Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்க்காக வெயிட் பண்ணிய துப்பாக்கி பாம்

செல்ஃபோன், லேப்டாப் எல்லாம் வர்றதுக்கு பலகாலம் முன்னாடியே, தமிழ்ப்படங்கள்ல பயன்படுத்திய சாதனமா டைம் பாமைச் சொல்லலாம். அதுலயும் ஒவ்வொரு படத்துலயும் இந்த டைம்பாமை விதவிதமா பயன்படுத்திருக்கற விதத்தைப் படிச்சாலே உங்களுக்கு அள்ளு விட்டுடும்.

உள்ளத்தை அள்ளித்தாவில் சுந்தர். சி அறிமுகப்படுத்தியது பூச்செண்டு டைம் பாம். இதனுடைய ஸ்பெஷல் எவ்வளவு பயங்கரமா வெடிச்சாலும் ட்ரெஸ் மட்டுமே கிழியும்.  உடம்பு கரியாகும். இதைத் தவிர பாடிக்கு எந்த சேதாரமும் ஆகாது. அதெல்லாம் ஒரு பூச்செண்டு டைம்பாம் காலம் பாஸ்.

சுயம்வரம் படத்தில் பாமை கண்டுபிடிக்க அதிரடியா களம் இறங்குவார் அர்ஜுன். பாமில் இருக்கும் சிகப்பு, நீல ஒயரில் எதை முதலில் வெட்டலாம் என்கிற குழப்பத்தை இந்தப் படத்திலும் பார்க்கலாம். நடுக்கத்தோடு கையில் கத்தரியை  எடுப்பவர் தானும் பதட்டப்பட்டு நம்மையும் பதட்டப்பட வைப்பார். கடைசியில் டைமரில் 30 செகண்ட் மட்டுமே மிச்சம் இருக்க அதையே பத்து நிமிஷத்துக்கு மேலே காட்டி பயமுறுத்துவாங்க.

பாட்ஷாவில் ஆல்பர்ட் என்கிற அடியாள் மும்பை அந்தேரி விநாயகர் சிலைக்கு வெச்ச பாம் ரொம்ப ஃபேமஸ். கரெக்டா காலை 10 மணிக்கு வெடிக்கிற மாதிரி அதை அவர் செட் பண்ணி வெச்சுட்டு மாணிக்கத்திடம் மாட்டிக்குவார். வேனில் ஏறி பத்தே நிமிஷத்தில் பறந்து வரும் ரஜினி கடைசி செகன்டில் பாமைக் கண்டுபிடிச்சு பெளலிங் மாதிரி தூக்கிப்போட எல்லோரும் பாட்ஷா பாட்ஷானு கையைத் தூக்கி கத்தி ஓவரா பில்டப் கொடுப்பாங்க.அந்த பாம் சீனை மும்பை மக்கள் மட்டுமில்ல,யாரும் மறக்கமுடியாது!

'அவரே குண்டு வைப்பாராம், அதை அவரே எடுப்பாராம்'. முதல்வனில் ரகுவரன் பேசிய இந்த டயலாக் இன்னைக்கு வரைக்கும் மீம்ஸா சுத்திகிட்டு இருக்கு. வெயிட் மெஷின், பைக், கல்யாண மண்டபம் இந்த மூன்று இடத்திலும் பாம் வெச்சிருப்பாங்க. அது வெடிக்கிறதுக்குள்ள கரெக்டா கண்டுபிடிச்சு செயலிழக்க வெச்சிடுவார் அர்ஜுன். ஆக்சன் கிங்னா சும்மாவா ?

'காதல் மன்னன்' படத்தில் வில்லன் கரணுக்கு டைம் பாம் என்பது விளையாட்டு சாமான் மாதிரி. சும்மா சும்மா பாம் வெச்சு விளையாடுவார். இந்த கேமுக்கு கிறுக்குத்தனமா அடிக்டான வித்தியாசமான வில்லன் இவர். ரேஸ், லவ்னு எதுவா இருந்தாலும் அதில் ஜெயிக்க பாமை எடுத்து டைம் செட் பண்ணி வெச்சிடுவார்.அடப்போங்கய்யா!

'கோ' படத்தில் சிறகுகளின் வசந்தன் பெருமாள். நம்பியார் காலத்து ஸ்டைலில் மேடைக்கு அடியில் பாம் வெச்சு தன்னுடைய கூட்டத்துக்கு வந்தவங்களை தானே கொல்லக்கூடியவர். சமீபத்திய அரசியல் மீட்டிங்களில் வெயிலால் இறந்தவங்களை விட, இவருடைய கூட்டத்துக்கு வந்து இறந்தவங்க எண்ணிக்கை அதிகம். என்ன கொடுமை சார் இது!

விஜய்க்காக வெடிக்காமல் வெயிட் பண்ணக்கூடிய ஒரே பாம் 'துப்பாக்கி பாம்'. விஜய் ஒன் டூ த்ரினு கமெண்ட் சொன்னதும் கரெக்டா வெடிச்சு சிதறும். இதில் சோகம் என்னன்னா ஏன் செத்தோம்? எதுக்கு செத்தோம்னு? கூட தெரியாம சஸ்பென்ஸோடவே  செத்தார் வித்யுத்.

'சிறுத்தை சந்தானம்' பேட்டரி போடாத பாம் டிடெக்டரை வெச்சுக்கிட்டு வில்லனுக்கு கொடுத்த டார்ச்சர் இருக்கே, 'இங்கே பாம் இல்ல பாவா... அப்படி இருந்தா இது குய்யோ முய்யோ குய்யோ முய்யோனு கத்தும்' இது டம்மி பாவானு சொல்லி, லிக்கர் பேக்டரியில் இருந்து வீடு மில்லுன்னு அத்தனைக்கும்  ஆப்பு வைக்க கூடியவர்.

- இன்னும் ஏகப்பட்ட டைம் பாம்கள் நம்ம கோடம்பாக்கத்தில் உண்டு. நினைவுக்கு வருவதை கமெண்ட்டில் வெடிக்க வைங்க பாஸ்.

-ஜுல்ஃபி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?