Published:Updated:

முரளி, இதயம் முரளி ஆன நாள்! #25YearsOfIdhayam

விகடன் விமர்சனக்குழு
முரளி, இதயம் முரளி ஆன நாள்! #25YearsOfIdhayam
முரளி, இதயம் முரளி ஆன நாள்! #25YearsOfIdhayam
முரளி, இதயம் முரளி ஆன நாள்! #25YearsOfIdhayam

நடிகர் முரளி ‘இதயம் முரளி’யாகி 25  வருடம் கம்ப்ளீட்டட். அதாங்க  தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இதயம் படம்  ரிலீஸாகி 25 வருடம் முடிகிறது. அப்போது அந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடி, அதேபோல கதையம்சம் கொண்டு புற்றீசல் போல் படங்கள் வந்தது தனிக்கதை. இருக்கட்டும் , காலையில் பிக்கப் மாலையில் ப்ரேக் அப் என்றாகிவிட்ட இன்றைய இணையக் காதலுடன் அந்தப் படத்தை ரீவைண்ட் செய்கையில் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்கிறது. 

* டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கலாம். இதயம் என்றாலே உங்கள் இதயத்தில் ஒலிக்கும் ஓசை என்ன? தட்ஸ் இட். அதே டுப் டுப் ட்ரம்ஸ் இசைதான். இசைஞானியும் இதற்கு விதிவிலக்கல்ல.  மென்மையாய் புல்லாங்குழல், வயலின், கிடார், பியானோ என்று தொடங்கும் டைட்டில் இசை சட்டென்று டுப் டுப்புக்கு மாறும். நாம் பார்ப்பது இதயம் சம்பந்தப்பட்ட படமாம். ஞாபகப்படுத்துகிறதாம் இசை. ராஜா நீங்களுமா?

* நல்லா இருக்கிற ஹீரோவை  வில்லனாக்கிப் பின் லவ் பண்றது 2016 ஸ்டைல். ஆனா பாவம் , ஹீரோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவர்னு நிரூபிக்க டைரக்டர் படாதபாடுபட்டிருப்பார். ஹீரோயின் தலையிலிருந்து பூ கீழே விழ, அதை ஹீரோ எடுத்துக் கொடுத்தாலே லவ் வந்திடணும்னு எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பான ஜட்ஜ்மென்ட் சார்.
  
* ஹீரோ காதலைச் சொல்ல வர்றப்போல்லாம் ஏதாவது இடையூறு வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் க்ராஸ் பண்ணிட்டுப் போகாம அப்படியே அதே இடத்தில் ஃப்ரீஸ் ஆகி நின்னு குறுந்தொகையிலிருந்தோ பிரபல கவிதையிலிருந்தோ சில வரிகள் உருவி அதை ஹீரோவின் மைண்ட் வாய்ஸில் ஒலிக்கவிட்டு டைரக்டர் ரசிகர்களைக் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார்.

* ஓப்பனிங் சாங். அதுவும் ஹீரோவுக்கு இல்லை. அப்படி இருந்தும்  அந்த சாங்குக்கே ஒரு இன்ட்ரோ கொடுக்கிறதெல்லாம் அடேங்கப்பா அதகளம் இயக்குநரே.

* ஹீரோயின் அக்கம்பக்கம் ஒழுங்கா பார்க்காம வந்து ஹீரோ நெற்றியில் முட்டியதும் ஹீரோவுக்கு ஹார்மோன் கலாட்டா ஆரம்பிப்பதுகூட ஓகே. யார், என்ன, ஏதுன்னே தெரியாம  ஹீரோயின் நடந்துபோற பாதையின் செருப்பு அச்சில் தன் காலையும் பதித்து ஹீரோ நடக்க ஆரம்பிப்பது... எப்படி சார் இப்படியெல்லாம்?

*  காதல் முரளி, படத்தில் காய்ச்சல் வந்த முரளி மாதிரிதான் பேசுவார். நடப்பார். மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்  மெடிக்கல் காலேஜ் பேஷன்ட் மாதிரியே இருப்பது மெடிக்கல் மிராக்கிள் ப்ரோ.

