Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இவங்க படத்துல இது நிச்சயமா இருக்கும்! #Directors Special


ஒவ்வொரு டைரக்டரும் தங்களோட டெம்ப்ளேட் முத்திரையை, தங்களோட படங்கள்ல பதிச்சுடறாங்க. இங்க சில இயக்குநர்களும், அவங்க படங்கள்ல இருக்கற சில ஒற்றுமைகளும்..

1.கௌதம் வாசுதேவ் மேனன்

     இவர் படத்த எடுத்துக்கிட்டோம்னா, ஹீரோவுக்கு எவ்வளவு டீசன்ட்டான லுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு டீசன்ட்டான லுக் கொடுத்திருப்பாரு. காது கட்டிங் கிருதா இருக்கும். அதாவது எந்தப் படத்துலயும் காதுல பாதிக்குக் கீழ ஹீரோவுக்கு கிருதா இருக்காது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில நம்ம சிம்புவுக்குக் கூட கிருதாவ கட் பண்ணி விட்டிருப்பார். ஹீரோயினை செம அழகாவும், மாடர்னாவும் காட்டீருப்பாரு.
    
அடுத்து இவரு படத்தில ஹீரோயின பாத்த ஃபர்ஸ்ட் சைட்லயே ஹாரிஸ் ஜெயராஜ் அல்லது ரஹ்மான் BGM போட்டு ஹீரோவோட இதையத்த வெடிக்க வெச்சிருவாங்க. நடுவுல 'நடுநிசி நாய்கள்' படம் மட்டும் ஏதோ மிஸ் ஆயிடுச்சு.  அதிகமா மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பத்தின சீன்  இருக்கும். ஏன்னா அவரும் மெக்கானிக்கல் தான! எது எப்படியோ படத்த செம க்ளாசா கொடுத்திருவாரு.

அச்சமென்பது மடமையடா படத்தில மட்டும் ஏன் பாஸ் சிம்புவுக்கு தாடி?...

2.சுந்தர்.சி

 கண்டிப்பா ஒரு ஃபேமிலி கும்பல் சாங் இருக்கும். அந்த ஒரு பாட்டைப் பார்த்தாலே, படத்துல இருக்கற மொத்த காஸ்டிங்கும் தெரிஞ்சுடும். அப்டி, அந்தப் படத்தில நடிச்சிருக்கிற அத்தனை ரோல்களும் அந்த ஒரு பாட்டுல வந்திருவாங்க. முடிஞ்சவரைக்கும் மூணு நாயகிகள் கலர்ஃபுல்லா இருப்பாங்க. அடுத்தடுத்து ட்ரெண்ட்ல இருக்கிற காமெடியன சரியா புடிச்சிட்டே வருவாரு. இப்ப சூரி, அதுக்கு முன்னாடி சந்தானம், அதுக்கு முன்னாடி விவேக், வடிவேலு, அதுக்கும் முன்னாடி கவுண்டமணி செந்தில்.. அதுக்கும் முன்னாடி.. ஹலோ.. அப்ப அவரு டைரக்டரே ஆகலைங்க!.

3.கே.வி.ஆனந்த்

          கனா கண்டேன்-ல இருந்து அனேகன் வரைக்கும், இவரோட எல்லா படத்துலயும் வில்லனை ஹீரோ கூடவே வரவெச்சு, பாஸிட்டிவ் ரோல்ல காமிச்சு அப்புறம் தான் சஸ்பென்ஸை  உடைப்பாரு. பாட்டு சீன் மட்டும் மலை முகடு, பள்ளத்தாக்குகள், கரணம் தப்பினால் மரணம் பாணி லொகேஷன்கள்லதான் டூயட்டுகள் இருக்கும்.. அடுத்த படத்திலயும் சஸ்பென்ஸ் வில்லன் தானே சார்?..


4. ஷங்கர்


           ஷங்கர் சாருக்கு ராஜா கெட் அப் மேல அப்டி என்ன காதல்-ன்னு தெரியல. ஷங்கர் படம்னா ஒரு ஊருக்கே பெயிண்ட் அடிச்சிருவாங்க, கண்டிப்பா கதைக்கு ஏத்த மாதிரியான ராஜா கெட்டப்ல ஒரு பாட்டுக்கு ஹீரோ வந்திருவாரு. ராஜா கெட்டப்பா இருந்தாலும் ஒவ்வொரு படத்திலயும் ஒவ்வொரு வித்தியாசமான ராஜா காட்டுறது ஷங்கர் சாரோட ஆல்டைம் ஸ்பெஷல். அதுலயும் எந்திரன் பட அரிமா பாட்டுல இயந்திர ராஜாவா அவ்ளோ ஸ்டைலான ரஜினி காட்டுனதும், ஐ படத்துல மிருகங்களின் ராஜாவாக விக்ரம காட்டுனதும் இதெல்லாம் ஷங்கரின் ஸ்பெஷல்கள். பட் காதலன் படத்தில ஏன் சார் ராஜா கெட்டப்ப மிஸ் பண்ணிட்டீங்க?


