கமல்ஹாசனின் லிப்லாக் இலக்கணங்கள்!

அடுத்தடுத்து ஆயிரம் லவ்வர் பாய்கள் அவதரித்தாலும், கமல்ஹாசன் எப்போதுமே காதல் இளவரசன்தான். அதிலும் லிப்லாக் (இதழ் முத்தங்கள்) காட்சிகள் எல்லாம் வெறுமனே மோக வெளிப்பாடாக இல்லாமல், பல்வேறு மனநிலைகளின் ’அழுத்தமான’ பிரதிபலிப்பாக இருக்கும். புன்னகை மன்னனில் தொடங்கிய ‘இச் அத்தியாயம்’ ஒரு பாடல் கூட இல்லாத ‘தூங்காவனம்’ வரை தொடர்கிறது.
அதைப் பற்றிய ஒரு கிக் கமெண்ட்ரி.

புன்னகை மன்னன்

கடலோர கவிதைகளும் , புன்னகை மன்னனும் 1986-ம் ஆண்டுதான் வெளியானது. கடலோர கவிதைகளில் நடிப்பிற்காக பேசப்பட்ட ரேகா, புன்னகை மன்னனில் அதிகம் சிலாகிக்கப்பட்டது அந்த பசுமை சூழ் பச்சக் பச்சக்கிற்குதான். அடுத்த நொடி தற்கொலை செய்யும் மனநிலையில் கொடுக்கப்படும் அந்தக் கடைசி முத்தத்தில்தான்... எத்தனை அழுத்தம்!

சாணக்யா

நடிகை ஊர்மிளாவின் முதல் மலையாளப் படம். படம் தெலுங்கிலும் டப்பிங் ஆனது. படத்தில் இடம்பெற்ற ஊர்மிளா-கமல் கிஸ் செம ஹிட் ஹாட் ரகம். வாழ்க்கையில் முதல் முதலாய் ஒருவன் முத்தம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே தத்ரூபமாக பதிவு செய்திருப்பார் கமல்.

மகாநதி

தன் குடும்பம், பணம் எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒருவனின் வாழ்க்கைதான் படம். அந்த மனஅழுத்தத்துக்கு நடுவிலும் ரொமான்ஸ் தருணங்களை கவிதையாகப் புகுத்தியிருப்பார்கள். கல்யாணம் தள்ளிப் போய் கடமையில் கண்ணாக இருக்கும் நர்ஸ் சுகன்யாவுக்கு கமல் முத்தம் கொடுக்கும் சூழ்நிலை... பார்வையாளர்களுக்கே ஜிவ்வென இருக்கும். அதுவரை சுகன்யாவிடம் தன் காதலைச் சொல்லியிருக்க மாட்டார் கமல். அந்த முத்தம்தான் லவ் புரபோசலே!

குருதிப்புனல்

கமல்-அர்ஜுன் இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டிய படம். அதற்கு நிகராக கமலும் கௌதமியும் ஆதர்ச தம்பதிகளாக குளியலறை, படுக்கையறை நெருக்கத்தில் மிரட்டியிருப்பார்கள். கமல் மீது கௌதமிக்கு உண்மையாக காதல் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் தொடங்கியிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், குருதிப்புனலில்தான் அது மிக மிக அழுத்தமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அந்தளவு இருவரும் படத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்திருப்பார்கள். 

ஹே ராம்

வங்காள பெண்ணான ராணி முகர்ஜியுடன் கல்கத்தாவில் கமல் செய்யும் சேட்டைகள் எல்லாம்... இப்போதும் புதுமணத் தம்பதிகள் முயற்சிக்கும் ஜில்ஜாலி கலாட்டா. அதே படத்தில் கட்டுப்பெட்டி பெண்ணான வசுந்தரா தாஸை விட்டு வைத்திருக்க மாட்டார் நம்ம ஆளு.

தூங்காவனம்

விவாகரத்தான மனைவி, ஹீரோயினான த்ரிஷாவுடன் டிஷ்யும் டிஷ்யும் சண்டை என படத்தில் எங்கும் முத்தத்துக்கான வாய்ப்பே இல்லை. ஆனால், போகிறபோக்கில் மது ஷாலினியை இழுத்து வைத்து பச்சக் பச்சக்கென கிஸ்ஸடிப்பார் கமல்.

இப்போ தெரியுதா, இன்னும் கமல் ஏன் காதல் இளவரசன்களுக்கு செம சவால் கொடுக்கிறார் என்று!

கே.ஜி.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!