* டூயல் ரோலுக்கு வித்தியாசம் காட்ட கன்னத்தில் மரு ஒட்டுற மாதிரியே டைரக்டர் இதில் பக்கா வித்தியாசம் காட்டியிருப்பார். ஆனால் டூயல் ரோலுக்கு இல்லை. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்... கா. மு முரளி தலையை வகிடு எடுத்து சீவி இருப்பார். காதல் வந்ததும் வகிடுத் தலையை கலைத்துவிட்டு மேல்நோக்கி சீவி இருப்பார். லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு டோய்.

*   எவ்வளவு ஈவ் டீஸிங் பார்த்திருப்போம். ஆனா இந்தப் படத்தில்தாங்க ஈவ் டான்ஸிங் காண்பிச்சார் டைரக்டர். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஹீரோயினை ஒரு ரெளடிக் கும்பல் கிண்டல் செய்யும். விலகி நடக்கும் ஹீரோயினை வழி மறித்து பன்ச் பேசி கையைப் பிடித்து முறுக்கி அந்தச் சமயத்தில் ஹீரோ என்ட்ரியாகி அடித்து உதைத்து... பாஸ் பாஸ்... இது சுத்தமான காதல் கதை பாஸ். ஸோ நாம நினைக்கிற மாதிரி நடக்க கூடாதுங்கிறதில் டைரக்டர் ஸ்ட்ராங்கா இருந்திருக்கார். கேலி பேசிய கும்பல் ' ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ' என்று செம பாட்டுக்கு செம டான்ஸ் ஆட, ஹீரோயின் நடக்க ஹீரோ தனியா நின்னு பழத்தைப் பிழிவார். நிஜமாவே  ஆரஞ்சுப் பழத்தைப் பிழிவார் பாஸ். கேட்டால், பிழியணும்தான்டா நெனச்சேன்பார். அதான் பிழிஞ்சிட்டீங்களே. அப்புறம் என்ன?

* ஹீரோயின் காலையோ அவர் என்ன பிராண்ட் செருப்பு போடுறார்னு பார்க்கவோ ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனா இந்தப் படத்து ஹீரோ என்ன காரியம் பண்ணுவார்னா 50 ரூபாய்க்கு ஒரு ரூபாய் காயின் சில்லறையா மாற்றி சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் ட்ராவல் பண்ணுவார். என்ன டிசைன் இதுனு கேட்கிறீங்களா? அப்போதானே கீழே குனியும்போது எல்லா சில்லறையும் கொட்டும். அதை எடுக்கிற சாக்கில் காலையும் செருப்பையும் பார்க்கலாம். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிந்திச்சிருக்காங்கப்பா.

* பேரும் தெரியாது. ஊரும் தெரியாது. ஏன் ஆம்பளையா பொம்பளையான்னே தெரியாது.  இப்போ லவ் பண்ற காலத்துல இருக்கோம். ஆனா 25 வருஷத்துக்கு முன்னாடி லவ்வை லெட்டர்ல எழுதி ஒரே ஒரு ரோஜாப்பூவோட சேர்த்து வெச்சு ஹீரோயின்கிட்ட கொடுக்க பிள்ளையார் கோயிலுக்குப் போய் அர்ச்சனையெல்லாம் பண்ணுவார் ஹீரோ. 'வெள்ளப்பூவே வந்துருக்கு. போற காரியம் சக்சஸ்' னு பூசாரி வாழ்த்தி வழியனுப்பி வைப்பார். ஆனா முரளி நடந்துபோய் லெட்டர் தர்றதுக்கு முன்னாடியே கார்ல ஒருத்தர் ஹீரோயினை கூட்டிட்டுப் போய்டுவார். அப்புறமென்ன  சோகப் பாட்டு பாடுவார் ஹீரோ. ஆனா படம் இன்னும் முடியலையே ப்ரோ.

