மையிட்ட கண்ணும் பொட்டு வெச்ச முகமுமா யார் இந்தப் பெண் குழந்தைனு பார்க்கறீங்களா..? அட... நான்தாங்க விஜய்! ' என் செல்லக் கன்னுக்குட்டி'னு அப்பா கொஞ்சிட்டு இருக்கார்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடைவீதிக்குப் போகணும்னு என் முதல் கேர்ள் ஃப்ரெண்ட் சொன்னதும் என் சைக்கிள் பின் சீட்டில் ஏத்திக்கிட்டேன்... ( அய்யே... அம்மாதான் என் கேர்ள் ஃப்ரெண்ட்! )
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பவே ஒரு ஹீரோ ரேஞ்ச்சுக்கு போஸ் எல்லாம் கொடுத்து போட்டோ எடுத்துட்டேன்!
ஏரோப்ளேன் ஓட்டணும்னுதான் அடம்பிடிச்சேன். ' இந்த வயசுல அதெல்லாம் கூடாதுடா கண்ணா'னு இதை வாங்கித் தந்தாங்க.
இளையராஜா அங்கிள் இசையில் அம்மா பாடறாங்க. அங்கிளுக்கும் அப்பாவுக்கும் நடுவில் குட்டியூண்டா தெரியற தலை என்னோடதுதான்.
அம்மா பாடகி. மாமா எஸ்.என். சுரேந்தரும் பாடகர். இசை என்மேலும் ஆட்சி செலுத்தாமல் இருக்குமா..? பாடுவேன்... கிடாரும் வாசிப்பேன்.
மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.... இன்றும்கூட நேரம் கிடைத்தால் நண்பர்களுடன் லூட்டி!
- ஏசுவும் லட்சுமியும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எப்போதும் உண்டு. படத்தில் என்னருகில் நிற்கும் என் தங்கை வித்யா... சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள்... நெஞ்சம் மறப்பதில்லை...
மணமகளே, மருமகளே.... வா, வா... ' என்று என் அப்பா ( ஏர்போர்ட் டில் ) வரவேற்பது சங்கீதாவைத்தான்.

ஐயையோ... நான் சிகரெட்டெல்லாம் பிடிக்காத சமர்த்துப் பையனுங்க! சிகரெட்டுக்குப் பட்டைநாமம்னு சிகரெட்டாலேயே காட்டறேன்... அவ்வளவுதான்!
(27.10.2000 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)