காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி..!

றுப்பு வெள்ளை திரைப்படங்கள் மெள்ள மெள்ள மக்களின் மனங்களை ஆக்கிரமித்து, கொட்டகைக்குக் கூட்டம் கூட்டமாக ஈர்த்த காலம் அது. வெள்ளை ஸ்கிரீனில் அவரது முகத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரண்டு வருவார்கள். அவர்தான் அந்தக் காலத்து லேடி சூப்பர் ஸ்டார், டி.ஆர்.ராஜகுமாரி.

ராஜகுமாரி

ராஜகுமாரியின் இயற்பெயர் ராஜலட்சுமி (ராஜாயி என்று அழைப்பர்). தஞ்சாவூரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஏழ்மையான குடும்பம். தாயார் ரங்கநாயகி புகழ்பெற்ற இசை மேதை. இவருடைய பாட்டி குஜலாம்பாளும் சிறந்த இசை மேதை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாட்டிக்கும், அம்மாவுக்கும் இவரைப் பெரிய இசைக்கலைஞராக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்..! 

குடும்பச் சூழல் ராஜாயியை சினிமா என்னும் பிரமாண்டத்துக்குள் செல்ல வைத்தது. சினிமாவில் நுழைந்து, உழைப்பால் முன்னேறிவிடலாம் என்பதை செயலில் காட்டிய தன்னம்பிக்கை மனுஷி.

முதல் தமிழ்த் திரைப்படம், `குமார குலோத்துங்கன்'. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும்போது, தயாரிப்பாளர் ராஜாராவ் வைத்த பெயர்தான், டி.ஆர்.ராஜகுமாரி. ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. 

வர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம், `கச்ச தேவயானி'. அந்தப் படம், தனியோர் இடத்தைப் பெற்றுத்தந்தது. பல படங்களில் நடித்து, ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்தார். 

ராஜகுமாரி

மிழ் நட்சத்திரமாக மின்னிய ராஜகுமாரியை, சர்வேதச அளவில் அறிமுகப்படுத்தியவர், எஸ்.எஸ்.வாசன். `சந்திரலேகா' திரைப்படம் உச்சத்துக்குக் கூட்டிச் சென்றது. படத்தில் இவர் ஆடிய ஜிப்ஸி நடனம், முத்திரைப் பதித்தது. காதல்.. சிரிப்பு.. ஏக்கம்.. வலி என அனைத்தையுமே தன் நடிப்பின் மூலம் தீர்த்துக்கொண்ட நடிகை.

வருடைய தம்பி, டி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து ஒரு சில படங்களையும் தயாரித்திருக்கிறார். டி.ஆர்.ராமண்ணாவும் சிறந்த தயாரிப்பாளராக சினிமா உலகில் தடம் பதித்தவர். இதுமட்டுமன்றி, ராஜகுமாரி ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். கலை உலகில் எல்லா முடுக்குகளிலும் தன் திறமையை மின்னச் செய்த காந்தக் கண்ணழகி ராஜகுமாரி.

1954-ம் ஆண்டு வெளியான `மனோகரா' படத்தில் `வசந்தசேனை' என்கிற வில்லியாக, நடிப்பில் அடுத்த பரிமாணத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ராஜகுமாரி. அந்தக் கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.கே. ராதா, டி.ஆர். மகாலிங்கம் எனக் கறுப்பு வெள்ளை காலத்தின் சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்துப் புகழ்பெற்றவர், ராஜகுமாரி. மிகவும் எளிமையாக அனைவரிடனும் பழகுவது இவரது கூடுதல் அழகு..!

ராஜகுமாரி

ன் 41 வயதில் நடிப்புக்கு `குட்'பை சொல்லிவிட்டார். திருமணம் என்கிற கட்டமைப்பை தகர்த்து நடிப்பில் ஆர்வமாகத் திகழ்ந்த இவர், திரைத்துறையிலிருந்து வெளிவந்த பின்னரும் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கவில்லை. தம்பி டி.ஆர்.ராமண்ணா குடும்பத்துடன் இருந்துவிட்டார்.

`சென்னையில் தன் பெயரில் திரையரங்கைத் திறந்த முதல் தமிழ் நடிகை' என்கிற பெருமையைப் பெற்றவர் ராஜகுமாரி.

ம்பீரமும் நளினமும் கலந்த நடிப்பு. எத்தகைய கதாபாத்திரத்தையும் ஊதித் தள்ளும் திறமையினால், கறுப்பு - வெள்ளை திரைப்படங்களின் ராணியாக வலம்வந்தார். எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவருடைய எண்ணம் நடிப்பைத் தவிர வேறு எதிலுமே இருந்ததில்லை.

ன் 77-வது வயதில் மரணமடைந்தார் ராஜகுமாரி. அவர் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் பலரின் மனங்களில் இருக்கின்றன.

 

`லேடி சூப்பர் ஸ்டார்' என அந்தக் காலத்திலேயே புகழ்பெற்ற அழகிக்கு இன்று (மே 5) பிறந்தநாள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!