Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபிகாவுடன் காதல்... காண்டம் விளம்பரம்... சர்ச்சைகளை வெற்றியாக்கிய ரன்வீர்சிங்! #HBDRanveerSingh

 

ரன்வீர் சீங்

‘பணக்கார வீட்டு பையனுக்கு சினிமா என்ட்ரியெல்லாம் கஷ்டமே இல்லப்பா... ரன்வீர் சிங்  அப்பா பெரிய கோடிஸ்வரர்.. 10 கோடி ரூபாயை கொடுத்து ரன்வீர ஹீரோ ஆக்கிட்டாரு..’ - பாலிவுட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த சலசலப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.  இதுக்கு பல முறை ரன்வீர் சிங் விளக்கம் சொன்னாலும் 7 வருடமா இன்னமும் ரன்வீர் மேல இந்த வதந்தி இருந்துகிட்டே தான் இருக்கு.

2010ல் ஹீரோவா அறிமுகம் ஆகும் ரன்வீரின் என்ட்ரி கடினமானதாகத்தான் இருந்தது. மும்பையில் வளர்ந்த ரன்வீர் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமிக்கவர். மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். படிப்பு முடிந்து திரும்பியதும் ரன்வீரின் சினிமா தேடல் துவங்குகிறது. ஆனால் அனைத்திலுமே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பாலிவுட் நண்பர்கள், தயாரிப்பாளர்கள் என  எல்லாரிடமும் வாய்ப்பு தேடி அலைகிறார் ரன்வீர். எல்லா பக்கமும் ‘நோ’தான் கேட்கிறது. இத்தனைக்கும்  அனில் கபூருக்கு தூரத்துச் சொந்தக்காரர் ரன்வீர்.

விரக்தியின் உச்சத்தில் விளம்பர நிறுவனத்தில் உதவி இயக்குநர் வேலைக்கு செல்கிறார். ஆனாலும் சினிமா ஆசை விடவில்லை. எல்லா ஆடிஷனிலும் ரன்வீரின் பெயர் இருக்கும் என்கிற அளவுக்கு ரன்வீர் சினிமாவை விரட்டினார். 2010ல் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நடத்திய ஆடிஷனில் இயக்குநரை ஈர்த்தார் ரன்வீர் சிங்.  `பேன்ட் பஜா பராத்’ படத்தில் பிட்டூ ஷர்மாவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ரன்வீரை அழைத்தாலும். அனைத்துக்கும் ஓகே சொல்லாமல் நிதானம் காட்டுகிறார். நடுவில் கொஞ்சம் சறுக்கல். ரன்வீர் இறங்குமுகம் காட்டுகிறார் என்று செய்திகள் வரத்துவங்கும் வேளையில்தான், ரன்வீர் தன் பார்முலாவை கையில் எடுக்கிறார். விளம்பரங்களில் தொடர்ச்சியாக நடித்து, தன்னை லைம்லைட்டில் வைத்துக்கொள்வதுதான் அது.

ரன்வீரின் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அதற்குக் கைகொடுக்கிறது. திடீரென்று அதிக விளம்பரங்களில் ஒப்பந்தமாகிறார். மக்களின் கவனம் தன்மீது இருந்து கொண்டே இருக்கும்படியான செயல்களை செய்கிறார். அதோடு தன்னைப் பற்றிய ஓப்பன் ஸ்டேட்மெண்டுகளை தட்டிவிட்டு மீடியாக்களின் கேமராக்களை தன் பக்கமே வைத்திருக்கிறார். அதில் ஒரு ஸ்டேட்மெண்ட் ‘நான் இதுவரை 26 பெண்களிடம் செக்ஸ் வைத்திருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஆழமான நட்பிலும் காதலிலும் நம்பிக்கை இருக்கிறது’ என்பது. பாலிவுட்டே பற்றிக்கொள்கிறது.

