Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

மெர்சல் இயக்குநர் நோலன்! #HBDChristopherNolan

வர் ஒரு மெர்சல்... உலகம் இடிந்து விழப்போகிறது, ஏலியன் ஆக்கிரமிப்பு, பேய் என ஹாலிவுட் எப்போதும் கலங்கடித்துக் கொண்டே இருக்க வித்தியாச திரைக்கதைகளில் கதை சொல்லி கவனம் ஈர்ப்பவர். அந்த பெயர், அந்த கலைஞன், அந்த மெர்சலின் பெயர் தான் கிரிஸ்டோஃபர் நோலன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும், ஆதர்ச இயக்குனர் என சினிமா ரசிகர்களுக்கு ஒருவர் நிச்சயமாய் இருப்பார். ஒரு சாரார் க்ரிஃபித் (D.W.Griffith),  ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick), ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock)   போன்ற இயக்குனர்களின் படங்களை விரும்பிப் பார்ப்பர். மற்ற சிலருக்கு வெர்னர் ஹெர்சாக், ட்ரெயர், மசாகி கோபயாசி, ஃப்ரான்சின் ப்ரெஸ்ஸன் போன்றவர்களைப் பிடிக்கும். ஆனால், 90-களுக்குப் பின் பிறந்த பலருக்கு மெர்சல் நாயகனாக மாறினார் ஒருவர். ரசனை என்பதே கிளாசிக்கலாகத்தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி, மெர்சலாக மாற்றினார் நோலன். சோ கால்டு கிளாசிக் ரசிகர்கள்கூட தவறாமல் பார்க்கும் ஓர் இயக்குனரின் படம் என்றால் அது நோலன் தான்.

நோலன் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல். அப்போது, நம்ம ஊரில் ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் வயது இருக்கும் நோலனுக்கு. அப்பாவின் சூப்பர் 8 கேமிராவை எடுத்துக் கொண்டு சினிமா எடுக்கப் போகிறேன் என ரகளை செய்திருக்கிறார்.

கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கார்ப்பரேட் இண்டஸ்ட்ரி வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்தவருக்குள் க்ரியேட்டிவிட்டி தாறுமாறாக தாண்டவமாட... குறும்படங்கள் எடுக்கத் தொடங்கினார்.

குறும்படமாக என்றாலும் அதிலும் சம்திங் டிஃப்ரன்ட் எதிர்பார்ப்பவர் நோலன். வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை அடித்துக் கொல்ல ஷூவுடன் பரபரத்துக் கொண்டிருக்கிறான் ஒருவன். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் மிஸ்ஸாகிக் கொண்டே இருக்கிறது அந்த குட்டியூண்டு  உருவம். கடுப்பான அவன் செம காண்டில் ஒரே அடி அடிக்க ஷூவில் சிக்கி சின்னா பின்னமாகிற அந்த உருவம் என்ன என்பதே வித்தியாசமான சிந்தனைதான். கடைசியில் சந்தோஷத்தில் சிரிக்கும் அவனுக்குப் பின்னால்.....

அட.. வெறும்  ரெண்டே முக்கால் நிமிஷம்தான் பாஸ்.. நீங்களே கீழ இருக்கற டூடுள்பக் குறும்படத்தைப் பாருங்க... மெர்சலாய்டுவீங்க!

 குறும்படத்துக்குப் பிறகு நேராக சினிமா தான் என முடிவு செய்து முதல் படமான 'ஃபாலோயிங்' கதையை எழுதத் தொடங்கினார். அப்போது அந்தப் படத்தை எடுக்கத் தேவையாக இருந்த 6000 டாலர் கூட நோலனிடம் இல்லை. அதற்காகவே வேலைக்குச் சென்று சம்பாதித்தார். 'டூடுள்பக்' குறும்படத்தில் நடித்த ஜெரிமை தான் 'ஃபாலோயிங்' படத்திலும் ஹீரோ (நோலனுடன் சேர்ந்து படத்தை தயாரிக்கவும் செய்தார்). வாரக் கடைசியில், ரிலாக்ஸாக இருக்கும், நண்பர்களை வைத்து , ஃபாலோயிங் படத்தை இயக்கினார் நோலன்.கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட 'ஃபாலோயிங், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஜாம்பவானின் 'சேவிங் ப்ரைவேட் ரியான்' படத்துடன் வெளியானது. நோலன் பெரிய அளவில் வெளியே தெரியாது போனாலும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் வசூல் செய்தது. 

இந்த முறை இன்னும் பெரிய களத்துக்குள் இறங்குகிறார் நோலன். தம்பி ஜோனதன் நோலன் எழுதிய 'மெமண்டோ மேரி' சிறுகதையைத் தழுவி 'மெமண்டோ'வுக்கான திரைக்கதையை எழுதுகிறார். நடந்த விஷயங்கள் கலரில் ரிவர்சில் ஓடவிட்டபடி, ப்ளாக் அண்ட் ஒயிட்டில் முதலில் நடந்ததை சொன்னார்.குறைந்த தியேட்டர்களில் வெளியானதால் படம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால், படம் பார்த்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் செல்லும் இடமெல்லாம் மெமண்டோவின் சிறப்பைக் கூற ரசிகன் படத்தை தேடிச் சென்று பார்க்கிறான். கொண்டாடுகிறான், நோலன் கவனம் பெறுகிறார். அதுவே பின்னாளில், இந்தியா முழுக்க கஜினியாக மாற, அது வேறு இது வேறு, படைப்பாளிகள் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் , ஆனார்கள். இது பற்றி ஒருமுறை பாலிவுட் நடிகர் அனில் கபூரிடம் சொல்லி, ஷாக் ஆனாராம் கிறிஸ்டோபர் நோலன்.  அதன் பின் வார்னர் பிரதர்ஸுக்காக நோலன் எடுத்த குறைந்த பட்ஜெட் ரீமேக் படம் 'இன்சோம்னியா' 100 மில்லியன் டாலர் வசூல் செய்ய அவரின் க்ராஃப் எங்கோ சென்றது. 

அதனால் இம்ப்ரஸ் ஆன வார்னர் பிரதர்ஸ் பேட்மேன் கதாபாத்திரத்தை நோலன் முன் வைக்கிறது. வில்லனை அழிக்கும் சூப்பர் ஹீரோ என ஜல்லியடித்துக் கொண்டிருந்த சப்ஜெக்ட்களுக்கு நடுவே ஹீரோ பேட்மேனை விட கெத்துக் காட்டும் கதாபாத்திரமாக ஜோக்கரைப் படைத்திருந்தார் நோலன். வில்லன் கதாபாத்திரத்துக்கென நியாயங்களை முன்வைத்தது, சாதுர்யமான வசனங்கள் என சூப்பர் ஹீரோ படத்தை படு சூப்பராக எடுத்து வித்தியாசம் காட்டினார் நோலன். பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட்  ரைசஸ் என அடுத்தடுத்த நோலனிச சூப்பர் ஹீரோ கதைகள் எகிறி அடித்தது பாக்ஸ் ஆஃபீசை. இவற்றுள் டார்க் நைட்டும், டார்க் நைட் ரைசஸும், 1 பில்லியன் கலெக்ஷனை அள்ளியது.

பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு எப்போதுமே , செகண்ட் யூனிட் என ஒன்று இருக்கும். அதி முக்கியமான காட்சிகளை, இயக்குனர் ஒரு பக்கமும், வேறு சில சில காட்சிகளை துணை இயக்குனர்களும் மற்றொரு பக்கம் ஒரே சமயத்தில் எடுப்பார்கள். ஆனால், நோலன், எல்லாக் காட்சிகளையும் அவராகவே இயக்கினார்.

மேஜிக் நிபுணர்களுக்கிடையேயான ஈகோ மோதலை வைத்து எடுத்த 'பிரஸ்டீஜ்', கனவுக்குள்ள கனவு எது நிஜம்? எது பொய்? ஆடியன்ஸ் யோசிக்கும் படியே விரியும் க்ளைமாக்ஸ் என தமிழ் டப்பிங்கில் பார்த்தும் புரியாமல் முழித்த 'இன்ஷெப்ஷன்', வார்ம் ஹோல், டைமன்ஷனல் ரியாலிட்டி, கூப்பர் ஸ்டேஷன் என பாடம் நடத்திய 'இன்டர்ஸ்டெல்லர்' படங்கள் எல்லாம் வேற லெவல் க்ளாசிக்.

இந்த முறை தலைவர் கையில் எடுத்திருக்கும் கதை வரலாற்றுக் கதை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஃபிரான்ஸில் போரிட்டுக் கொண்டிருந்த ஜெர்மனி படையிடமிருந்து பிரிட்டனின் 338,226 வீரர்கள் தப்பிவந்த நிகழ்வு தான் டன்கிர்க் எவாக்குவேஷன். இதைப் பற்றிய படம் என்பதையும் தாண்டி இதை நோலன் எப்படி அளிக்கப் போகிறார் என்பதில் தான் அத்தனை பேருக்கும் ஆர்வம். ஏன் என்றால்.... கட்டுரையின் முதல் வரியைப் படியுங்கள். Happy Birthday Christopher Nolan!

பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement