ஸ்லோ மோஷனில், திரும்பி, எதிரிகளைப் பந்தாடிய ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த 15 டெரர் வில்லாதி வில்லிகளின் லிஸ்ட் இதோ!
1. சொர்ணாக்கா:
தெலுங்கானா சகுந்தலா , தூள் படத்தில் விக்ரமிடம் “டேய், யாருடா பொம்பளை , நான் பத்து ஆம்பளைக்கு சமம்டா” என டெரர் காட்டிய டெரிஃபிக் வில்லி. அதேபோல்,, சிவகாசி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மாமியாராகி “ இந்த மூளி முங்காரி பத்தி அவனுக்குத் தெரியல, தெரிய வைக்கிறேன்” என தளபதிக்கே பன்ச் கொடுத்து பட்டையக் கிளப்பியவர்... ஆத்தாடி!
**
2. ஈஸ்வரி:
“ஏலேய்...” என சவுண்டு காட்டி புரட்சி தளபதியிடம் சண்டை போட்டதாகட்டும், “ஏன்டா மாமா நீ புரிஞ்சுக்கவே மாட்டியா? ” என அவரிடமே ரொமான்ஸ் காட்டியதாகட்டும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘திமிரா’ன ஒரு வில்லி என்றால் அது ரவுடி ஈஸ்வரி தான். இவங்க பொம்பளைக்கு பொம்பள, ஆம்பளைக்கு ஆம்பளடி..
**
3. பானு
’பார்த்தேன் ரசித்தேன்’ படத்தின் சைலண்ட் வில்லியாக லைலாவை உருட்டி மிரட்டி, பிரசாந்தை அடைய எண்ணிய சிம்ஸ், ’ஐந்தாம் படை’ படத்தில் தேவசேனாவாக சுந்தர் சியை பழி வாங்க பல திட்டங்கள் தீட்டுவார். கடைசியில் இவங்களையும் வில்லி ஆக்கிட்டீங்களேய்யா...
**
4. கீதா
ஸ்மிதா, கல்யாணி, கீதா, என மூன்று பெயர்களில் ஆண்களை வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் கும்பலுக்குத் தலைவியாக , துப்பாக்கியுடன் கெத்து காட்டிய குண்டு குண்டு கண்ணழகி . சுப்ரீம் ஸ்டாருடன் ஓட்டல் அறையில் மாட்டிக்கொண்ட ஜோ’வின் கண்களின் ரியாக்ஷன் இருக்கே... டெர்ரர் டெவில்!
**
5. அருந்ததி:
’வாலி’ அஜித், தம்பி மனைவிக்காக வில்லன் அவதாரம் எடுத்தார் எனில், ’உயிர்’ சங்கீதா கணவனின் , தம்பியை அடைய அருந்ததி அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் கோபம் உச்சம் தொட, கதாநாயகியைக் கொலை செய்யவும் துணிவார் இந்த அருந்ததி. இப்போதும் ரியாலிட்டி ஷோ நடுவராக இவரை பார்த்தாலே பங்கேற்ப்பார்கள் பதறுகிறார்கள்... ஏங்க? ஏன்?
**
6. ஸ்ருதி சந்திரசேகர்:
ஒரே படத்தில் அமைதியான நல்ல பெண்ணாகவும், டெரரான வில்லியாகவும் செம கெத்துக் காட்டிய சலோனி லூத்ரா, ஒரு காட்சியில் நடு வீட்டில் அமர்ந்து போதைப் பொருள் அடிப்பதும், கடைசியில் அப்பாவையே கொலை செய்துவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதும் என கொஞ்சம் டூ மச் தான். ஆனாலும் பயம் காட்டிய வில்லி.
**
7. தேஜஸ்வினி ரங்கநாதன்:
தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் பியூட்டி, க்யூட்டி , கிளாமர் வில்லி. தீராத விளையாட்டு பிள்ளை விஷாலுக்கே படத்தில் விளையாட்டு காட்டியவர். வித்தியாசமான இடையூறுகளைக் கொடுத்து இம்சைக் கொடுப்பதும், சில இடங்களில் பல்ப் வாங்கி, சந்தானத்திடம் கலாய் வாங்குவதுமென நீது ஒரு வித்தியாச வில்லி. அப்போ அந்த எம் பி டபிள்யூ காரு?