ரன்வீர் சிங்

அவருடைய விளம்பர ஸ்டண்ட்கள் அவரை வைரலின் உச்சத்திலேயே வைத்திருக்கிறன. அதற்காக அவர் வான்ட்டடாக சில விஷயங்களை செய்தார். எந்த பிரபலமும் காண்டம் விளம்பரத்தில் நடிக்க தயங்கிய நேரத்தில் தானாக முன் வந்து நடிக்கிறேன் என்று நடித்தார். இதற்கு ஸ்க்ரிப்ட், டைரக்‌ஷன் இரண்டுமே ரன்வீர்தான். இப்படிப்பட்ட லைம் லைட்டுகளுக்கு நடுவே அனுஷ்கா ஷர்மாவுடம் மோதல், சோனாக்‌ஷியுடன் காதல்  என  மீடியாக்களைத் தன்பின்னால ஓடவிட்டுக்கொண்டே இருந்தார். விரைவில் தீபிகாவுடன் டும்டும் என அறிவிப்பு. இதுவும் பரபரப்புக்காக என்று சிலர் கூறினாலும் தீபிகாவுடன் காதல் என்று உறுதியாக கூறியிருக்கிறார் ரன்வீர்.

இதெல்லாம் ரன்வீருக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை மாறாக  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய `கோலியோன் கீ ராஸ்லீலா ராம்-லீலா’ படத்தில் ரன்வீரை ஹீரோவாக்கியது. படமும் ஹிட். பாலிவுட்டில் கெத்து என்றால் 100 கோடி ரூபாய் கிளப்தான். ரன்வீரின் ‘பாஜிராவோ மஸ்தானி’ 350 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து கான்களைத் கவலையில் ஆழ்த்தியது.

வெற்று ஸ்டெண்ட்கள்மூலம் மட்டுமே ஒருத்தர் புகழேணி ஏற முடியுமா? முடியாது. ரன்வீரின் பலம், அவரது டெடிகேஷன். அவர் வெறும் பரபரப்பு கிளப்பும் ஆள்  அல்ல. ''பாஜிராவ் மஸ்தானி'' படத்துக்காக உடலை பழங்கால ராஜா போல் மாற்ற வேண்டும் என்று இயக்குநர் சொன்னதும், ஜிம்மில் மாத கணக்கில் கிடக்கிறார்.

சரி, ஹீரோக்கள் என்றாலே உடம்பை ஏற்றுவதும் இறக்குவதும் சாதாரணம் பாஸ் என்கிறீர்களா? ஆனால் அந்தப் படத்துக்காக இவர் இன்னொன்றும் செய்தார். அதுதான் இவரது டெடிகேஷனைப் பற்றி பாலிவுட்டைப் பேசவைத்தது.

அடிப்படையில், சாக்லேட் பாய் குரல் கொண்ட ரன்வீர், பாஜிராவ் மஸ்தானியில் கம்பீரமாக ராஜா போல பேசவேண்டும். Baritone என்பார்கள். கொஞ்சம் Base கலந்த குரல் வரவேண்டும். அதற்காக  21 நாள்கள் ஒரே அறையில் முடங்கி, அந்தக் கம்பீரக்குரலைக் கொண்டுவந்து பிரமிக்கவைதார். நடிப்பில்  கேட்கவே வேண்டாம்!  

ரன்வீர் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார். நடத்தைகள் சரியில்லை, விளம்பர உத்திகளால் லைம் லைட்டில் இருக்கிறார் என்று 1000 குறைகளை ரன்வீர் மேல் வைத்தாலும் ரன்வீர் நடிப்பை யாரும் குறை சொன்னதில்லை. அது தான் அவரை டாப்பில் வைத்திருக்கிறது. சர்ச்சைதான் தடை என்று கூறுவார்கள் ஆனால் ரன்வீரின் வெற்றியே சர்ச்சைதான். ஹாப்பி பர்த்டே ரன்வீர்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்