Published:Updated:

`நிலவைக் கொண்டு வா' இன்ஸ்டா ரீல்ஸை எனக்கும் அனுப்பினார்கள் - வைரல் வீடியோ குறித்து உன்னிகிருஷ்ணன்

உன்னிகிருஷ்ணன்

'நிலவைக் கொண்டு வா' இன்ஸ்டா ரீல்ஸை அழகா பண்ணிருக்காங்க. 'வாலி' வெளியாகி அஜித் சாரை மீட் பண்ணப்போ,'உங்கக் குரல் எப்பவும் பெஸ்ட். என்னோட ஃபேன்ஸ் எல்லோருமே உன்னிகிருஷ்ணன் குரல் உங்களுக்கு ரொம்பவே சூட் ஆகுதுன்னு சொல்றாங்க' என்றார்.

`நிலவைக் கொண்டு வா' இன்ஸ்டா ரீல்ஸை எனக்கும் அனுப்பினார்கள் - வைரல் வீடியோ குறித்து உன்னிகிருஷ்ணன்

'நிலவைக் கொண்டு வா' இன்ஸ்டா ரீல்ஸை அழகா பண்ணிருக்காங்க. 'வாலி' வெளியாகி அஜித் சாரை மீட் பண்ணப்போ,'உங்கக் குரல் எப்பவும் பெஸ்ட். என்னோட ஃபேன்ஸ் எல்லோருமே உன்னிகிருஷ்ணன் குரல் உங்களுக்கு ரொம்பவே சூட் ஆகுதுன்னு சொல்றாங்க' என்றார்.

Published:Updated:
உன்னிகிருஷ்ணன்
பிரமாண்ட படங்கள், பாடல்களுக்கு நடுவே, விக்கல்ஸ் யூடியூபினர் செம்ம நக்கல் அடித்து வெளியிட்ட 'வாலி' படத்தின் 'நிலவைக் கொண்டு வா' வீடியோ சமூக வலைதளங்களில் காமெடி கதகளி ஆடிக்கொண்டிருக்கிறது.

தேவாவின் 'வாவ்' ரக இசைக்கும், அனுராதா ஶ்ரீராம் - உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரல்களுக்கு நிலாவே துள்ளிக்குதித்து வந்து டூயட் ஆடும் அளவுக்கு பாடியிருந்தார்கள். ஜேம்ஸ் வெப்பின் புகைப்படங்களுக்கு நடுவே இந்த வீடியோவும் வேற லெவலில் வைரலாகி எல்லா கால கிட்ஸ்களின் இதயத்தையும் மீண்டும் கிளறிவிட்டிருக்கிறது. இப்படி, சீரியஸாகவும் ரொமான்ஸாகவும் பாடிய பாடலை சிரிப்பாக்கி வைரல் ஆக்கியிருக்கிறார்களே.. எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம். செம்ம ஜாலியாகப் பேசத் தொடங்கினார்.

அஜித்-சிம்ரன்
அஜித்-சிம்ரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நண்பர்கள் பலர் அந்த இளைஞர்களின் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அதைப் பார்த்ததும் சந்தோஷமா சிரிச்சி ரசிச்சேன். ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. இன்றைய இளைஞர்கள் எப்படியெல்லாம் கற்பனைப் பண்றாங்க. என்னென்னல்லாம் ஐடியாக்கள் தோன்றுகிறது என்பதையே வீடியோ உணர்த்தியது. 'நிலவைக் கொண்டு வா', பாடல் அப்போ சூப்பர் ஹிட் பாடல். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போ திரும்பவும் பாப்புலராக்கி விட்டார்கள். இதற்கு, தேவா சாருக்கும் எஸ்.ஏ சூர்யா சாருக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்" என்று உற்சாகமுடன் பேசும் உன்னிகிருஷ்ணன், 'நிலவைக் கொண்டுவா' பாடல் பாடிய நினைவுகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"எஸ்.ஜே சூர்யா சார் ரொம்ப இன்னோவேட்டிவா ட்ரை பண்ணுவார். அந்தமாதிரி அமைந்ததுதான் இந்தப் பாடல். 'உன்னி நீங்க ஸ்வீட்டா மெலடியா பாடி விட்டுடுங்க. அனுராதா ஒரு சேஞ்ச் வாய்ஸில் ரஃப்பா பாடுவாங்க'ன்னு சொன்னார் தேவா சார். அவரோட இசையில்தான் நான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளேன். அனுராதா பத்தி சொல்லவே வேணாம். என்னோட பெஸ்ட் ஃபிரண்ட். நாங்க ரெண்டு பேரும் ஒன்னா, ஒரே குருகிட்டதான் கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டோம். ஜூலை 9 ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள். அந்தளவுக்கு எங்களுக்குள்ள ஒற்றுமை அதிகம்.

அனுராதா ஶ்ரீராம்-உன்னிகிருஷ்ணன்
அனுராதா ஶ்ரீராம்-உன்னிகிருஷ்ணன்

'இந்தமாதிரி கான்ட்ராஸ்ட் வேணும்னு சொல்லி என்னை சாந்தமாவும், அனுராதாவை வித்தியாசமாவும் தனித்தனி ரூமில் பாட வைத்தார் தேவா சார். தனியாக பாடியதால், அனுராதா எப்படி பாடினார் என்பதை நான் பார்க்கவில்லை. ஆனால், படம் மட்டுமல்லாது 'வாலி' படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அந்த நேரத்தில் வெளியான அஜித் சார் படங்களுக்கு நிறைய பாடல்களை பாடியுள்ளேன். 'வாலி'யில் 'நிலவைக் கொண்டு வா' மட்டுமல்லாது 'ஏப்ரல் மாதத்தில்' பாடலையும் நான்தான் பாடினேன். அதுவும், ஹிட்டானது.

'வாலி' வெளியாகி அஜித் சாரை மீட் பண்ணப்போ, 'உங்கக் குரல் எப்பவும் பெஸ்ட். என்னோட ஃபேன்ஸ் எல்லோருமே உன்னிகிருஷ்ணன் குரல் உங்களுக்கு ரொம்பவே சூட் ஆகுதுன்னு சொல்றாங்க' என்றார். அவரின் பாராட்டு எனர்ஜி கொடுத்ததுபோல் இருந்தது. 'ஆசை' படத்தின் 'மீனம்மா' பாடலை நானும் அனுராதவும்தான் பாடினோம். அது எப்பவும் என்னோட ஃபேவரைட். விஜய் சாருக்காக பாடின 'ரோஜா பூந்தோட்டம்' பாடலும் ஃபேவரிட்.

'நிலவைக் கொண்டு வா' வீடியோவை அனுப்பினால் நான் தப்பாக எடுத்துக்கொள்வேனோ என்று பலருக்கு அனுப்புவதில் பயம். இதில், என்ன இருக்கிறது?. இந்த மாதிரியெல்லாம் வீடியோ வரும்போது மனசே லேசாகிடுது. எல்லோரும் பார்த்துவிட்டு சந்தோஷமா சிரிச்சிருப்பாங்க. இதைவிட, எனக்கு வேற என்ன வேணும்?" என்கிறார் உன்னிகிருஷ்ணன்.