சிலர் யூத் மாதிரி.. இவங்கள்லாம் யூத்துக்கே மாதிரி! #InternationalYouthDay | We must celebrate these EVER GREEN Youth!

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (12/08/2016)

கடைசி தொடர்பு:10:23 (12/08/2016)

சிலர் யூத் மாதிரி.. இவங்கள்லாம் யூத்துக்கே மாதிரி! #InternationalYouthDay

இன்று இன்டர்நேஷனல் யூத் டே. இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அரசுகள் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக கொண்டாடப்படும் நாள் இது. ஆர்ம்ஸ் புடைக்கும் டைட்டான ரவுண்ட் நெக் டிஷர்ட், பஞ்சுமிட்டாய் கலர் கூலர்ஸ், டிராக்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ சகிதம் நாங்களும் யூத் தானுங்கோ என வான்ட்டடாய் இந்த வண்டியில் ஏற சில அங்கிள்களும் அடம் பிடிப்பார்கள். தமிழ் சினிமாவுல, “நீங்கள்லாம் யூத் மாதிரிடா.. நாங்கள்லாம் யூத்துக்கே ’மாதிரி’டா” என்று கெத்து காட்டி எவர்க்ரீன் யூத்களாவே இருக்கும் சிலபேரைப் பாத்து கத்துக்கோங்க.

சார்லி:

இந்த யூத் லிஸ்ட்டில் முதலில் சினிமாவிற்கு வந்த ஸ்டார் இவர்தான். 1982-ல் கே.பாலசந்தரால் பொய்க்கால் குதிரை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டி வெளுப்பதால் எக்கச்சக்க வாய்ப்புகள். அதில் முக்கால்வாசி ரோல்கள் ஹீரோவின் நண்பனாக. புது வசந்தம், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என எக்கச்சக்க படங்களில் ஹீரோவுக்கு ப்ரெண்டாக யூத் வேடம். அதுவும் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு. லேட்டஸ்ட் சூப் பாய் ஜி.வி பிரகாஷ் வரைக்கும் அசராமல் கம்பெனி கொடுக்கும் அன்னாருக்கு வயது 56.

முரளி:

இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ள ஒரே ஹீரோ. தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மார்க்கண்டேயன். இன்றும் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்க தி பெஸ்ட் ஆள் யார் என்றால் யோசிக்காமல் இவர் பெயரை சொல்லிவிடலாம். 1984-ல் தன் 20-வது வயதில் நடிக்கத் தொடங்கியது முதல் கடைசிக்காலம் வரை இளமைத் துள்ளலோடுதான் இருந்தார். புது வசந்தம், இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க என வெரைட்டியாய் விருந்து படைத்தவர் இறந்துவிட்டார் என்பதை இன்றுவரை நம்பாத ரசிகர்கள் இருக்கிறார்கள். மிஸ் யூ சார்!

சின்னி ஜெயந்த்:

எவர்க்ரீன் யூத் சார்ட்டில் சார்லிக்கு டஃப் போட்டி கொடுத்தது இவர்தான். சார்லிக்கு பாலச்சந்தர் என்றால் சின்னி ஜெயந்திற்கு மகேந்திரன். 'கை கொடுக்கும் கை' படத்தில் 1984-ல் அறிமுகமான இவர் அதன்பின் இதயம், நடிகன், ஹரிச்சந்திரா, ஆணழகன், காதல் தேசம், ஸ்டார் என எக்கச்சக்க படங்களில் யூத் வேடத்தில் நடித்தார். மிமிக்ரி, ஜில்பான்ஜி ஸ்லாங் என வித்தியாசம் காட்டும் வித்தகர். மூன்று படங்களை இயக்கியும் இருக்கிறார். சார்லியைப் போலவே இவருக்கும் வயது 56 தான்.

வடிவேலு:

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். அறிமுகமானது ராஜ்கிரண் நடித்த 'என் ராசாவின் மனசிலே' படத்தில். சிகரம் தொட்டது ஷங்கரின் காதலன் படத்தில். அன்று முதல் இன்று வரை பார்ம் அவுட் ஆகாத, மவுசு குறையாத ஒரே நடிகர் வடிவேலுதான். சிங்கார வேலன், ஆணழகன், ராசைய்யா, காதல் தேசம், ரட்சகன், முதல்வன், தமிழ், பகவதி, ஆறு என ஏராளமான படங்களில் ஹீரோவுக்கு நண்பன் வேடம். சில படங்களில் ஹீரோவுக்கு கொஞ்சம் சீனியர். நடுவில் நான்கு ஆண்டுகள் காணாமல் போய் மொத்த தமிழ் ரசிகர்களையும் மிஸ் யூ என முணுமுணுக்க வைத்தவர் இப்போது பேக் டூ ஃபார்ம். வாங்க ஜி வாங்க ஜி!

தாமு:

இளைய தளபதியின் ஆரம்பக் காலம் முதல் அவர் நண்பராகவே நடித்து வருபவர். நாளைய தீர்ப்பில் தொடங்கிய இந்த நட்பு துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேர், பத்ரி, கில்லி, போக்கிரி என தொடர்கிறது. இது தவிர நினைவிருக்கும் வரை, அமர்க்களம், ஜோடி, சாக்லேட், உள்ளம் கொள்ளை போகுதே, ஜெமினி என ஏராளமான படங்களில் யூத் வேடம். மிகத் திறமையான மிமிக்ரி கலைஞரும் கூட. இப்போது நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளித்து வருகிறார்.

தோற்றத்தில் முதிர்ச்சியடையாமல் நடிப்பில் மட்டுமே இவர்கள் முதிர்ச்சி அடைந்திருந்தாலும் கிண்டல்களில் இருந்து தப்ப முடியவில்லை. அதற்கு பெஸ்ட் உதாரணம் 'தமிழ்ப்படம்'. தமிழ் சினிமாவில் எப்படி இவர்களால் மட்டும் யூத்தாகவே நடிக்க முடிகிறது என ஸ்பூப் செய்து எடுக்கப்பட்ட கதையில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர் மூவருமே பின்னிப் பெடலெடுத்திருப்பார்கள். என்னதான் சொல்லுங்கள். நமக்கெல்லாம் இரண்டு நாட்கள் தூக்கம் கெட்டாலே ஐந்து வயது கூடிய உணர்வு வருகிறது. 20 ஆண்டுகளாக யூத்தாக நடிப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம்தான்.

இதே மாதிரி உங்க மைண்ட்ல இருக்குற யூத் யார் யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்களேன்!!!

-நித்திஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close