Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்றம் முன்னேற்றம் டெண்ட் கொட்டாய் VS மல்டிபிளக்ஸ்

டெண்ட் கொட்டாய்.. டூரிங் டாக்கீஸ்.. என்ற வார்த்தைகளைக் கேட்டாலே 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஜிவ்வென.. ஒரு ஈர்ப்பு. இனம் புரியாத ஒரு ஏக்கம். தானாகவே, அவர்களின் இளமைக் காலம்.. அவர்களின் கண்களுக்கு முன்னால் திரைவிரித்து நிழலாடும். இதற்கு முன்னே வாழ்ந்த, இளம் காளையர்களின் மாலை நேரத்து 'காதல் பொழுதுகள்' அங்கேதான் அரங்கேறும். ஆண்-பெண் இருவருக்கும் இடையில் தடுக்கப்பட்ட சிறிய சுவர்கள், தடுப்புக் கட்டைகள் இருந்தாலும், மணல் மேடுகளில் அமர்ந்து கண்களை மட்டும் கன்னியர் பக்கம் திருப்பி மனம் விரும்பும் நாயகியைத் தேடி ரசித்த தருணங்கள் லப் டப்.. லப் டப்.. என மனசுக்குள் பட்டாம் பூச்சி பறந்த காலம், அப்பப்பா... மறக்கமுடியுமா..?!

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
அட என்.டி.ஆர் வந்ததும் எம்.ஜி.ஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
கலை வளர்ந்ததும் இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான்
கட்சி வளர்த்ததும் ஆட்சி பிடித்ததும் இந்தச் சினிமாதான்
-இதுதான் கடந்தகால டெண்ட்டுகொட்டாயின் நிழல்களுக்குள் மறைந்திருந்த நிஜம்!

...ஆனால், 'டெண்ட் கொட்டாய்.. டூரிங் டாக்கீஸ்சை' பின்புலமாக வைத்து, அதன் பெயரிலேயே இன்று சில சினிமாக்கள் வந்துவிட்டன. சினிமா பார்ப்பது கூடக் கடந்த கால அனுபவங்களில் இருந்து, தற்போது புதிய பரிணாமத்தை அடைந்திருக்கிறது. திரையரங்குகளை தற்போதைய டிரண்டுக்கு தகுந்தாற்போல் சர்வதேச தரத்திற்கு மாற்றி, தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் நவீன மாறுதல்களை உடனுக்குடன் திரையரங்குகளிலும் புகுத்தி, சில நிறுவனங்கள் ரசிகர்களைத் தன்வசப்படுத்தி வருகின்றன.

இப்போது வெளிவரக்கூடிய படங்கள் ரசிகனுக்குத் திருப்தியைத் தருகிறதோ இல்லையோ, படங்கள் வெளியாகும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் சொகுசான திருப்தியைத் தருகின்றன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...அதற்கு சிறந்த உதாரணம் எஸ்.பி.ஐ.சினிமாஸ். சென்னை வடபழனி விஜயா ஃபோரம் மாலில் தனது கிளையை, இத்தாலி அரண்மனை போல் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்து 9 ஸ்கிரினுடன், பல டிஜிட்டல் தொழில் நுட்பங்களைப் புகுத்தி 'பலாசோ' (PALAZZO) தியேட்டரை உருவாக்கியிருக்கிறது.

கூரை, பனைஓலை, தகரம் போட்ட டூரிங் டாக்கிஸ் கொட்டகையில் படம் பார்த்த காலம் போய், மல்டிஃபிளக்ஸ் என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் கட்டிடத்தில்.. ஒய்யார மாட மாளிகைக்குள், ஏசி அறையில்.. சகல வசதிகளும் பொருந்திய திரையரங்கமாகத் திகழ்கிறது 'பலாசோ' (PALAZZO). 

காலமாற்றம்

ப்லிம் வாங்கி அப்பாவோட வேட்டியில படம் பார்த்தது ஒரு காலம். மண்ண குமிச்சு வச்சு.. பென்ச்சுக்கும், தர டிக்கெட்டுக்கும் வித்தியாசம் இல்லாம படம் பார்த்தது இன்னொரு காலம். வெத்து முறுக்கையும், கடலைமிட்டாயையும் தின்னுகிட்டே.. சாயம் போன அழுக்கு திரையில் படம் பார்த்து கனவு கண்டது.. போன தலைமுறை. வெளிநாட்டுக் குளிர்பானங்களையும், ஹைஃபையான பாப்கார்னையும் சாப்பிட்டுக்கொண்டே தன் பார்ட்னரோட தோளில் சாய்ந்துகொண்டே படம் பார்ப்பதுதான் இந்தக் கால டிரண்ட். வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா? 

இளசுகளின் ரவுசு 

இன்றைய டிரண்டில் எதற்கெடுத்தாலும் ட்ரீட் (TREAT) கேக்குறதுதான் நம்ம இளசுகளின் வழக்கம். இந்த வழக்கம், எல்லா அலுவலகத்திலும் உலக பழக்கமாகவே மாறிடுச்சு. அந்த ட்ரீட் (TREAT), அதிகபட்சமா உணவும், ஒரு படமும்தான். இதை இரண்டையுமே இன்றைக்கு 'பலாசோ'வுல (PALAZZO), ஒரே இடத்தில் பார்க்கலாம்.

டிரைலர் இடைவேளை நேரத்தில், வெளியில் போகவிடாம டிரைலர்  போடுவது டூரிங் டாக்கீஸ் ஸ்டைல். ஆனால், டிரைலருக்காகவே  தனி ஸ்கிரின் (SCREEN) அமைச்சு, அதையும் டிக்கெட் கவுண்டர் பக்கத்திலேயே வைத்திருப்பது 'பலாசோ'வோட (PALAZZO) அல்டிமேட் ஸ்டைல்.

பளபளக்கும் பாத்ரூம்

இடைவேளையில் (INTREVEL) மூக்க மூடிகிட்டே 1,2 (INTREVEL) போயிட்டு, ஓடிவந்து மீண்டும் தியேட்டர் உள்ளே என்ட்ரி கொடுக்கிறது டூரிங் டாக்கிஸ் வழக்கம். ஆனால், அந்த இடைவேளையில் (INTREVEL) இத்தாலி (ITALIAN) நாட்டுக்கே போயிட்டு வந்த ஃபீல் கொடுக்கிறது நம்ம 'பலாசோ'வோட (PALAZZO) கெத்து. அதனுள் இருக்கும் முகப்பு கண்ணாடியும், கலை நயமான ஓவியமும், அதி நவீன கருவிகளின் பயன்பாடும், படு சுத்தமான பாத்ரூம் என சொல்லாமல் சொல்கிறது.

புரோஜெக்டரின் வளர்ச்சி

புரஜெக்டர் மிஷினுக்காக தனி அறையை ஒதுக்கி, அதனை இயக்குவதற்காக இரண்டு ஆட்களையும் நியமித்து, சுவரில் ஓட்டையைப் போட்டு படம் காட்டுனா, அது டூரிங் டாக்கீஸ். ரூமே இல்லாமல், ஆம்பிளி பிளயேர் சைஸ்சுல RDXK-4K புரோஜெக்டரை COMPUTER ல கனெக்ட் பண்ணி எந்த இடத்தில் இருந்தும் இயக்கக்கூடிய அதி நவீன புரஜெக்டர்ரை அறிமுகப்படுத்தியிருக்குனா, அதுதான் 'பலாசோ' (PALAZZO).

இனிமையான பொழுதுகள்

டென்டுக்கொட்டாயை பொறுத்த வரை மூட்டைப் பூச்சிகளும், எச்சில் துப்பிய சுவடுகளும், உடைந்த பெஞ்சும், தவிர்க்கமுடியாத நினைவுச் சின்னங்கள். ஆனால், திரையரங்குகளைச் சுத்தமாகப் பராமரிப்பது, தரமான ஒலி – ஒளி அமைப்பு, வசதியான இருக்கைகள், சரியான கட்டணம் போன்றவை 'பலாசோ'வின் (PALAZZO) சிறப்புகள். மல்டிபிளக்ஸ் தியேட்டரில் நீங்கள் வசதியாகப் படம் பார்க்கலாம். ஆனால், பலாசோவுக்கு (PALAZZO) வந்தால், காலை முதல் மாலை வரை இனிமையாய் பொழுதைப் போக்கலாம்.

மல்லாக்கா படுத்து விட்டத்த பார்க்கிறது எவ்வளவு சுகமா இருக்கு. இன்னும் ஏன்டா முழிச்சுகிட்டு இருக்க கைப்புள்ள, கிளம்புடா பலாசோவுக்கு (PALAZZO).

பார்க்கப் பார்க்க பிடிச்சா அது டூரிங் டாக்கிஸ்.
பார்த்தவுடனே பிடிச்சா அதான் பலாசோ (PALAZZO).

 

-ரா.வளன், படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்