வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (14/07/2016)

கடைசி தொடர்பு:16:07 (14/07/2016)

வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா? - கண்டுபிடிச்சுட்டோம்!

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, அர்ஜுன் அம்மா யாரு? போன்ற வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளுக்கு எல்லாம் பர்த் பிளேஸ் வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விதான். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் யோசிச்சு மண்டையை பிச்சுக்குறது? ஸோ, களத்துல இறங்கிட்டோம். இது இப்ப ரொம்பத் தேவையானு சொல்ற உங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது. அட சும்மா ஒரு ஜாலிக்கு...

பட ஆரம்பத்துல குட்டிக் கமலை பிடிச்சுட்டு போற போலீஸ் அப்பாவினு வெளியே விட்டுடும். அவரும் நேரா அப்பா கிட்டிகிட்ட போவார். பாலோ பண்ணி வர்ற போலீஸ் கிட்டியை கொன்னுடும். இப்படி வெகுளியா வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிற குழந்தை கண்டிப்பா நல்ல புள்ளையாதான இருக்கும்.

  இதுவும் போலீஸ் சீன்தான். பெரிய கமலை அடி வெளுக்குற 'காட்டான்' இன்ஸ்பெக்டர் கமல் பக்கத்துல வந்து 'அடிடா. அடிடான்னு சொல்வாப்ல. உங்களை அடிச்சவன் மூஞ்சியை முஷ்டி பக்கத்துல வச்சுகிட்டு அடி அடினு சொன்னா டெம்ப்ட் ஆகி சில்லு மூக்கை உடைச்சிட மாட்டீங்க? ஆனா, கமல் ஞானி மாதிரி 'நான் அடிச்சா நீ செத்துடுவனு சொல்வார். வாட் எ மேன்!

  கமல் வாப்பாவை போலீஸ் கொன்னுடும். வெளியே நிக்கிற தங்கச்சிகிட்ட ஆறுதல் சொல்லிட்டு காட்டான் போலீஸைத் தேடி கிளம்புவார். அப்போ ஜனகராஜ்கிட்ட தங்கச்சியை பாத்துக்கோனு சொல்லுவார். அதுக்கு ஜனகராஜ் ரியாக்‌ஷன் 'அட போய்யா லூசு'ங்குற மாதிரி இருக்கும். சத்தியமா ஜி. ஆனாலும் காரியமே கண்ணா கிளம்புவார் வேலு அண்ணன். தட் தங்கச்சி சென்டிமென்ட் சிலிர்த்துடுச்சு மொமென்ட்.

  காட்டானை கண்டுபிடிச்சு அடி வெளுப்பார். சந்து பொந்துல எல்லாம் கட்டிப் புரண்டு சண்டை போட்டு கடைசில அவரைக் கொல்லப் போறதுக்கு முன்னாடி அக்கம் பக்கம் பார்ப்பார் கமல். உடனே வேடிக்கை பார்த்த ஜனமெல்லாம் வீட்டுக்குள்ள போய் ஷட்டரை சாத்திக்கும். 'இந்தக் கொலை யார் மனதையும் பாதிப்பதற்கு அல்ல'னு கொலைக்கே டிஸ்க்ளைமர் போட்ட வேலு பாய்க்கு சல்யூட்!

  புறம்போக்கு நிலம்னு ஒரு சேட் மொத்தமா இவங்க வீடுகளை ஸ்வாஹா பண்ணப் பார்ப்பார். அதுக்கு பழிவாங்க சேட் வீட்டு பொருட்களை ஒண்ணுவிடாம சுக்கல் சுக்கலா நொறுக்குவார் கமல். ஆனா ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் விட்டுடுவார். அது வேலு நாயக்கரோட மென்மையான மறுபக்கம். கலாரசிகனய்யா நீர்!

  தலைமுடி ப்ளீச்சிங் பவுடர் கலர்ல இருக்குறவங்ககிட்ட போய், 'உங்களுக்கு வயசாயிடுச்சு'னு சொன்னாலே செம காண்டாவாங்க. மும்பையவே கட்டி ஆளுற டான்கிட்ட அப்படி சொன்னா எவ்வளவு கோவம் வரும்? ஆனா ஜனகராஜ், 'உங்களுக்கு வயசாயிடுச்சு நாயக்கரே, முடியாது உங்களால'னு சொல்லும்போது கோவப்படாம ஜாலி மூடுக்கு போவார். பொண்ணு கார் ஓட்டி குப்புறத் தள்ளுனாலும் அதே ரியாக்ஷன்தான். குழந்தை மனசு ஜி உங்களுக்கு!

  போலீஸ் எஸ்.பி உதவி கேட்டு கமல்கிட்ட வருவார். அவரை சேர்ல உட்கார சொல்லிட்டு 'நான் இப்படிதான்'னு தரையில உட்கார்வார் வேலு நாயக்கர். மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி.

  அவர் பாம்பேக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆயிடும். ஆனாலும் கடைசி வரை இந்தில பேசவே மாட்டார். வட்டார மொழிதான். இந்தித் திணிப்பை அவங்க ஊருலேயே எதிர்த்த முதல் டான் அவர்தான். அவரோட மொழிப் பற்று. கத்துக்கிடணும் ப்ரோ! கத்துக்கிடணும்.

  அட அவ்வளவு ஏன் ஜி? போலீஸ் உங்களை கைது பண்ணுது. தூக்குத் தண்டனை கூட கிடைக்கலாம் உங்களுக்கு. அந்நேரம் வந்து ஒரு குழந்தை 'நீங்க நல்லவரா, கெட்டவரா'னு கேட்டா, இருக்குற கடுப்புல அதிகபிரசங்கித்தனமா கேள்வி கேக்குறீயானு தலைல கொட்டமாட்டீங்க? ஆனால் வேலு நாயக்கர் பதில் சொல்லுவார். அதுவும் அந்த வாய்ஸ் மாடுலேஷனும் ஹம்மிங்கும் தெய்வ லெவல்.

- ஆகவே மக்களே! இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் வேலு நாயக்கர் உஜாலாவில் வெளுத்து எடுக்கப்பட்ட உத்தமர் என்பதே ஆகும்.

ரெடி, ஸ்டார்ட் மீஜிக்!

நித்தீஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க