வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (04/04/2016)

கடைசி தொடர்பு:18:48 (04/04/2016)

இளையராஜா இசை இன்னும் என்னென்னவெல்லாம் செய்யுமோ?

திடீரென்று இந்த வீடியோ நம் கண்ணில் பட்டது. முதல் சில நொடிகள் ஆடியோ இல்லாமல் கேட்டபோது.. என்னடா இத்தனை மகிழ்ச்சித் துள்ளாட்டம்.. மேடையில் வேறு ஒரு பெண் பரதமெல்லாம் கலந்து ஆடிக்கொண்டிருக்கிறாரே என்று ஹெட்ஃபோனைத் தேடி எடுத்துப் போட்டு, கேட்டபோது..

“வாவ்வ்வ்வ்’ என்று கத்தத் தோன்றியது! காரணம்... 

அது நம்ம ராஜா பாட்டு! இந்தப் பாடலுக்கு, இப்படி ஒரு நடனமும், வெளிநாட்டில் இப்படி ஒரு வரவேற்புமா என்று வியக்கவைத்தது.

அதற்கு முன்.. கீழுள்ள வீடியோவைக் க்ளிக்கும் முன் உங்களுக்கு ஒரு பெட். இந்த வீடியோவைப் பற்றி நீங்கள் கேட்டிராத பட்சத்தில், நீங்கள் இதை முன்பு பார்த்திராத பட்சத்தில் இளையராஜாவின் எந்தப் பாடல் இப்படி ஃப்ரான்ஸ் நகரத்தில் பாடி, ரசிக்கப்பட்டது என்று, ஒரு ஐந்து பாடல்களை நினைத்துக்கொள்ளுங்கள். சரியாக கண்டுபிடித்துவிட்டீர்களானால்.. நிச்சயம் நீங்க கெத்துதான் பாஸ்!    
 

ஃப்ரான்ஸின் பிரிட்டனி நகரத்தில் 2005ல் ‘LE FESTIVAL DU BOUT DU MONDE" என்றொரு நிகழ்ச்சி. ப்ரெஞ்சு நடிகரும், பாடகருமான Pascal of Bollywood என்றழைக்கப்படும் Pascal Heni தான் அந்தப் பாடலைப் பாடியவர். அவருக்கும் நம்ம ரஜினி பற்றி தெரிந்திருக்க வேண்டும், வீடியோவின் 1.22 நிமிடத்தில் ஒரு ஸ்டைல் மொமண்ட் காட்டுவதிலிருந்தே தெரிகிறது அது!
 

இரண்டாம் இடையிசையின்போது வரும், ஆலாப் உட்பட, இசையை அப்படியேதான் பயன்ப்டுத்தியிருக்கிறார். ஆனாலும் 3.02வது நிமிடத்தில் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களுக்கு சாமி வந்தபடியால், பாடகர் பாடவந்ததை டக்க்னெறு நிறுத்த, அதிலிருந்து 3.30 வரை தபேலாக்காரர் தாண்டவமாடுகிறார்.
 

ராஜா.. ராஜாவேதான் பாஸ்! 

பாடலைக் கேட்க, கீழுள்ள வீடியோவை க்ளிக்குங்கள்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்