மாதவனை ஏன் பெண்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDMadhavan

‘வயசானாலும் பரவாயில்ல, ஹி இஸ் ஸோ மேன்லி!’ என இன்றும் மாதவனைப் பார்த்து உருகாத பெண்கள் மிகக் குறைவு. இவருக்கு ஏன் இவ்வளவு கிரேஸ்?!

1. முதலும் முக்கியமுமாக பெண்களுக்கு ஆண்கள் மேன்லியான லுக்கில் இருந்தால் மிகவும் பிடிக்கும். அதில் 100% தகுதியுடன் என்றென்றும் புன்னகைக்கிறார் மேடி.

2. எதற்கும் அலட்டிக்காமல், பந்தா இல்லாமல் இருக்கும் லவ்வர் பாய்ஸுக்கு பெண்கள் எப்போதும் டிக் அடிப்பார்கள். அதில் மாதவனுக்கு டபுள் டிக்.

3. ‘நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு!’ என்று மணி சார் இவருக்கு எழுதிய டயலாக்கை இவர் டெலிவரி செய்த விதமும், ‘இப்படி ஒருத்தன் நம்மைச் சொல்ல மாட்டானா’ என்று ஏங்கவைத்த விதமும்... பெண்களின் மனசில் மேடிக்கு ஃபார்எவர் சிம்மாசனம் போட்டுவிட்டது.

4. கில்லிங் ஸ்மைல். பசங்க சத்தமா சிரிக்கிறதைவிட, ஸ்மார்ட்டா சிரிக்கும்போது ரொம்ப ஹேண்ட்ஸமா இருப்பாங்க. அந்த சாக்லெட் பாய் சிரிப்பில் மேடி, செம கேடி.

5. தமிழ் சினிமாவின் கேர்ள்ஸ் சாய்ஸ் நடிகர்களான கமல், அஜித், அப்பாஸ், அரவிந்த்சாமியை எல்லாம் தன் பீக் பீரியடில் ஓரம்கட்டி தனக்கென தனி இடம்பிடித்த மாதவனை, பெண்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?

6. பிடித்த ஹீரோயினைப் பற்றிக் கேட்டா, ‘அவங்கள சொன்னா இவங்க கோபப்படுவாங்க, இவங்கள சொன்னா அவங்க கோபப்படுவாங்க’ என்று யோசிக்காமல், ‘இப்போ எனக்குப் பிடிச்ச நாயகி தீபிகா படுகோனே’ என, மனதில் பட்டதை எப்போதும் மறைக்காமல் பேசும் நடிகர்.

7. ஹீரோவோ, வில்லனோ... கேரக்டரோட தரம் பார்த்து படத்தை டிக் அடிக்கும் மாதவன், கமலோட நடிச்ச ‘அன்பே சிவம்’ படத்தில், அந்த ஆளுமையின் வீச்சுக்கு நடுவிலும் தனக்கான ஸ்பேஸை திரையில் ஏற்படுத்திக்கிட்ட பெர்ஃபார்மர்.

8. எங்கும் எந்தப் பேட்டியிலும் தன் மனைவி, குழந்தை குறித்து தவறாமல் பேசிவிடுவது மாதவன் ஸ்பெஷல். டிரீம் பாயாக மட்டுமில்லாம, ‘இப்படி ஒரு கணவன் அமையணும்ப்பா’ என்ற ஏக்கம் தந்த நடிகர்.

9. சாதாரண சீரியல் நடிகரா இருந்து தமிழ்நாட்டின் டார்லிங் ஹீரோ ஆன அவரது கிராஃப், நீண்ட காத்திருப்புக்குப் பின் தயாரிப்பாளர், நடிகரா ‘இறுதிச்சுற்றி’ல் க்ளாஸ் வெற்றி பெற்ற நிதானம்... இப்படி அவரோட புரொஃபைலையும் சேர்த்தே ரசிக்கிறாங்க பெண்கள்.

10. 15 வருடங்களுக்கு முன் ‘சிநேகிதனே’ என்று 80களில் பிறந்த பெண்களை ஹம்மவைத்த மேடி, இப்போது ‘ஏ சண்டக்காரா’ என 90களில் பிறந்த யூத் கேர்ள்ஸ் வரை ரசிக்கவைத்தால், பின் அவரோட 46வது பிறந்தநாளிலும் நாங்க ஏன் எழுதமாட்டோம் இப்படி ஒரு கட்டுரை?

ஹேப்பி பர்த்டே மேடி!

- ஷாலினி நியுட்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!