5.ஹரி


           அருவா இல்லாத ஹரி சார் படம் சத்தியமா சான்ஸே இல்ல. படம் முழுக்க பரபரபரபரபர-ன்னே இருக்கும். படம் தொடங்கினதும் சவுண்ட கொஞ்சம் குறைச்சு வெச்சுட்டுத்தான் பாக்கணும். யாரு வந்தாலும் கத்திக்கிட்டே இருப்பாங்க. அப்பறம்  எப்பேர்ப்பட்ட டெக்னாலஜி கார்கள் மார்க்கெட்டுக்கு வந்தாலும் ஸ்கார்ப்பியோ கார் தான் இவர் படங்கள்ல சர்ரு புர்ருனு போயிட்டே இருக்கும். அதுவும் எவ்ளோ மெதுவா வந்தாலும், க்க்க்றீச்ச்ச்னு சவுண்டோடதான் ப்ரேக் அடிக்கும். ஒரு  ஸ்கார்ப்பியோ பனை மரத்துல முட்டி கீழே விழுந்தாதான் அது ஹரி படம். கதைக்கு சம்மந்தமில்லாத தனியா ஒரு கதாபாத்திரம் ‘சிரிக்கப் போறியா இல்லையான்னு’ நம்மள மெரட்டிட்டே காமெடி பண்ணிட்டு இருக்கும். கேமரா வ்யூ இவரு படத்தில தனி ஸ்பெஷல். எதுவா இருந்தாலும் ஹீரோ அப்பா, அம்மா, தாத்தா, அப்பத்தா, தாத்தம்மான்னு எல்லாருகிட்டயும் கலந்து ஆலோசனை பண்ணிட்டுதான் செய்வாரு. ஹீரோ ஹீரோயின் லவ்ல குடும்ப பிரச்சினை கண்டிப்பா இருக்கும்ப்பா.  சிங்கம் -7லயும் இருக்காம். சிங்கம் செவனான்னு திட்டாதீங்க.. வரத்தான போகுது எப்படியும்!

6.வெங்கட் பிரபு

      டி.ஆர் மாதிரி குடும்பப் படம் எடுக்கற லிஸ்ட்ல இவரும் இருக்கார். என்ன குடும்பத்துகூட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்க. எல்லா படத்தையும், ஒரு டூர் போற மாதிரி கிளம்பி ஷூட் பண்ணிட்டு வந்து எடிட்டர் கிட்ட குடுத்துடுவாரு போல. அப்புறமா கஷ்டப்பட்டு வெட்டி ஒட்டி படமா மாத்திடுவார். அடுத்து , ஒரு ‘பப்’ சாங்க், ஒரு நம்பிக்கை பூஸ்ட் ஏத்தற சாங், முக்கியமா அவரோட தம்பி பிரேம்ஜி இந்த மூணும் இருந்தே ஆகும். எப்படியோ, படத்த பசங்களுக்குப் புடிச்ச மாதிரி கொண்டு வந்து பட்டைய கிளப்பீருவாரு.. மங்காத்தாடா!

7.பாலா

            எந்த ஹீரோ இவரு கையில கிடைச்சாலும் அந்த ஹீரோவோட முகத்தை அவங்களோட ஆதார் ஐடி கார்டுல இருக்குற மாதிரி கொண்டு வந்திருவாரு. ஹீரோன்னா அழகாத்தான் இருக்கணுமானு கேப்பாரு, இவர் படம் எடுத்துட்டார்னா, யாராவது ஒருத்தருக்கு அந்த வருஷத்தில ஒரு அவார்டாவது நிச்சயம் இருக்கும். முடிஞ்சவரைக்கும் கொடூரமா யாராவது சாவாங்க, இல்லை சாகடிக்கப் படுவாங்க. 


8.செல்வராகவன்

         ஹீரோயினோட அழகை ஹீரோ குறுகுறுனு பாக்குற சீன் கட்டாயம் இருக்கும். அடுத்து அதே ஹீரோ அதே ஹீரோயின் கிட்ட 'பளார்'னு அரை வாங்கற சீனும் கன்ஃபார்ம். படம் வந்தா, நல்லாருக்கு... செம’ன்னும் ‘நல்லால்ல’ன்னும் ரெண்டு க்ரூப் இணையத்துல கட்டிப்புரண்டு சண்டை போட்டுட்டிருக்கும். ஆனா படம் அடல்ட்ஸ் ஒன்லி தான். 

9.மணிரத்னம்

              இருட்டு. ரயில். மழை. கடல். காதல். ஒரு வார்த்தைல டயலாக். 

10.கே.எஸ்.ரவிக்குமார்

            படத்தில ஒரு சீன்லயாச்சும் இவரு கண்டிப்பா வந்திருவாரு. இது நாடறிந்த ஓர் ஒற்றுமை. அடுத்து இவரு படத்தில காமெடியன் பட்டாளம் பலர் இருந்தாலும் ஹீரோக்குன்னு தனி போர்ஷன காமெடிக்காக ஒதுக்கி வெச்சிருப்பாரு. எவ்வளவு சீரியஸான ஹீரோவாக இருந்தாலும் இவரு படத்தில காமெடி கட்டாயம் பண்ணித்தான் ஆகணும். ரெண்டு ஹீரோயின்கள் சேர்ந்து ஹீரோவோட போட்டா போட்டி நடனம் ஆடணும்னு அக்ரீமெண்ட் போட்டுதான் படமே ஸ்டார்ட் பண்ணுவாரு. 

ஓகே.. இதுல சில பேர், ரெஸ்டாரண்ட் போய் ஆர்டர் பண்ணினா எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!

சா.கவியரசன்

மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement