Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

24 படத்தில் இந்த ஆறு விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

அட போட வைக்கும் ஆர்ட் டைரக்‌ஷனும், விழிவிரிய வைக்கும் VFXம் தான் 24 படம் முழுவதுமே. விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யாவின் அறை முழுவதுமே திறன்கருவி (கேட்ஜெட்ஸ்) மயம்தான்.

அவர் மகனான மணியின் வாட்ச் கடையும் அப்படித்தான்! கடை முழுவதும் பல வகையான கடிகாரங்கள். கலக்கும் பல கருவிகளுக்கு நடுவே, கவனத்தில் நின்ற ஆறு கருவிகளை இப்போது பார்க்கலாம்.  

விஞ்ஞானியின் VR ஹெல்மெட்

தலையில் மாட்டிக்கொண்டதும், கண்களுக்கு நேரே லென்ஸ் இருக்க ஒருவித ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டிருக்கிறார் விஞ்ஞானி சேதுராமன் சூர்யா. ஆத்ரேயா வந்து லேபரெட்டரியைக் கலைத்துப் போட, அந்த ஹெல்மெட்டில் பதிவாகியிருக்கும் சூர்யா விர்ச்சுவல் இமேஜில் வருவது ஹைடெக் ஆச்சர்யம்!
 

பேபி Pacifier

தன் குழந்தை ‘மணி’யை சேதுராமன் கிடத்தும், டைனோஸர் மண்டை சைஸில் இருக்கும் Baby Pacifier. ஒரு பட்டனைத் தட்டியதும், பாதி திறக்க குழந்தையை கிடத்துகிறார் சேதுராமன். அடுத்த பட்டனைத் தட்ட, குட்டித் தும்பிக்கை போல பால்கொடுக்க ஒரு சாதனம் முகத்துக்கு நேரே வருகிறது. அதிலும் குழந்தை சமாதானமாகவில்லையென்றால், Bird Sound, Waves என்று சத்தங்கள் குழந்தையை சாந்தப்படுத்த ஒலிக்கிறது. இல்லையென்றால் அம்மாவின் குரலில் பாட்டு பாடுகிறது. அப்பா, பாடம் சொல்லிக் கொடுக்கக் கேட்கிறது.

குட்டீஸுடன் இருக்கும் தாய்மார்கள், எப்படியாவது இதை வாங்கித்தரச் சொல்வது உறுதி.

Project 24 பாக்ஸ்

டைம் மெஷின் வாட்சை வைத்திருக்கும், பாக்ஸ். உள்ளங்கை சைஸிலிருக்கும் இதன் சாவித்துவாரத்தில் சாவியை நுழைத்ததும், தானாகவே திரும்பி சர்புர்ரென்று சுற்றி, திறந்து கொள்கிறது.

‘எஸ்கேப்’ வீல் சேர்

ஆத்ரேயாவிடமிருந்து தப்பிக்க, சேதுராமன் டகாரென்று இந்த சேரில் அமர்ந்து சுரங்கப்பாதைக்குள் பயணிப்பார். சரசரவென ட்ராக்கில் பயணிக்கு இந்த வீல்சேர் ஒரு ‘விர்ர்ர்ரூம்’ வரப்பிரசாதம்.
 

ஆத்ரேயா ஆல் இன் ஆல் வீல்சேர்

’தோழா’வில் நாகார்ஜூனா உபயோகிப்பதைப் போன்ற, வழக்கமாக நாம் பார்த்திருக்கக்கூடிய வீல்சேர்தான். ஆனால் இதில் ஸ்பெஷாலிட்டி, ஒருபட்டனை அழுத்தியதும் ஆத்ரேயாவை அத்தனை உயரத்தில் கம்பீரமாய்க் காட்டும்!

டைம் டிராவல் வாட்ச்

அல்டிமேட் கேட்ஜெட் இதுதான். படம் ஆரம்பிக்கும்போதே காண்பிக்கப்பட்டாலும், பல நிமிடங்கள் கழித்துதான் நம் பார்வைக்கு வரும். கட்டிக்கொண்டதும் அதுவாக...
 

ப்ச்.. வேணாம். படத்துல பாருங்க பாஸ்!


  -சத்ரியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்