பாலா படங்களில் இதெல்லாம் இருக்கும்தானே!

கதை, களம், கதாபாத்திரங்கள் என அனைத்திலும் வித்தியாச ட்ரீட்மெண்ட் கொடுப்பார் இயக்குநர் பாலா. ஆனால், அதையும் தாண்டி சில ஒற்றுமைகளை அவர் படங்களில் பார்க்க முடியும். அப்படியான சில பாலா பன்ச்கள் இங்கே... 

 (படங்களின் நடுவே இருக்கும் அம்புக்குறியை இடம்வலம் நகர்த்தினால் ஒற்றுமைக் காட்சிகளைக் காணலாம்!)

ரியலுக்கும் ரீலுக்கும் சம்மந்தமே இருக்காது!

பாலா படங்களில் ஹீரோ, ஹீரோயின் என எவரும் அவர்களின் நிஜத் தோற்றத்துக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல்தான் இருப்பார்கள். பார்ட்டி பாய் விஷால் பெண் தன்மையுடன் இருப்பார். ஸ்மார்ட் விக்ரம் செம அழுக்காக ஆதிவாசி கணக்காக உலாத்திக் கொண்டிருப்பார். சாக்லேட் பாய் ஆர்யா ஜடாமுடி மூர்க்கனாகவும் பாலே டான்ஸர் வரூ, தப்பாட்டக் கலைஞராகவும் வேறு அவதாரமெடுத்திருப்பார்கள். 

விஷால் - வால்டர் வணங்காமுடி (அவன் இவன்)

விக்ரம் -  சியான் (சேது)

அதர்வா - ராசா (பரதேசி)

ஆர்யா - ருத்ரன் (நான் கடவுள்)

வேதிகா - அங்கம்மா (பரதேசி)


வரலட்சுமி - சூறாவளி (தாரைதப்பட்டை)

 

காலமாகும் காட்ஃபாதர்!  

ஹீரோவை வழிநடத்தும் ஒரு காட்ஃபாதர் கேரக்டர் இருக்கும். (நந்தாவில் ராஜ்கிரண், அவன் இவன், தாரை தப்பட்டை படங்களில் சி.என்.குமார்). ஆனால்,  அந்த கேரக்டர்கள் இறந்துவிடுவார்கள்.

பெண்களே காதல் சொல்வார்கள்! 

சேது தவிர மற்ற படங்களில் ஹீரோ இறுக்கமாக இருக்க, ஹீரோயின்களே காதல் சொல்லி இழுத்துப் பிடித்து மல்லுக் கட்டுவார்கள்! 

லூஸுப் பெண்ணே... லூஸூப் பெண்ணே...

பாலா ஹீரோயின்கள் வெகுளியாக இருக்கிறேன் என்று கோக்குமாக்காக இருப்பார்கள். அதிலும் லைலா என்றால் கேட்கவே வேண்டாம்! 

அடி, உதை, குத்து..!

அடி, உதை, ரத்தம், அழுகை, ரணம் என்று பலரும் அனுபவித்திராத வலி அனைத்துப் படங்களிலும் இருக்கும்!

சுவாரஸ்ய் வில்லன்கள்!

வில்லன்களும் காரிலும், ஹெலிகாப்டரிலும் பறந்து வரமாட்டார்கள். நமக்கு அருகில், நாம் பார்த்துப் பழகிய சாதாரண மனிதர்களாகவே இருப்பார்கள். ஆனால், அடிப்படை இரக்கமோ மனிதப் பண்போ இல்லாமல் இருப்பார்கள். 

இரு கில்லாடிகள்!

நிச்சயம் படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் பிரதானமாக இருக்கும். அதில் ஒருவர் நிச்சயம் இறப்பது க்ளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!