Published:Updated:

`பொன்மகள் வந்தாள்' ரிலீஸ் டேட் என்ன தெரியுமா?! #VikatanExclusive

பொன்மகள் வந்தாள் #OTT ரிலீஸ்
பொன்மகள் வந்தாள் #OTT ரிலீஸ்

ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததால், தியேட்டர் ஓனர்களின் எதிர்ப்புக் குரலுக்குப் பின் தங்களது முடிவிலிருந்து தயாரிப்பாளர் பின்வாங்கிவிட்டார் என்கிற சந்தேகம் எழுந்த நிலையில் 'பொன்மகள் வந்தாள்' ரிலீஸ் தேதி நமக்குக் கிடைத்திருக்கிறது.

கொரோனாவால் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பது, தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டைக் குறைப்பது, தியேட்டரில் ரிலீஸாக இருந்த படங்கள் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸாக இருப்பது எனப் பல மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

ஜோதிகாவின் `பொன்மகள்' மட்டுமல்ல... இந்த ஹீரோக்களின் படங்களும் OTT  ரிலீஸுக்கு வெயிட்டிங்!

கொரோனா அச்சத்தால் மார்ச் மூன்றாவது வாரத்திலேயே திரையரங்குகள் மூடப்பட்டதால், மார்ச் நான்காவது வாரம் ரிலீஸாக இருந்த ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படம் ரிலீஸாகவில்லை. நிலைமை சரியாகப் பல மாதங்கள் ஆகலாம் என்பதால், `பொன்மகள் வந்தாள்’ படத்தை ஓடிடியில் நேரடி ரிலீஸுக்காகக் கொடுத்துவிட்டார்கள் என்கிற செய்தி வந்த பிறகு, தியேட்டர் உரிமையாளர்கள் பக்கம் இருந்து பல எதிர்ப்புக் குரல்கள் வந்தன.

மே மாதம் அமேஸான் தளத்தில் படம் வெளியாகும் என `பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் சொல்லியிருந்தார். ஆனால், இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததால், தியேட்டர் ஓனர்களின் எதிர்ப்பு குரலுக்குப் பின் தங்களது முடிவிலிருந்து தயாரிப்பாளர் பின்வாங்கிவிட்டாரா என்கிற சந்தேகமும் பரவலாக எழுந்தது.

ஜோதிகா
ஜோதிகா
பொன் மகள் வந்தாள்

ஆனால், தற்போது வந்திருக்கும் தகவலின்படி, `பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸான் பிரைமில், வரும் மே 29-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம்.

அடுத்த கட்டுரைக்கு