Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வென்றவர்களும்.. தோற்றவர்களும்.. எப்போதும் கேட்க விரும்பும் 20 பாடல்கள்! #EnergyBoosterSongs

வாழ்க்கைல எப்பவுமே வெற்றி, தோல்விங்கற சக்கரம் சுழன்றுகிட்டேதான் இருக்கும். ஒரு கட்டத்துல வெற்றியும், இன்னொரு கட்டத்துல தோல்வியும்னு மாறி மாறி நம்மளைப் போட்டு அது சுத்திகிட்டுதான் இருக்கு. வெற்றி வர்றப்ப அது தர்ற தன்னம்பிக்கையை எடுத்துக்கறவனும், தோல்வி வர்றப்ப அது தர்ற பாடத்தை எடுத்துக்கறவனும் அடுத்தடுத்த படிகளுக்கு போய்கிட்டே இருக்கறது வரலாறு.

சினிமா பாடல்கள், பலருக்கு ஊக்கமா இருந்திருக்கு. இருந்துகிட்டிருக்கு. இங்க இருக்கற 20 பாட்டும் அப்படித்தான். ‘நான் சென்னையை விட்டு போய்டலாம்னு முடிவெடுத்தப்போ, கண்ணதாசனோட ‘மயக்கமா கலக்கமா’ கேட்டுத்தான் இங்கயே இருந்து ஜெயிச்சேன்’ன்னு சொன்ன வாலி, பின்னால அவரே ‘வேர்வை வெற்றி தரும்’ன்னு சிவகார்த்திகேயன் வரைக்கும் எழுதி நிலைச்சார்.

இந்தப் பாடல்கள் உங்களுக்கு ஊக்கம் தரலாம். ஆறுதலா இருக்கலாம். இந்த இருபது பாட்டையும் ப்ளே லிஸ்ட்ல போட்டு, டெய்லி ஒருக்கா கேளுங்க..

லைஃப் ஜாலியா இருக்கும் பாஸ்!

--

1. அகரம் இப்போ சிகரம் ஆச்சு

படம்: சிகரம்
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
குரல் : கே.ஜே.யேசுதாஸ்

 

 


நம்பிக்கையே நல்லது...
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

**
2. எல்லோருக்கும் நல்ல காலமுண்டு

படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
குரல்: கே.ஜே.யேசுதாஸ்

 

 


நாளை என்றோர் நாளை நம்புங்கள்

**

3. தோல்வி நிலையென நினைத்தால்

படம்: ஊமைவிழிகள்
இசை: மனோஜ் - கியான்
வரிகள்: ஆபாவாணன்
குரல்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ் - ஆபாவாணன்

 

 

 


விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

-----------
4. ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்..

படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத்
வரிகள்: வாலி
குரல்கள்: அனிருத், யோ யோ ஹனிசிங், ஹிப் ஹாப் தமிழா

 

 

உன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கைப் போலே
வேர்வை வெற்றி தரும்!


--
5. ஜனகனமன ஜனங்களை நினை

படம்: ஆய்த எழுத்து 
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் / கார்த்திக்

 

 

மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து
படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து!

--
6. போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை

படம்: இறுதிச்சுற்று
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: விவேக்
குரல்கள்: பிரதீப்குமார்

 

 


உலகம் ஒரு திசையில் நடந்திட..
விரைந்து மறுதிசையில் பறக்கிறேன்

----------------

7. என்ன தேசமோ

படம்: உன் கண்ணில் நீர்வழிந்தால்
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
குரல்: கே.ஜே. ஏசுதாஸ்

 

 


சோகம் என்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு! 

----

8. மடை திறந்து பாயும்..

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
குரல்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

 

 


நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம்
நாளும் மங்கலம்!


---

9. திரும்பி வா


படம்: பிரியாணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கங்கை அமரன்
குரல்கள்: யுவன், இமான், S.S. தமன், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார்


 

 

 

நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு!

--

10. தனி ஒருவன் நினைத்துவிட்டால்

படம்: தனி ஒருவன்
இசை: ஹிப் ஹாப் தமிழா
வரிகள்: ஹிப் ஹாப் தமிழா
குரல்கள்: போபோ சாஷி, ஹிஹ்ஹாப் தமிழா

 

 


அச்சம் தவிர்..
ஆண்மை கொள்...
தீயதை எதிர்த்து பகையை வெல்!

--

11. நிமிர்ந்து நில்.. துணிந்து செல்

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கங்கை அமரன்
குரல்: சங்கர் மகாதேவன்

 

 


விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்பு காட்ட
அனைத்துமிங்கே நட்புக்காக!

-----------------------
12. மாயவிசை

படம்: இறுதிச்சுற்று
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: விவேக்
குரல்கள்: விஜய்நரேன், ஸ்ரீ ஷ்யாமளாங்கன், சந்தோஷ் நாராயணன்

 

 


உன் உயரம் உன்னைவிட உயரமே!
சென்றடையும் வரை உழை தினமுமே!

---------------------

13. பிரபலமாகவே பிறந்த ஆளடா

படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: முத்தமிழ்
குரல்: சித்தார்த்

 

 


சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபலிக்குதே!

--

14. ஒவ்வொரு பூக்களுமே

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
வரிகள்: பா.விஜய்
குரல்: சித்ரா

 

 


மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா!

-----------------

15. வெற்றி நிச்சயம்

படம்: அண்ணாமலை
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

 


மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்?
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்!

------------------
16. வேலை இல்லா பட்டதாரி

படம்: வேலையில்லா பட்டதாரி
இசை: அனிருத்
வரிகள்: தனுஷ்
குரல்: அனிருத்

 

 


தடை அதை உடை புது சரித்திரம் படை.. நாளை நமதே!
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும்.. மாற்றம் உறுதி!


------------------------

17. மயக்கமா கலக்கமா

படம்: சுமைதாங்கி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.B.ஸ்ரீனிவாஸ்

 

 


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!

-------------

18. மோதி விளையாடு

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன், லெஸ்லி லூயிஸ்
வரிகள்: வைரமுத்து
குரல்கள்: ஹரிஹரன், தேவா

 

 


தோல்வி எல்லாமே எருவாக்கு.. ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு.. ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா!

---

19. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.B.ஸ்ரீனிவாஸ்

 

 


பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!

---

20. ஒரு சூறாவளி கிளம்பியதே

படம்: தமிழ்படம்
இசை: கண்ணன்
வரிகள்: சந்துரு
குரல்: சங்கர் மகாதேவன்

 

 


இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது
லட்சிய வெறி!
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில்
தூங்காது விழி!
 

பரிசல் கிருஷ்ணா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்