* ராஜான்னு பேர் ஊருக்கு 100, தெருவுக்கு 10 இருக்கும். ஆனா ஹீரோயின் ராஜான்னு ஹீரோவைப் பார்த்துக் கூப்பிட்டதும் ' நீ அழைத்தபின்புதான் தெரிந்தது. என் பெயர் இத்தனை அழகா என்று' ஸ்டாப் பளாக்கில் கவிதை சொல்றதெல்லாம் நாயமாரே.

* லவ் ஃபெயிலியரானா இப்போ என்ன பண்றாங்க ஹீரோ? சரக்கடிச்சிட்டு 'அடியே அடியே இவளே' னு கண்டமேனிக்கி திட்டிப் பாட்டுப்பாடி நடுரோட்ல வெறித்தனமா ஆடுறாங்க. இதயம் ஹீரோ தாங்க முடியாத சோகத்தில் அழறார். ஏன்டா அழறேன்னு நண்பன் கேட்டா, நடந்த கதையைச் சொல்லணுமா இல்லையா... ஆனா. ரொம்ப கூலா 'இதயத்தில் இடி கண்ணில் மழை' னு கவிதை சொல்றதெல்லாம் அடுக்கவே அடுக்காது ஜி.

*  ஒரு பக்க, லவ் லெட்டர் கொடுக்க யோசிச்ச ஹீரோ ,தான் நான்கு வருசமா எழுதின டைரியை எல்லாத்தையும் கொடுத்து ஹீரோயினைப் படிச்சுப் பார்த்து நல்ல பதிலா சொல்லச் சொல்வார். இதுதானாய்யா லவ் ப்ரபோஸ் பண்ற டக்கு. அதெல்லாம் படிச்சுப் பார்த்து வந்து பதில் சொல்றதுக்குள்ள அந்தம்மாவுக்கு 60 வயசாகிடும். அப்போ இதயம் மட்டும் இல்ல. ஆல் பார்ட்ஸும் டேமேஜிங்லதான் இருக்கும். அந்த மாதிரி சமூகத்திலையா வாழ்ந்தோம்?

* படம் ஆரம்பிச்சு இரண்டு மணி நேரம் கழிச்சுதான் முரளிக்கு இதயத்தில் ப்ரச்னைனே தெரியவரும். ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இதயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கோளாறுகள் இருக்கிற மாதிரியேதான் இருப்பார். கைநடுக்கம், கோர்வையா பேச முடியாதது, ஹீரோயின் பார்வையையே எதிர்கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் தலையைக் குனிவது என்று வித்தியாசமான வியாதிகளை டைரக்டரே கவனிக்கவில்லை போல.

* இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அவ்வளவு பெரிய டிசீஸுக்கு ஹீரோயினின் ஒற்றைத்துளி கன்ணீரே மருந்துனு டைரக்டர் முடித்திருக்கும் க்ளைமாக்ஸ் ஆசம் ஆசம். எவ்ளோ பெரிய வியாதி. எவ்ளோ சின்ன மருந்து.

* கடைசியா ஒண்ணே ஒண்ணுதான் பாஸ். 25 வருசமா விடை தெரியாம அலைஞ்சிக்கிட்டுருக்கேன். முரளிக்குக் காதல் தோல்வி, காதலின் விரகத்தில்தான் படம் முழுவதும் இருக்கிறார், ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை விரும்பினாலும் அவரிடம் காதலை வெளிப்படுத்த முடியாத ஏக்கமே அவரை நோய்மைக்குத் தள்ளுகிறது. ஆனால் படம் முழுவதும் ஒரு ஃப்ரேமில்கூட அவர் தாடியுடன் திரிவதுபோல் இல்லை. ஃபுல் க்ளீன் ஷேவிங்கில்தான் இருக்கிறார். அது எப்படி பாஸ் அவ்ளோ துக்கத்திலும் உங்களால் பளபள கன்னத்தோட இருக்க முடிஞ்சுது?

- கணேசகுமாரன்