சும்மாவே புகழ் பாடுவோம்... இன்னைக்கு மலர் டீச்சருக்கு பிறந்த நாள் வேற! # HBD SaiPallavi

அண்மைக் காலங்களில் மலர் என்ற பெயரின் மீது நம்ம பசங்களுக்கு ஆர்வம் கூடியிருக்கிறது. ரோட்டில் யாராவது மலர் என்று பெயர் சொல்லிக்கூப்பிட்டால் நம்ம பசங்களும் கூட திரும்பி அந்த மலரைப் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் அளவிற்கு என்றால் பார்த்துக்கோங்களேன்! இத்தனைக்கும் காரணம் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து இதயம் கொள்ளை கொண்ட சாய்பல்லவிதான். கேரள ரசிகர்களைத் தாண்டி நம் தமிழ் ரசிகர்களும் இந்த மலர் டீச்சரை லைக் செய்ய என்ன காரணம்?

தமிழில் இவரின் முதல் அறிமுகம், விஜய் டிவியில். “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியில் நடனமாடி கலக்கினார். அந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் டிவி பிரியர்களுக்கு நடனக்கலைஞராக அறிமுகமானார். ஜெயம்ரவி, கங்கனா நடிப்பில் வெளியான தாம் தூம் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் கங்கனாவின் தோழியாக ஓரத்தில் நின்றிருப்பாரே அது  சாய்பல்லவியின் ஓல்டு வெர்ஷன். தமிழ் சினிமாவின் தொலைதூர ஃபிரேமில் நம்ம பிரேமம் நாயகி!

அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய வசூல் சாதனையும், ரசிகர்களின் ஃபேவரிட் பட அந்தஸ்தும் பெற்றது ‘பிரேமம்’ படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மலர் டீச்சரின் காட்சிகள் என்பதில் சந்தேகமில்லை. அதுவும், மலராக சாய்பல்லவி நடித்தது இன்னும் ஸ்பெஷல்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு வேடங்கள், நடன நிகழ்ச்சியில் பார்த்திருந்தாலும், பிரேமம் படத்தில் சேலையில் மிகப் பாந்தமாக, கண்டிப்பும் கரிசனமுமாக பிசிக்கலி, மெண்ட்டலி, சைக்காலஜிக்கலி, பேசிக்கலி... என அனைத்தும் வடிவத்திலும் அனைவரையும் ஈர்த்தார்!

சாய்பல்லவியின் ஒவ்வொரு காட்சியும், சிரிப்பும், முகபாவனை என்று சீன் பை சீன் சிக்ஸர் விளாசியிருப்பார். ஒரு காட்சியில் இடது புருவத்தை உயர்த்தி “குர்த்தா” என்று சொல்லும் போது... சான்ஸே இல்லை! இன்னொரு காட்சியில் மல்லிகைப்பூ (மலையாளத்தில் முல்லைப்பூ), ஜார்ஜ்ஜிடம் மலர் வாங்கித்தருமாறு கேட்பார். அந்த காட்சியின் வெற்றிக்குக் காரணம், தமிழ் பசங்களையும், மல்லிகைப்பூ சென்டிமென்டையும் யாராலும் பிரிக்கமுடியாது, அது பிரேமத்திலும் நடந்ததே தான்.

சாதுவான, அடக்கமான டீச்சர், நடனத்திலும் விளாசிஎடுப்பார். நிச்சயம் அவர் நடனமாடுவதைப் பார்த்து நிவின்பாலியின் ரியாக்‌ஷன் நம்ம பசங்களின் மைன்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.    இதையெல்லாம் தாண்டி, மேக்கப்பே இல்லாமல் சின்னச் சின்ன அழகிய பருக்களும், லிஃப்ஸ்டிக் இல்லா உதடுகளுமே சாய்பல்லவியின் ஹைலைட். இவ்வாறான சின்ன சின்ன விஷயங்களில் இதமாக நம் மனதில் இசைக்க வைக்கிறார்.

மலரே நின்னே காணாதிருந்தால்......

பிறந்த நாள் வாழ்த்துகள் சாய்பல்லவி!!!...

பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!