Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..’ - உயிரே உனக்காக பாட்டெல்லாம் கேட்டதுண்டா? #Nostalgic

உயிரே உனக்காக1986ல் வெளிவந்த ஒரு படம். உயிரே உனக்காக. இலங்கை வானொலி ஆரம்பித்து, டேப் ரிகார்டர் இருந்த வீடுகளில் எல்லாம் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது இந்தப் படத்தின் பாடல்கள். மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில், கே.ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான படம் இது. மோகன், நதியா, சுஜாதா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். 

இசை. லக்‌ஷ்மிகாந்த் - பியாரிலால். பாலிவுட் இரட்டையர்கள். ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம். 

 

 

தேனூறும் ராகம்...

சுஜாதா பாட்டுப்பாடி  எல்லாரையும் உறங்க வைக்கும் பாடல். புல்லாங்குழல் இசையில் ஆரம்பிக்கும். ‘ஆரிராரோ.. ஆரிராரிரோ..’ வைத் தொடர்ந்து ‘தேனூறும் ராகம்.. நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே..’ வரிகளில் தபேலா இணையும். முதல் இடையிசை புல்லாங்குழல். அத்தனை அமைதியாக ஒலிக்கும். கூடவே Beat. சரணத்தின் மெட்டு, அல்டிமேட் தாலட்டுப் பாடலுக்கான ஒன்று.  இரண்டாம் இடையிசையில் வீணை. பாடிக்கொண்டே இருக்க மோகன், நதியா, மீசை முருகேஷ், வீட்டிலுள்ள குழந்தைகள் எல்லாரும் தூங்கிவிடுவார்கள். கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் உறக்கம் வரலாம். 

‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க...’

இயற்கையை நதியா ரசிக்கும் காட்சி. மென்மையான புல்லாங்குழல் ஒலிக்க காட்சிகள் விரியும். கீ போர்ட் இசை ஆரம்பிக்க, எஸ். ஜானகி ஆரம்பிப்பார். ‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க...’ கூ கூ குக்க்குக்கூ என்று குரலுக்கேற்ப கிளிகளும் ‘எசப்பாட்டு’ பாடும். ‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க... பொன்வானம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்..’ என்று பல்லவியை முடித்து இடையிசைக்குச் செல்லும்.  இடையிசையில் தபேலா கூடவே எல்லாம் வராது. ஒரு வயலின் ஆரம்பிக்க, தபேலாவும் ஆரம்பிக்கும்.  கூடவே பல வயலின்கள் வரும். ‘நானுமோர் தென்றல்தான்...’ என்று ஆரம்பித்து சரணம் தொடர.. சரணம் முடியும்போது வரும் கோரஸ் சுகமாக ஒலிக்கும்!  இரண்டாம் இடையிசையில் புல்லாங்குழல் ராஜ்யமும், கூடவே, வயலின் - தபேலாவின் விளையாட்டும் இருக்கும்.   

ஐ வாண்ட் டு பி எ ரிச் மேன்!

எஸ்.பி.பி எனும் ஆளுமையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல். மோகன் தன்னை ஒரு மிகப்பெரிய பணக்காரனாக  நினைத்து பாடும் பாடல். குரலிலும், மாடுலேஷனிலும் அந்தப் பணக்காரத்தன்மையை அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி.  அதே சமயம், எஸ்.ஜானகியின் குரல் ‘ஏன்.. ஏழையா இருந்தா என்ன.. நீ கூட இருந்தா போதும்’ என்பதைக் குரலிலேயே கொண்டு ஒலிக்கும். பணக்காரக் காட்சிகளுக்கு ஒரு இசையும், காட்சியில் இவர்களை சாதாரணமாய்க் காட்டும்போது ஒரு இசையும் கொடுத்திருப்பார்கள் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால்.  ’ரோஜாக்கள் பறித்தெடுத்து...’ என்று ஆர இரண்டாவது சரணத்தை மிஸ் பண்ணாமல் கேளுங்கள்.  

பல்லவி இல்லாமல் பாடுகிறேன்

 ‘லாலாலலா.’ என்று இதுவும் இந்திப் பாடல்களின் சாயலிலேயே இருக்கும் பாடல். எஸ்.பி.பியின் தேன்குரல் பாடலைக் கேட்கக் கேட்க பித்துப் பிடிக்க வைக்கும். இசை கொஞ்சம்தான் கூடவரும். முழுக்க முழுக்க எஸ்.பி.பி-தான். ‘உயிரே.. உனக்காக... உயிரே உனக்காக..’ என்று சங்கதிகள் பின்னியெடுப்பார் மனுஷன். கிடார் இசை, விசில் என்று வரும் சின்னப் பாடல். ரசிக்க வைக்கும். 

ஓடோடி விளையாடு...  

டிபிகல் ஹிந்திப்பாடல் கேட்பது போலவே இருக்கும். நடுவில் மீசை முருகேஷ் ‘தங்கச்சி தங்கச்சி நானும் இங்கே உன்கட்சி..’ என்று காமெடியாகப் பாடியபிறகு வரும் இசை.. ரொம்பவே நன்றாக இருக்கும். 

கவிதைகள் விரியும் விழியிலே

இந்தப் பாடலில் வீடியோ வடிவில் சவுண்ட் குவாலிட்டி சரியில்லாததால், கீழுள்ள வீடியோவை இணைத்திருக்கிறேன். துள்ளலான பாடல். மேலே உள்ள பாடல்கள் அளவுக்கு ஹிட் ஆகவில்லை.

 

  கையாலே உன்னைத் தொட்டால் போதும் என்றொரு பாடல். எஸ்.பி.பி, எஸ்.ஜானகி. இதுவும் அந்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. 

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்