Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனிக்கும் இளமை தொடங்கி ரிஷிவந்தியம் வெற்றி வரை- விஜயகாந்தின் வாழ்க்கைப்பயணம்

விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான்!

வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும், இயேசு-மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும், முருகனும், பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர்தர்கா வுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங் களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்துவணங் குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன், இப்போது கோயிலுக்குச் செல்வது இல்லை!

எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள்!

தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-ல் 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985-ம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோ வும் செய்யாதது!

பள்ளியில் படிக்கும்போது ஃபுட்பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். 

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... 'இனிக்கும் இளமை' அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான்!

இதுவரை விஜயகாந்த் 150க்கு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு!

'செந்தூரப் பாண்டி'யில் விஜய்யோடு நடித்து, 'பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்குக் கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்துக்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழாவில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்!

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜய்காந்த் தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள்!

செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத் துக்குப் பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.

இதுவரை இரண்டே படங்க ளில் சிறு வேடங்களில் விஜய காந்த்தாகவே வந்திருக்கிறார். ஒன்று, ராமநாராயணன் அன்புக் காக 'விஸ்வநாதன் ராமமூர்த்தி', அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க 'மாயாவி'!

கமல், ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை 'விஜி' எனவும், நெருங்கிய நண்பர்கள் 'பாஸ்' எனவும், கட்சி வட்டாரத்தில் 'கேப்டன்' எனவும் அழைக்கிறார்கள்!

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக் கிறார் ஜானகி எம்.ஜி.ஆர். அதோடு, எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி!

முதலில் வாங்கிய டி.எம்.எம் 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயகாந்த்.

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால், விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி-யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்க உதவி செய்திருக்கிறார்!

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100 பேராவது சாப்பிடு வார்கள். ஒவ்வொரு நாளும் அலு வலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிற வர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்!

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்க உதவியிருக் கிறார்!

ஹிந்தியில் தர்மேந்திரா, அமிதாப், தெலுங்கில் என்.டி.ஆர், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன்,சங்கர் நாக், மலையாளத்தில் சத்யன் படங்கள் என்றால் விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும். சத்யனின் 'கரை காணா கடல்' அவருக்கு மிகவும் பிடித்த படம்!

எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து இருக்கிறார் விஜயகாந்த். இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணிப்பதில் சந்தோ ஷப்படுவாராம்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராம நாரயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில்ஜோடி யாக நடித்தவர் நளினி!

தேமுதிக.வை  ஆரம்பித்து அரசியலில் காலடி எடுத்து வைத்தவர் விருத்தாசலம் தொகுதியில் வென்று சட்டசபையில் தனி ஆளாக நுழைந்தார். தற்போது பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் கோலோச்சி வருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close