8. காயத்ரி:
ஸ்நேகிதியே படத்தின் கம்பீரமான போலீஸ்.முற்றிலும் பெண்களே நடித்த பெண்களுக்கான படம். தன் தங்கைக்காக சில பல நியாயங்களுடன் வில்லியாக மாறிய வீராங்கனை. கடைசிக் காட்சியில் துப்பாக்கியை நீட்ட மூன்று பெண்களும் தன் தங்கையாக தெரிய, சிரிப்பார் பாருங்கள்... அடடே தபு தபு தான்.
**
9. ராஜ ராஜேஸ்வரி :
’இந்த ராஜ ராஜேஸ்வரியை எந்த கொம்பனாலேயும் அழிக்க முடியாது’ என சூப்பர் ஸ்டாரையே சொடக்கு போட்டு மிரட்டியவர். ஏழடி ஊயர வில்லனையே அசால்டா அடிப்பார் சூப்பர் ஸ்டார், அதிலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வேறு உதவிக்கு வருவார். ஆனாலும் ராஜராஜேஸ்வரியை சமாளிப்பது ரஜினிக்கே சவால்தான்!
**
10. மீனாட்சி:
காதலன் தனக்கு மட்டுமே செவி சாய்க்க வேண்டுமென நினைத்து காதலன் அறிவுநிதியின் நண்பர்களை கொலை செய்து கடைசியில் தானும் இறந்து போகும் மீனாட்சி கொஞ்சம் கறாரான காதலி தான். இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது பூர்ணா மேடம்!
**
11. மாயா
தன் குடும்பத்தை அழித்த ஒரு குழுவையே அழிக்க திட்டமிட்டு, கொலையும் செய்து, உயிருடனே ஹீரோயின் காயத்ரி ரகுராமை புதைக்க பிளான் செய்த அழகிய அசுரி. எங்க இருக்கீங்க மேடம்?
**
12. கீதா
“ அப்படியே குத்துதா ? குடையுதா ? எனக்கு இப்படி தான இருந்துருக்கும்?” என சிம்புவைக் கலங்கடித்த கறார் வில்லி. அதே போல், ஆயிரத்தில் ஒருவன் ஆள் மாறாட்டம் செய்து வில்லத்தனத்தில் அக்கா வேற லெவலில் பிண்ணியிருப்பாங்க. கொன்னுட்டியேக்கா..!
13. கண்மணி
’வாலி’ அஜித்தின் பெண் வெர்ஷன். “ எனக்கு நீங்க வேணும் மாமா” என கெஞ்சுவதும், மிரட்டுவதுமாய் ’கலாப காதலன்’ ஆர்யாவை அரள விட்டிருப்பார் அக்ஷு. என்னமா இப்படி பண்றீங்களேம்மா...
14. கௌரி:
பாலசந்தரின் கைவண்ணத்தில் உருவான ”புதுபுது அர்த்தங்கள்” படத்தின் ‘சந்தேக சாம்ராட்’ மனைவி. இப்படிக் கூடவா கணவனை சந்தேகப்படுவார்கள் என்னும் அளவுக்கு அதிர வைத்த வில்லி! என்டெ குருவாயூரப்பா...
15. நீலாம்பரி
ரம்யா கிருஷ்ணன்... எத்தனை வில்லிகள் வந்தாலும் வில்லித்தனத்தின் கில்லி நீலாம்பரிதான். “படையப்பா” என ஆக்ரோஷமாக கத்தி, சூப்பர் ஸ்டாருக்கு முன்னாலேயே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, அவர் ஸ்டைலிலேயே சல்யூட் அடித்த இந்த எரிமலை ஏஞ்சலை யாராலும் அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்க முடியாது.
- ஷாலினி நியூட்டன் -
