Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்!

கைச்சுவை அரசியை தமிழகம் இழந்து விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனோரமா உறுப்பினர் போலத்தான். கிட்டத்தட்ட தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து விட்டது போன்ற உணர்வில் தமிழகம் தத்தளிக்கிறது. நகைச்சுவை அரசி மனேராமா பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா தனது இளமை பற்றி கூறியுள்ளார். 

 தமிழ் சினிமாவில் அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார். 

டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எழுத்தாளர் சோ', மனோராமாவை 'பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டு பேசினார்.

தில்லானா மோகனம்பாள், அனுபவி ராஜா அனுபவி,சம்சாரம் அது மின்சாரம், சின்னக்கவுண்டர், நடிகன், சின்னதம்பி, கிழக்கு வாசல் போன்ற படங்களில் நடிகர் மனோரமா முத்திரை பதித்திருப்பார். 

1985ஆம் ஆண்டு மனோரமா ஆயிரம் படங்களில் நடித்து விட்டார். மொத்ததில் 1500 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். 

2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 

1964ஆம் ஆண்டு மனோரமா- நடிகர் எஸ்.எம். ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 1966ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார் மனோரமா.  ஒரே மகன் பூபதி.

பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் 'ஆச்சி' என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது. 

'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற படத்தில் 'தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே 'என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. 

உணவுக் கட்டுப்பாடு ஆச்சிக்கு அதிகம். செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாது. புதன், ஞாயிறு கண்டிப்பாக அசைவம் உண்டு!

நெருங்கிய தோழிகளான எம்.என்.ராஜம், ஸ்ரீப்ரியா. இருவரும் ஆச்சியின் உடல் நலத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அடிக்கடி ஆச்சியைச் சந்திப்பவர்கள் கமல், ரஜினி!

வீட்டில் செல்லமாகக் கூப்பிடுவது 'பாப்பா'. ரசிகர்களுக்கு 'ஆச்சி'. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு 'அம்மா'!

முருகனின் அடிமை. அறுபடை வீடுகளும் அவ்வளவு இஷ்டம். 

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை 'சகோதரன்' என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணேசன். இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, 'அண்ணே' என்றுதான் அழைப்பார் ஆச்சி!

காரில் செல்லும்போது, 'மெள்ளப் போ, மெள்ளப் போ' என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண் டும் என்பதில் குறியாக இருப்பார்!

ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஆச்சிக்கே பிடித்தது 'சின்னக் கவுண்டர்', 'நடிகன்'. "ஒரு துளி விரசம் இல்லாமல் 'நடிகன்' படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்" என்பார்!

பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் படித்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை!

மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.

அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டுவார்!

'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அல்லி ராஜ்யம்', 'காட்டுப்பட்டிச் சத்திரம்' என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்!

இவரது நடிப்புத் திறமை, நாடகக் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றோர் பேசியதை இன்னமும் மனதில் சேமித்துவைத்துள்ளார் ஆச்சி!

'வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா' என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. சிகிச்சைக்கு பின் மனோரமா உயிர் பிழைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்