Published:Updated:

பொயட்டு தனுஷ் அப்டேட்ஸ், துல்கரின் பப்ஜி அடிக்‌ஷன், பூனைக்குட்டி ரைஸா! சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

#SocialMediaRoundup

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

பொயட்டு தனுஷ் அப்டேட்ஸ், துல்கரின் பப்ஜி அடிக்‌ஷன், பூனைக்குட்டி ரைஸா! சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

Published:Updated:
#SocialMediaRoundup

திரை பிரபலங்கள் உட்பட பலரையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது பப்ஜி கேம். தனுஷுக்கு பப்ஜி விளையாடுவது மிகவும் இஷ்டம் என அவருடன் பணியாற்றிய பலரும் கூறியிருக்கிறார்கள். தற்போது துல்கர் சல்மானை பப்ஜி ஆட்கொண்டுவிட்டது. இந்த லாக் டெளனில் வீட்டிற்குள்ளேயே வொர்க் அவுட், சினிமாக்கள், வீட்டு வேலைகள் செய்வது என செலிபிரிட்டிகள் தங்களின் தினசரி வேலைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அப்படி துல்கர் சல்மான் பப்ஜி விளையாடுவதை வீடியோ எடுத்து, "பப்ஜி விளையாடும்போது நண்பர்கள் அனைவரும் நம்மைச் சுற்றி இருப்பது போலவே இருக்கிறது. சூப்பர் ஃபன். இதில் ஏதேனும் டிப்ஸ், ட்ரிக்ஸ் தெரிந்தால் எனக்கு கமென்ட்டில் சொல்லுங்கள்" என சக பப்ஜியன்ஸை அழைத்திருக்கிறார். பப்ஜியில் பத்மஶ்ரீ வாங்கியதுபோல் நினைக்கும் பலர் தங்களுக்குத் தெரிந்த டிரிக்ஸை கமென்ட் செய்து வருகின்றனர்.

வடிவேலு - விவேக் இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இருவரும் சேர்ந்தே பல காமெடிகளை நமக்கு கொடுத்திருக்கின்றனர். வடிவேலுவைப் பற்றி பல பேட்டிகளில் பெருமையாகப் பேசும் விவேக், "வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!" என்று கேப்ஷனோடு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். தவிர, தன்னுடைய மீம் டெம்ப்ளேட் ஒன்றைப் பதிவிட்டு, "ஒரு படத்தை வெச்சுக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க! யாரை எல்லாம் ஓட்டுறீங்க! மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க" என மீம் கிரியேட்டர்களை பாராட்டியுள்ளார் விவேக்.

பொதுவாக தான் நடிக்கும், இசையமைக்கும் படங்களுக்கு தன்னுடைய ட்வீட்டில் அப்டேட் கொடுத்துவிடுவார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். `ஜெயில்' படத்துக்காக கபிலன் வைரமுத்து எழுதிய `காதோடு' என்ற பாடலை தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ளது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பெரும்பாலான பாடல்களை தனுஷே எழுதி பாடியிருப்பது, `சூரரைப் போற்று' படத்தின் மீதமுள்ள மூன்று பாடல்கள் ஆன் தி வே... என மூன்று படங்களின் அப்டேட்டுகளையும் அளித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

`பொன்மகள் வந்தாள்' படம் இன்று வெளியாகிவிட்டது. நேற்று சூர்யா - ஜோதிகா இருவரும் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. அவர்களுக்கு திருஷ்டி சுத்திப்போடச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு. அந்த உரையாடலில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் பெரிய ரசிகர்கள் என சூர்யா, ஜோதிகா சொன்னது ஹைலைட். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது என்றனர். இதைக் கண்ட ஆயுஷ்மான் "This Made my Day" என ட்வீட் செய்துள்ளார்.

நடிகை ரைசாவுக்கு பூனைகள் என்றால் அத்தனை பிரியம். கேமராவில் ஃபில்டர் போட்டால் கூட அதிகம் பூனை போல் காது, மீசை இருப்பதைத்தான் விரும்பி புகைப்படம் எடுத்து அப்லோட் செய்வார். இந்த லாக் டெளனில் பூனை, நாய் போன்ற உயிரினங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறது.

View this post on Instagram

Surprise !!!

A post shared by Raiza Wilson (@raizawilson) on

இந்த நிலையில், கறுப்பு நிற பூனைக்குட்டியை தத்தெடுத்துள்ளார், ரைசா. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ட்விட்டரில் கேட்டவர், தானே அதற்கு `லிலோ' எனப் பெயர் வைத்துள்ளார். மீதமுள்ள க்வாரன்டீன் முழுக்க லிலோவுடன்தானாம்.