தனுஷின் கொலவெறித் தாக்குதல் !

மிகச் சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது அந்த கொலவெறித் தாக்குதல். தனுஷ், அனிருத் கூட்டணி விளையாட்டாகச் செய்தது, இன்று பல மேலாண்மைப் பாடத் திட்டங்களில் ஒரு சிலபஸ்.

’யோ பாய்ஸ், ஐம் சிங்கிங் சாங்... சூப் சாங்...’ என தனுஷ் பாடத் தொடங்க ஒட்டு மொத்த உலகமும் தாளமிடத் தொடங்கியது.  அந்தப் பாடலையும், அதன் பிறகு நடந்த வைரல் மேஜிக்குகளையும் யாரும் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க முடியாது.

இத்தனைக்கும் அதை எழுதியது புகழ் பெற்ற பாடலாசிரியர் கிடையாது. 'மயக்கம் என்ன' படத்தில் மூன்று பாடல்கள் எழுதியிருந்த தனுஷுக்கு இது பாடலாசிரியராக நான்காவது பாடல், பாடகராக எட்டாவது பாடல். அனிருத்துக்கு திரைத்துறையில் இசையமைப்பாளராக அது தான் முதல் பாடல்.

பாடல் ஹிட்டாக மிக முக்கியமாக மூன்று காரணங்கள் போதுமானதாக இருந்தது:


1. பாடல் வரிகளில் இருந்த எளிமை. கவிதையாய் வரிகள் இருக்க வேண்டும், பல அர்த்தங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என எதுவும் அதில் இல்லை. 'காடு ஐம் டையிங் நவ்வு; ஷூ இஸ் ஹேப்பி ஹவ்வு?' இந்த தங்கிலீஷ் தமிழ் எல்லை தாண்டியும் பாடலை வைரல் ரீச் ஆக்கியது.  (இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இது அந்த ட்யூனுக்காக எழுதப்பட்ட டம்மி வரிகள்)

2. தர லோக்கல் குரல். தேர்ந்த பாடகர் இந்தப் பாடலைப் பாடவில்லை. தனுஷின் குரல், கிட்டத்தட்ட இன்றைய இளைஞர்களின் குரலைப் போலவே  ஒலித்தது. அதைப் பாட பெரிய மெனக்கெடல் யாருக்கும் அவசியமாக இல்லை. யார் வேண்டுமானால் இதை அதே ஒரிஜினல் தரத்துடன் பாட முடியும் என்கிற வசதி. அதோடு அதில் தொனித்த  சூப் பாய்ஸின் மனநிலையும் பாடலை தெறி வெற்றியாக்கியது! 

3. மற்ற மொழியினரைக் கூட கவரும் விதத்தில் பாடலில் இருந்த அதன் ரிதம். அதில் வரும் ஒரு ட்ரம்ஸ் பீட் முதற்கொண்டு மனப்படம் செய்து வைத்து தலையசைக்க வைத்த அனிருத்தின் இசை.

இந்த செய்தியை போஸ்ட் செய்யும்போது, கொலவெறி பாடலை யூ-டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 9,94,28,656 (ஒன்பது கோடிக்கும் மேல்). சீக்கிரமே அந்த எண்ணிக்கை 10 கோடியை நெருங்கும் என்பது இந்தப் பாடலின் மேஜிக்.

ஹேப்பி கொலவெறி டே..!

- பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!