ரஜினி திறந்த ரகசிய லாக்கர்! - அவர் எல்லாம் அப்பவே அப்படி #TamizhanGadgets

தமிழ் சினிமாவின் கலைப்புலிகள் டெக்னிக்கலாக பின்னடைந்து இருக்கலாம். ஆனால், என்றுமே அதைப்பற்றி கவலைப்படாமல், கற்பனையில் வருவதையெல்லாம் கேட்ஜெட்டுகளாக மாற்றும் வித்தைக்காரர்கள். அப்படி சில ‘வாவ்டா!’ கேட்ஜெட்ஸ்....

பெட்டி கம்ப்யூட்டி:

லேப்டாப்பை கண்டுபிடிச்சது யாருன்னு ஒரு பக்கம் சண்டை போட்டுக்கொண்டு இருக்க , 1957-ல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்ட படம், மாயாபஜார். அதில் லேப்டாப் காட்சி மிக பிரபலம். அத என்னன்னு நீங்களே பாருங்களேன்


via GIPHY


பேப்பர் சினிமா


பட்டணத்தில் பூதம் படத்தில், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரும், நாகேஷும் ஒரு ஜாடியை திறக்க, அதிலிருந்து பூதம் வெளிவரும். ஜாலியாய் அது பேப்பரிலேயே ’எங்க வீட்டுப் பிள்ளை ’ படத்தை ப்ளே செய்யும்


via GIPHY

காசைக் காட்டும்  குடை

கங்கா கௌரி.. ’தியேட்டரை விட டிவில தான் இந்தப் படம் அதிக முறை பாத்து இருக்கேன்’ என படத்துல நடிச்ச லியோனியே சொன்னது தான் ஹைலைட்.. குடையை மழைக்கு யூஸ் பண்ணலாம், வெயிலுக்கு யூஸ் பண்ணலாம். ஆனா, பணம் இருக்கான்னு கண்டுபிடிக்கறது எல்லாம். எப்பிடி பாபா...???


via GIPHY


தானாவே சுற்றும் கத்தி

ஒன்பது கோள்களும் உச்சம் பெற்ற ஒருவன்... ஆள் இருந்தாலும் கத்தி சுத்தும், ஆள் இல்லாட்டியும் கத்தி சுத்தும். சூப்பர்ஸ்டார் மாதிரி தமிழ்ல கேட்ஜெட்ஸ் வச்சு விளையாடிய ஆளே கிடையாது.


via GIPHY


பாம்ப் ஸ்க்வாட் பாட்ஷாஸ்

 

பாட்ஷா படத்துல வர்ற நக்மா தான் அந்த சின்னப்பொண்ணா , இல்ல அது ரகுவரன் பொண்ணா, இல்ல தட் வெள்ளை வில்லன் பொண்ணா, இல்ல ரஜினி பொண்ணானு கூட சந்தேகம் வரலாம். ஆனா, படத்தோட இறுதிக்காட்சில ரஜினியின் ஆட்டோ ஓட்டுநர் வலது கைகள் வெடிகுண்டு கண்டுபிடிக்க யூஸ் பண்ற கேட்ஜெட்ஸ் இருக்கே வேற லெவல். நீங்களே பாருங்களேன்


via GIPHY

தட்டினால் திறக்கும் பாதுகாப்பு கருவி

 

“தட்டுங்கள் திறக்கப்படும்”னு சொல்லியிருக்கிறார் ஒரு மகான். ஆனா, லாக்கரைக்கூட ஜஸ்ட் லைக் தட் தட்டியே ஒரு படத்துல திறப்பார் நம்ம சூப்பர் ஸ்டார். இன்னமும் ராமராஜன் மாதிரி யாரும் பாடித்தான் லாக்கர் எல்லாம் திறக்கல. (அதுல இருக்குற ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா கமென்ட்ல சொல்லுங்க )


via GIPHY

பின்னாடியும் சுடும்

கமல் படம் எல்லாம் 20 வருஷத்துக்கு அப்புறம் தான் புரியும் என்பது உலக நியதி.  அபூர்வ சகோதரர்கள் படத்துல குட்டி அப்பு, டெல்லி கணேஷ கொல்றதுக்கு யூ-டர்ன் போட்டு டேபிளை எல்லாம் உடைச்சு இருப்பார். ஆனா, அதவிட ஜெய்ஷங்கர கொல்றதுக்கு, டபுள் சைடு சுடும் துப்பாக்கி எல்லாம் யூஸ் பண்ணுவாரே.


via GIPHY

கேட்ஜெட்ஸ் மேன்

தலைப்பை பார்த்தது உங்களுக்கு எந்திரன் படம் நியாபகம் வந்தால், நீங்கள் இக்கால ரஜினி ரசிகர். அதுவே கறுப்பு சட்டை, ரைட் கைல வெடியை வாங்கி லெஃப்ட் கைல தூக்கிப்போடும் சீன் நியாபகம் வந்தால், நீங்கள் வின்டேஜ் ரஜினி ரசிகன்.

via GIPHY

Do you like the story?

Please Appreciate the Author by clapping!