ரஹ்மான் சார்,எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். அந்த சுதந்திரம் நாம் கூடுதலாக பலவற்றை நிகழ்த்த வழிவகுக்கும். `நல்லா வரும் பாடுங்கன்னு' ரஹ்மான் சொன்னார். பாடலாசிரியர் `தாமரை' அற்புதமாகப் பாடல் வரிகளை எழுதியுள்ளார். எனக்கு தமிழ் தெரியாது. தாமரை எனக்கு தெளிவாக விளக்கினார். பாடலைப் பாடிய பிறகு நான் முதல் முறையாகக் கேட்கும்போது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என நினைத்தேன். நான் நினைத்தது போலவே இது பிளாக் பஸ்டர் பாடலாகத் தற்போது வலம் வருகிறது அது மகிழ்ச்சி"

தமிழில் ,நெடுஞ்சாலை திரைப்படத்தின் `இவன் யாரோ' பாடலுக்குப் பிறகு ஒரு சிறிய இடைவேளி எடுத்து விட்டு தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறீர்கள்.இந்த இடைவேளி ஏன் ?

பாடகி மதுஸ்ரீ
பாடகி மதுஸ்ரீ

``இதற்கு குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை. நான் இசைத்துறையில் இருக்கிறேன். இசையின் வடிவம் மாற்றம் பெற்று விட்டது, பல புதிய பாடகர்கள் அறிமுகமாகிறார்கள்.எனக்கு தமிழ் தெரியாது. நான் மற்ற மொழி பாடல்களில் பிஸியாக இருந்துவிட்டேன். கொரோனா காலகட்டத்தில் ஒரு தமிழ் இளம் இசையமைப்பாளர் வந்து ஒரு பாடல் ரெக்கார்டிங் செய்தார்."

`மல்லிப் பூ' பாடல் வழக்கமாக இருக்கும் மெலடி நம்பர்களுகளிலிருந்து வேறுபடுகிறதே,அந்த மேஜிக் எப்படி ?

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

``அதற்கு ரஹ்மான் சார் தான் காரணம்.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் பாடுவதற்கு தொடங்கியிருக்கிறேன்.தமிழ் மக்கள் அதிகளவில் மெலடி பாடல்களை விரும்பி கேட்கின்றனர். மெதுவான இசை நம்பர்களாக இருந்தாலும் எனக்கு பிரச்னையில்லை.வெற்றி என்பது மிகவும் முக்கியம்.இப்போது மக்களிடம் பாரட்டுகளை பெற்று வருகிறேன். அந்த பாரட்டுகள் எனக்கு ஊக்கமளிக்கிறது."

`மயிலிறகே மயிலிறகே','மருதாணி',கண்ணன் வரும் வேளை' ஆகிய பாடல்கள் இப்போது வரை எவர்கிரீனாக உள்ளது. அவை உருவான விதம் பற்றி சொல்லுங்கள் ?

மது ஸ்ரீ
மது ஸ்ரீ

``ஆம்,அது மட்டுமின்றி ஆய்த எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற `சண்டகோழி', ஜி படத்தின் `டிங் டாங்' பாடல்களும் அப்படி தான்.'மயிலிறகே' பாடலிற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.'மயிலிறகே' பாடலை முதலில் நான் வேறு வடிவில் பாடினேன்,ரஹ்மான் சார் வேறு வடிவில் பாடுமாறு கேட்டார். 3 மணி நேரமாக ஒருவரியிலிருந்து நகராமல் இருந்தேன். `ஃபன்னாக எதாவது செய்யுங்கள்' என ரஹ்மான் சார் கூறினார். நான் ஜாலியாக ஒரு வரி பாடினேன். அந்த வரியைக் கேட்டு ரஹ்மான் சார் கோபப்படுவார் என நினைத்தேன். ஆனால், அவர் `இது நன்றாக இருக்கிறது. இதைப் பாடுங்கள்' எனக் கூறினார்.

அதன் பிறகு அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. மக்களுக்காகத் தான் பாடல்களை பாடுகிறேன். அவர்கள் அதைக் கொண்டாடும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மல்லிப் பூ பாடலை லைவ் ஆக சென்னையில் பாடச் சொல்லி அழைத்தார்கள்.அந்த மேடையில் படகுழுவினர் முன்னால் நடனத்துடன் பாடலை பாடினேன்,அந்த கூட்டம் தான் எனக்கு ஊக்கமளித்தது.தமிழில் இதற்கு முன்னால் வந்த என்னுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ரஹ்மான் சார் இசையில் மட்டும் 35 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன். ரஹ்மான் சார் என்னிடம், `தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்' என கூறினார். நான் கற்றுக்கொள்கிறேன் என அவரிடம் கூறினேன்."

சென்னையில் விடைபெற்ற பிறகு உங்களது இன்ஸ்டாகிராம் பக்கதில், `சவுத் காலிங் அகைன்' என குறிப்பிட்டிருந்தீர்கள். சென்னை உங்களுக்கு எவ்வளவு நெருக்கம்?

``சென்னையிலிருந்து பலர் என்னை அழைக்கின்றனர்.விரைவில் நான் மீண்டும் சென்னைக்கு வருவேன். இன்னும் பல பாடல்கள் தமிழில் பாடுவேன்.எனக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். தமிழர்களின் இசை வடிவங்களும் அவர்களது உணவு வகைகளும் எனக்கு பிடிக்கும்."

``நீங்கள் வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ், ஆகியோர் இசையிலும் பாடியுள்ளீர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?"

ஜி.வி பிரகாஷ்
ஜி.வி பிரகாஷ்

``ஜி.வி பிரகாஷ் மிகவும் திறமை வாய்ந்தார். அற்புதமாக இசையமைத்து வருகிறார்.ஜி.வி பிரகாஷை முதன் முதலில் அவர் சிறுவயதில் இருக்கும் போது சந்தித்தேன். அவரின் அம்மாவும் எனக்கு நெருங்கிய நண்பர்.யுவன் ஷங்கர் ராஜா,அற்புதமான மனிதர். திறமையான இசையமைப்பாளர். எனக்கு வித்யா சாகரின் இசை மிகவும் பிடிக்கும். தமிழில் வித்யாசாகர் இசையில் `நிலாவிலே நிலாவிலே' என்னும் பாடலை தான் முதன் முதலில் பாடினேன்.எனது இசைப் பயணத்தின் ஆரம்ப காலகட்டங்களில் நான் பாடிய பாடல்களின் சி.டி யை அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பினேன்.அதைப் பார்த்துதான் வித்யாசாகர் என்னை அழைத்தார். சென்னை வந்தேன்.தமிழ் கடினமாக இருக்கும் பாடமுடியாதென்று நினைத்தேன். வித்யாசாகர், `கவலைப்படாதீர்கள், நான் உங்களைப் பாட வைக்கிறேன்' எனக் கூறினார். அதன் பின்பு அந்த பாடலை பாடினேன். அதுவும் சூப்பர் ஹிட் ஆனது"

சுஜாதா என்ற உங்களின் பெயர் எப்படி மது ஸ்ரீ என மாறியது?

மது ஸ்ரீ
மது ஸ்ரீ

``தமிழில்,சுஜாதா என்கிற பெயரில் பாடகர் இருக்கிறார்.இந்தியிலும் சுஜாதா என்கிற பெயரில் பாடகர் இருக்கிறார்.அதனால் மக்கள் குழப்பமடைந்தனர்.என்னுடைய கடினமான நேரங்களில்,`உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும்' எனக் கூறினார்கள். ரஹ்மான் சாருக்கும் இந்த பெயர் பிடித்திருந்தது.நான் மீண்டும் சுஜாதா என பெயரை மாற்றிய போது,'வேண்டாம் மது ஸ்ரீ என்றே பெயர் வைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்.இந்தியில் எனது பல ஹிட் பாடல்கள் சுஜாதா என்கிற பெயரில் வெளிவந்தது.ஆனால்,ரஹ்மான் சார் ,`உங்களுக்கு மது ஸ்ரீ என்கிற பெயர் தான் நன்றாக இருக்கிறது' என ஸ்ட்ரிக்டாக இருந்துவிட்டார்." என்று பேசி முடித்தவர் விரைவில் சென்னை வருகிறேன் என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.