Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் ரெண்டும் பார்சல் சமந்தாவுக்கு!! #HBDSamantha

தமிழ்நாட்டு இளைஞர்கள் தம் காதலிகளை 'அம்மு' எனக் கொஞ்சியது போய் 'சம்மு' எனக் குழையவைத்த அழகு தேவதை சமந்தா. ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டே மாடலிங் செய்துகொண்டிருந்த பெண் ரவிவர்மனின் கண்களில் சிக்கி 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் வாய்ப்பு பெற்று இன்று டாப் ஹீரோயின். வடநாட்டு நாயகிகளையே கொண்டாடும் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் நடிகை ஏக்கத்தைத் தீர்க்க வந்த பக்கா பல்லாவரம் பொண்ணு இந்த சமந்தா.

சென்னைப்பெண்ணாக இருந்தாலும் சமந்தா பேசப்பட்டது என்னவோ தெலுங்குத் திரையுலகின் மூலம் தான். 2010 ல் நம்மூர் இளைஞர்களின் காதல் படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா'வின் ஒரிஜினலான 'ஏ மாய சேசாவே' தெலுங்குப் படத்தில் 'ஜெஸ்ஸி'யாக அறிமுகமானார். நாயகனை விட இரு வயது மூத்தவராக, படம் முழுக்க மெச்சூர்ட் டைப் பெண்ணாக வரவேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பமிருந்தாலும் கூட தன் குடும்பத்தினருக்கு பிடிக்காது எனும் காரணத்தினால் விலகி விலகிப் போகும் ஒரு பெண்ணின் காதல் தான் கதை. காதல், குடும்பம் இரண்டில் எதுவெனத் தீர்மானிக்கும்  இடங்களில் வசனத்தை விடவும் முகபாவம் மிக முக்கியம். அதைத் திறம்படச் செய்திருப்பார் சமந்தா.

பின்பு, 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் தலைகாட்டிய சமந்தா  அதன்பின்னர் 2012 ல் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படத்தில் நித்யா எனும் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். ஜீவாவுடன் கலகலவென காதலிப்பதாகட்டும், ஈகோ மோதலில் டூ விட்டுப் பிரிவதாகட்டும், குறும்புப் புன்னகையோடு கண்களால் ஜீவாவைத் தேடுவதாகட்டும். எல்லாக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கும் சமந்தா சோ க்யூட். படத்தின் இறுதிக்காட்சிகளில் ஜீவாவின் திருமண ரிஷப்சனில் கலந்துகொண்டு சமந்தா கலங்கும் இடத்தில் நம் மனதையும் கல்லாக்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை எக்ஸ்ட்ரெசன்களையும் அநாயசமாகத் தன் கண்களால் வெளிப்படுத்தியிருப்பார்.

சமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலானோரால் நினைவுகொள்ளப்படுவது 'நான் ஈ - பிந்து'வாகத் தான். நானியை புறக்கணிப்பது போல் நடித்துக் கொண்டே அவரை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை நடப்பது அறியாமல் சொல்கின்றவரையிலும் அவரது பாவனை அத்தனையும் அசத்தல் ரகம். நானியின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் சமந்தா கொடுக்கிற ஆக்சன் சூப்பர்ப்.. அதிலும் குறிப்பாக கோவிலில், “நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என நானி சொல்லும்போது  சமந்தாவின் ரியாக்சனை பார்க்கணுமே..? யப்பா!!

இதேபோல, சுதீப்பை திடீரென்று தனது அலுவலகத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் காட்சியில் அவரது முகம் மனதின் பயம் சொல்லும். அதற்குப் பிறகும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், நடிப்பாலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது இந்த பல்லாவரம் பால்கோவா.

'பத்து எண்றதுக்குள்ள' திரைப்படத்தில் வாளெடுத்து சுழற்றும் கடுமையான வேடம் ஒன்று, அதற்கு நேர் எதிரான குறும்புத்தனமான க்யூட் சமந்தா கேரக்டர் மற்றொன்று என டபுள் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்தார். எதிரில் இருப்பவர்களைப் புகைப்படம் எடுப்பதாகச் சொல்லி தன்னையே படம்பிடித்துக்கொள்ளும் காட்சி, விக்ரம் லேஸ் பாக்கெட்டைப் பிரித்ததும் சட்டென விழித்து அதைப் பறித்துத் தின்னும் காட்சி, நிறைமாதக் கர்ப்பிணியாக நடிக்கும் காட்சியில் "இருந்தாலும் உன் பையன் ரொம்பத்தான் துள்ளுறான்.." எனச் சொல்லும்போதும் பப்ளி அண்ட் லவ்லி சமந்தாவாக டோட்டல் ஸ்கோர் செய்திருப்பார். 'நான் ஈ - பிந்து' விற்கும் இந்த ஷகீலா கேரக்டருக்கும் ஆறென்ன? ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்! இரண்டிலும் செஞ்சுரி ஸ்கோர் நடிப்பை வழங்கியிர

இவர் வாங்கிய ஃப்லிம்ஃபேர் விருதுகளும், நந்தி விருதும் இவரது சோ க்யூட் புன்னகைக்கு முன்பு ஒன்றுமே இல்லை. தமிழ் சினிமாவில் தற்போது சமந்தா காற்று தீவிரமாக வீசுகிறது. பிந்து, ஷகீலா என்று கதாபாத்திரங்களில் கலக்கிய சமந்தா, மித்ராவாக விஜய்யுடனுடம் தெறிக்கவிட்டார். அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி  என முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாகப் பட வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கிறது. அடுத்த வருடம் வரை அம்மணி அம்புட்டு பிஸி.

நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் மிகுந்த அக்கறையுள்ள சமந்தா விளம்பரங்கள் மற்றும் தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதால் கிடைக்கும் பணத்தை தனது அறக்கட்டளையின் மூலம் 'ப்ரதியுஷா' அமைப்பிற்காக வழங்குகிறார்.

2015 ஆம் ஆண்டு முதல் ஆந்திரா ஹாஸ்பிட்டல்ஸில் அதிதீவிர சிகிச்சை பெறும் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் வாரம் ஒருவரது மருத்துவ செலவில் மூன்றில் ஒரு பங்கினை சமந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பின்னர், ஆறு மாதங்களுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளின் தடுப்பூசி செலவுகளையும் தான் வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பல்லாவரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மீட்புப் பணிகளுக்காக முப்பது லட்சம் ரூபாய் அளித்து சமந்தா ஆல்வேஸ் சமர்த்து என சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி ஸ்டாரென்ற பந்தா இல்லாமல், சத்தமில்லாமல் பல சமூக சேவைகளும் செய்துவரும் இவருக்கு வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் இரண்டுமே பார்சலாகக் கொடுக்கலாம். முகம் முழுக்க, அவரது டிரேட் மார்க் புன்னகையோடு வாங்கிக் கொள்வார்!

ஹேப்பி பர்த்டே டு லவ்லி பேபி சம்மு!

-விக்னேஷ் சி. செல்வராஜ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்